புதன்கிழமை, ஏப்ரல் 29
Shadow

Tag: ஒமைக்ரான் வைரஸ்

குஜராத்தில் புதிய வகை ஒமைக்ரான் வைரஸ் அறிகுறி!

குஜராத்தில் புதிய வகை ஒமைக்ரான் வைரஸ் அறிகுறி!

HOME SLIDER, NEWS, செய்திகள்
கொரோனா வைரஸ்  அடிக்கடி உருமாற்றம் பெற்று புதிய வகையாக மாறி பரவி வருகிறது. இதுவரை காமா, பீட்டா, டெல்டா, டெல்டா பிளஸ், ஒமைக்ரான் என்று பல்வேறு வடிவங்களை கொரோனா வைரஸ் எடுத்து விட்டது. ஒமைக்ரான் வைரசில் இருந்து 4 வகையான துணை உருமாற்றங்கள் நிகழ்ந்தன. அதில் பிஏ1, பிஏ.2 ஆகிய 2 வகை வைரசுகள் தற்போது உலகம் முழுக்க பரவி உள்ளன. இந்த நிலையில் பிஏ.1, பிஏ.2 ஆகிய 2 வைரசுகளும் கலந்து எக்ஸ்-இ என்ற புதிய வகை கொரோனா வைரசை தோற்றுவித்துள்ளன. இந்த எக்ஸ்-இ வைரஸ் முந்தைய கொரோனா வைரசுகளை விட 10 மடங்கு அதிவேகமாக பரவும் ஆற்றல் கொண்டது. இது ஒருவரை தாக்கினால் உடலில் எத்தகைய பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பது இதுவரை உறுதியாகவில்லை. என்றாலும் இந்த வைரஸ் பெரிய பாதிப்பை ஏற்படுத்தாது என்று பெரும்பலான நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். உலகம் முழுக்க சுமார் 600 பேருக்கு எக்ஸ்-இ கொரோனா வைரஸ் இருப்பது உறுதிப்படுத்...
எளிதாக கருதப்பட்ட ஒமைக்ரான் 5 லட்சம் பேரை பலிவாங்கியுள்ளது: ‘WHO’ எச்சரிக்கை!

எளிதாக கருதப்பட்ட ஒமைக்ரான் 5 லட்சம் பேரை பலிவாங்கியுள்ளது: ‘WHO’ எச்சரிக்கை!

HOME SLIDER, NEWS, உலக செய்திகள், செய்திகள்
கொரோனா தொற்றின் மாறுபாடாக கருதப்படும் ஒமைக்ரான் கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் தென் ஆப்பரிக்காவில் இருந்து முதல்முறையாக பரவத் தொடங்கியது. இது மற்ற நாடுகளுக்கும் வேகமாக பரவி வருகிறது. ஆனால், ஒமைக்ரானால் பெரிதாக பாதிப்பு இல்லை என்றே கருதி வந்த நிலையில், உலகளவில் கடந்த நவம்பர் மாதம் முதல் இதுவரை சுமார் 5 லட்சம் பேர் உயிரிழந்துள்ளதாக உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து உலக சுகாதார மையத்தின் மேலாளர் அப்டி மஹமுட் கூறியதாவது:- கொரோனாவின் மாறுபாடான ஒமைக்ரான் தொற்று அறிவிக்கப்பட்டது முதல், இதுவரை உலகளவில் 130 மில்லியன் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சுமார் 5 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். இது கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இறந்தவர்களின் எண்ணிக்கையில் அரை மில்லியன் இறப்புகள் பதிவாகியுள்ளது. இது மிகவும் அபாயகரமான விஷயம். கொரோனாவின் மேலாதிக்க மாறுபாடாக கருதப்பட்ட டெல்டா தொற்ற...
கொரோனா 3-ம் அலை பாதிப்பு ஒரே வாரத்தில் 45 சதவீதம் குறைந்தது!

கொரோனா 3-ம் அலை பாதிப்பு ஒரே வாரத்தில் 45 சதவீதம் குறைந்தது!

