டிரம்ப் பதிவை நீக்கி கருப்பின வாலிபர் கொலைக்கு கண்டனம் தெரிவித்து கருப்பாக மாறிய டிவிட்டர் குருவி!
அமெரிக்காவில் கருப்பின வாலிபர் கொலைக்கு கண்டனம் தெரிவித்து கருப்பாக மாறிய டிவிட்டர் குருவி!
அமெரிக்காவில் உள்ள மின்னபொலிஸ் என்ற நகரில் கடந்த 25ஆம் தேதி கருப்பின வாலிபர் ஒருவரை விசாரணை என்ற பெயரில் போலீசார் அவரை கீழே தள்ளி முழங்காலால் கழுத்தில் அழுத்தி நெறித்து கொலை செய்தார்.
அது சம்மந்தமான வீடியோ உலகெங்கும் பரவி கடும் அதிர்ச்சியையும், கண்டனங்களையும் பெற்றது.
இதனையடுத்து கருப்பின வாலிபரை கொலை செய்த போலீஸ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து போராட்டங்கள் வெடித்தன. நாடு முழுவதும் நடந்து வரும் இந்த போராட்டத்தை கட்டுப்படுத்த போலீசாருடன் ராணுவத்தினரும் ஈடுபட்டு வருகின்றனர் .
இதையடுத்து கருப்பின இளைஞரை கொலை செய்த போலீசாரை கைது செய்து அவர் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. இந்நிலையில் அந்த போலீஸ்காரரின் மனைவி அவருக்கு விவாகரத்து நோட்...
