செவ்வாய்க்கிழமை, ஏப்ரல் 28
Shadow

Tag: கொரானா பரவல் தீவிரம்

அதிகரிக்கும் கொரானா பாதிப்புகளால் மருத்துவ நிபுணர்களுடன் முதல்வர் மீண்டும் ஆலோசனை நடத்துகிறார்!

அதிகரிக்கும் கொரானா பாதிப்புகளால் மருத்துவ நிபுணர்களுடன் முதல்வர் மீண்டும் ஆலோசனை நடத்துகிறார்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
    மருத்துவ நிபுணர்களுடன் முதல்வர் எடப்பாடிபழனிச்சாமி மீண்டும் ஆலோசனை நடத்துகிறார்! இந்திய அளவில் மகாராஷ்டிரா மாநிலத்துக்கு அடுத்ததாக தமிழகத்தில் தான் கொரானா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இங்கு மட்டும் கொரானாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 40,698 ஆக அதிகரித்துள்ளது. கொரானாவுக்கு 22,047 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கொரானாவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 367-ஆக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக சென்னையில் மட்டும் கொரானாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 28,924 ஆக அதிகரித்துள்ளது. இந்நிலையில் கொரானா தொற்று அதிகரித்து வரும் நிலையில் மருத்துவ நிபுணர்கள் குழுவுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை மறுநாள் ஆலோசனை நடத்த உள்ளார். சென்னை தலைமை செயலகத்தில் திங்கட்கிழமை காலை 11 மணிக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மருத்துவ நிபுணர்கள் குழுவ...
கொரானாவை ஒழிக்க டெல்லிக்கு சீல் – முதல்வர் முடிவு

கொரானாவை ஒழிக்க டெல்லிக்கு சீல் – முதல்வர் முடிவு

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  கொரானாவை ஒழிக்க டெல்லிக்கு சீல் - முதல்வர் முடிவு கொரானாவை தடுக்க ,5ம் கட்ட ஊரடங்கு போடப்பட்ட ஜூன் 1-ம் தேதி முதல் 30ம் தேதி வரை படிப்படியாக இயல்பு நிலையை கொண்டு வருவதற்கான அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. இந்நிலையில், ஊரடங்கு தளர்வுகள் குறித்து டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பேசியதாவது:- டெல்லியில் இப்போது வரை அனுமதிக்கப்பட்ட வற்றைத் தவிர, முடிதிருத்தும் கடைகள், சலூன்கள் மற்றும் அனைத்து கடைகளையும் திறக்கலாம். ஆனால் அழகு நிலையங்கள் தொடர்ந்து மூடப்பட்டிருக்கும். ஆட்டோ மற்றும் பிற வாகனங்களில் பயணம் செய்வோரின் எண்ணிக்கை தொடர்பான கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ளன. டெல்லியின் எல்லைகள் ஒரு வாரம் மூடப்பட்டு சீல் வைக்கப்படும். அனுமதி அட்டை உள்ளவர்கள் மற்றும் அத்தியாவசிய சேவைகளில் ஈடுபடுவோர் டெல்லிக்குள் நுழைய அனுமதிக்கப்படுவார்கள். எல்லைகளை மீண்டும் திறப்பது தொடர்பாக ப...
முழு ஊரடங்கு தளர்வுக்கு நோ சான்ஸ்!

முழு ஊரடங்கு தளர்வுக்கு நோ சான்ஸ்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
    கொரானா பரவலை தடுக்க நடைமுறையில் உள்ள ஊரடங்கு வரும் மே 3ம் தேதி முடிவுக்கு வருகிறது. அதே நேரம் கொரானா பரவலின் வேகம் குறையவில்லை. இந்த சூழலில் 3ம் தேதிக்கு பின் ஊரடங்கை தளர்த்துவதா என்பது குறித்து சென்னையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியுடன் மருத்துவ குழுவினர் இன்று ஆலோசனை நடத்தினர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மருத்துவ நிபுணர் குழுவின் பிரதீப் கவுர் கூறியதாவது:- தமிழகத்தில் நடைமுறையில் உள்ள ஊரடங்கை முழுமையாக தளர்த்த இப்போதைக்கு வாய்ப்பில்லை; படிப்படியாகத்தான் தளர்த்த முடியும். அதற்கான ஆலோசனை வழங்கியுள்ளோம். கொரோனா வைரஸ் உடனடியாக கட்டுக்குள் வராது. கொரோனா தொற்று நீண்ட நாட்களாக நம்முடன் இருக்கும் என்பதால் நமது வாழ்க்கை முறையே மாற்ற வேண்டும். பொது இடங்களில் அதிக கூட்டம் கூடுவதை அனுமதிக்கக் கூடாது. தனிமனித இடைவெளியை கட்டாயம் பின்பற்ற வேண்டும். முகக் கவசம...
மீண்டும் ஊரடங்கு நீடிப்பு!? முதல்வர்களுடன் பிரதமர் நாளை ஆலோசனை!!

மீண்டும் ஊரடங்கு நீடிப்பு!? முதல்வர்களுடன் பிரதமர் நாளை ஆலோசனை!!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
      மீண்டும் ஊரடங்கு நீடிப்பு! முதல்வர்களுடன் பிரதமர் நாளை ஆலோசனை!! கொரானா பரவல் காரணமாக நாடு முழுவதும் கடந்த மாதம் 24ம் தேதியில் இருந்து ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு நடைமுறையில் உள்ளது. இந்த ஊரடங்கு வரும் மே 3ம் தேதி முடிவுக்கு வர இருக்கிறது. ஆனால் கொரானா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்த படியே செல்வதால் ஊரடங்கை முடிவுக்கு கொண்டு வருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அதே நேரம் கொரானா பாதிப்பை முற்றிலும் கட்டுப்படுத்த பல மாநில அரசுகள் ஊரடங்கை நீடிக்க முடிவு செய்து உள்ளது. பிரதமர் மோடி மீண்டும் அனைத்து மாநில முதல்வர்களுடன் வீடியோ கான்பரன்ஸ் மூலமாக நாளை ஆலோசனை நடத்த இருக்கிறார். இந்த ஆலோசனைக்கு பின் ஊரடங்கு மே 17ம் தேதி வரை நீடிக்கும் முடிவை அறிவிப்பார் என தெரிகிறது....