HOME SLIDER, NEWS, செய்திகள்
கொரோனாவின் உருமாறிய வடிவமான ஒமைக்ரான் வைரஸ் பரவலால் கடந்த டிசம்பர் இறுதியில் இருந்து இந்தியாவில் தினசரி பாதிப்பு மீண்டும் உயரத் தொடங்கியது. தினசரி பாதிப்பு 6 ஆயிரத்தில் இருந்து நாள்தோறும் படுவேகமாக உயர்ந்தது. முதல் 2 அலைகளை விட 6 மடங்கு வேகத்தில் தினசரி பாதிப்பு அதிகரித்ததால் சுகாதாரத்துறையினர் அதிர்ச்சி அடைந்தனர். அதே நேரம் நாடு முழுவதும் மக்களுக்கு 160 கோடி டோசுக்கும் மேல் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டிருந்ததால் உயிரிழப்புகள் குறைவாகவே இருந்தது. மேலும் நோயின் தீவிரமும் குறைவாகவே காணப்பட்டதால் தொற்று பாதிப்புக்கு உள்ளானவர்களில் பெரும்பாலானோர் வீட்டு தனிமையிலேயே குணம் அடைந்தனர். இதனால் 3-ம் அலை குறுகிய காலத்தில் உச்சம் அடைந்தது. கடந்த மாதம் 21-ந்தேதி 3.47 லட்சம் பேர் பாதிப்புக்குள்ளானதே இந்த அலையின் உச்சமாக சுகாதாரத்துறையினர் அறிவித்தனர். அதன் பிறகு தினசரி பாதிப்பு நாள்தோறு...
சிங்கப்பூரில் ஒமைக்ரான் வைரஸ் பரவல் விரைவில் உச்சத்தை தொடும்- நிபுணர்கள் எச்சரிக்கை!

சிங்கப்பூரில் ஒமைக்ரான் வைரஸ் பரவல் விரைவில் உச்சத்தை தொடும்- நிபுணர்கள் எச்சரிக்கை!

HOME SLIDER, NEWS, செய்திகள்
சிங்கப்பூரில் ஒமைக்ரான் வைரஸ் பரவல் விரைவில் உச்சத்தை தொடும்- நிபுணர்கள் எச்சரிக்கை! சிங்கப்பூரில் தற்போது ஒமைக்ரான் வைரஸ் பரவி வருகிறது. கடந்த சனிக்கிழமை நிலவரப்படி அங்கு 692 பேருக்கு ஒமைக்ரான் வகை வைரஸ் உறுதி செய்யப்பட்டது. இதில் 541 பேருக்கு உள்நாட்டிலேயே ஒமைக்ரான் வைரஸ் பரவியதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்து உள்ளது. இந்தநிலையில் கடந்த ஆண்டு தென் ஆப்பிரிக்காவில் பரவியதை போல சிங்கப்பூரில் ஒமைக்ரான் வகை தொற்று பரவல் அதிகரிக்க கூடும் என்று தொற்று நோயியல் நிபுணர் அலெக்ஸ் குக் எச்சரிக்கை விடுத்து உள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:- சிங்கப்பூரில் தினசரி ஒமைக்ரான் பாதிப்பு 10 ஆயிரத்தில் இருந்து 15 ஆயிரம் வரை விரைவில் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. சிங்கப்பூரில் எந்த வகையான கட்டுப்பாடுகள் கடைப்பிடிக்கப்படுகின்றன என்பதை பொறுத்து ஒமைக்ரான் அலையின் தீவிரம் இருக்கும். இவ்வாறு அவர் கூறினார். ...
பிப்ரவரி மாதத்திற்குள் இந்தியாவில் ஒமைக்ரான் பாதிப்பு உச்சத்தை எட்டும் – அமெரிக்க சுகாதார ஆய்வாளர் தகவல்!

பிப்ரவரி மாதத்திற்குள் இந்தியாவில் ஒமைக்ரான் பாதிப்பு உச்சத்தை எட்டும் – அமெரிக்க சுகாதார ஆய்வாளர் தகவல்!

