பணக்காரர்களுக்கு கடன் தள்ளுபடி… மக்களுக்கு மோடி அரசின் பச்சை துரோகம் – சீமான்
பணக்காரர்களுக்கு வங்கி கடனை தள்ளுபடி செய்து ஏழை மக்களுக்கு பச்சை துரோகம் செய்யும் மோடி அரசு என ஆவோச அறிக்கை வெளியிட்டார் சீமான்.
50 இந்திய பணக்கார தொழிலதிபர்கள் வாங்கிய வங்கி கடன் தொகையான ரூ.68,607 கோடி கடன் கணக்கு நீக்கப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.
ஆனால் கணக்கியல் ரீதியான கடனை நீக்குவது என்பது முழுவதுமாக கடனை நீக்குவது ஆகாது என்றும், கணக்கில் நீக்கப்பட்டிருந்தாலும் அவர்களிடமிருந்து கடன் தொகையை பெற சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் கூறப்படுகிறது.
இதற்கு கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ள நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் “கொரோனாவினால் நாட்டின் பொருளாதாரம் மிகவும் பாதிப்படைந்துள்ளது. ஆனால் அதை மீட்டெடுக்கும் நடவடிக்கைகளை விட்டு விட்டு பெருமுதலாளிகளின் கடனை நீக்குவது மோசமான செயல். மத்திய அரசு, முதலாளிகளின் நலனுக்கென்று முழுமூச்சாய்...