HOME SLIDER, NEWS, செய்திகள்
பிப்ரவரி மாதத்திற்குள் இந்தியாவில் ஒமைக்ரான் பாதிப்பு உச்சத்தை எட்டும் - அமெரிக்க சுகாதார ஆய்வாளர் தகவல்! டெல்லி, கர்நாடகா, ராஜஸ்தான், கேரளாவைத் தொடர்ந்து மகாராஷ்டிராவில் ஒமைக்ரான் வைரஸ் பாதிப்பு அதிக அளவில் பதிவாகி உள்ளது. இதையடுத்து பல்வேறு மாநிலங்கள் தொற்று பரவலைத் தடுக்க கட்டுப்பாடுகள் மற்றும் இரவு ஊரடங்கு உத்தரவை  அமல்படுத்தி உள்ளன. இந்நிலையில் அமெரிக்காவின் சுகாதார அளவீடுகள் மற்றும் மதிப்பீட்டு நிறுவன தலைவர் டாக்டர் கிறிஸ்டோபர் முர்ரே,  இந்தியாவில் ஒமைக்ரான் பாதிப்பு குறித்து புதிய தகவல்களை வெளியிட்டுள்ளார். அதன்படி:  இந்தியாவில் ஒமைக்ரான் அலை தொடங்கியுள்ளது.  கடந்த ஆண்டு டெல்டா வைரஸ் அலையின் தாக்கத்தை விட இதில் அதிகம் பேர் பாதிக்கப்படுவார்கள்.  ஒமைன்ரான் வைரஸால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை  அடுத்த மாதம் சுமார் ஐந்து லட்சம் வரை உயரக்கூடும். ஒமைன்ரான் வைரஸின் வீரியம் குறைவானது....
தமிழகத்தில் கொரோனா 3-வது அலை தொடங்கி விட்டது- அமைச்சர் தகவல்!

தமிழகத்தில் கொரோனா 3-வது அலை தொடங்கி விட்டது- அமைச்சர் தகவல்!

HOME SLIDER, NEWS, செய்திகள்
தமிழகத்தில் கொரோனா 3-வது அலை தொடங்கி விட்டது- அமைச்சர் தகவல்! சென்னை சைதாப்பேட்டையில் மெகா தடுப்பூசி முகாமை மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பார்வையிட்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- தமிழகத்தில் 86.22 சதவீதம் பேர் முதல் தவணை தடுப்பூசி போட்டுள்ளார்கள். 58.82 சதவீதம் பேர் 2-வது தவணை தடுப்பூசி போட்டுள்ளார்கள். சென்னையை பொருத்த வரை 5 லட்சம் பேர் இன்னும் முதல் தவணை தடுப்பூசியே போட்டுக்கொள்ள வில்லை. அனைவருக்கும் முதல் தவணை தடுப்பூசியை விரைந்து போடுவதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. கொரோனா 3-வது அலை தொடங்கிவிட்டது. உலக அளவில் வேகமாக பரவிக்கொண்டு இருக்கிறது. கொரோனாவின் உருமாற்ற வைரஸ்களான டெல்டாவும், ஒமைக்ரானும் சேர்ந்து இந்த அலையில் வேகமாக தாக்குகிறது. உலக அளவில் கடந்த ஏப்ரல் மாதம் ஒரேநாள் தொற்று 29 லட்சத்து 4 ஆயிரமாக இருந்தது. அதுதான் உ...
தமிழகத்தில் சமூக பரவலாக மாறிவிட்டதா ஒமைக்ரான்?- சுகாதாரத்துறை செயலாளர் விளக்கம்!

தமிழகத்தில் சமூக பரவலாக மாறிவிட்டதா ஒமைக்ரான்?- சுகாதாரத்துறை செயலாளர் விளக்கம்!

HOME SLIDER, NEWS, செய்திகள்
தமிழகத்தில் சமூக பரவலாக மாறிவிட்டதா ஒமைக்ரான்?- சுகாதாரத்துறை செயலாளர் விளக்கம்! தமிழகத்தில் ஒமைக்ரான் வைரஸ் பரவல் சமூக பரவலாக மாறி வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தென் ஆப்பிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்ட ஒமைக்ரான் வைரஸ் 12 நாடுகளில் மட்டுமே மிக அதிகமாக இருந்தது. எனவே அந்த நாடுகள் ஆபத்தான நாடுகள் என்றும் மற்ற நாடுகள் ஆபத்து குறைந்த நாடுகள் என்றும் வகைப்படுத்தப்பட்டன. ஆபத்து மிகுந்த நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு மட்டும் 100 சதவீதம் கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. ஆனால் மற்ற நாடுகளில் இருந்து வருபவர்களுக்கு ரேண்டம் முறையில் 10 சதவீதம் பேருக்கு பரிசோதனை செய்யப்படுகிறது. இதை 100 சதவீதமாக ஆக்க வேண்டும் என்று தமிழக அரசு மத்திய அரசிடம் கோரிக்கை வைத்துள்ளது. அதற்கான அனுமதி இன்னும் வரவில்லை. அதற்குள் கடந்த சில நாட்களாக சமூக பரவலாக மாறி உள்ளது. சென்னை அரசு ஆஸ்பத்திரியில் நோய...