வியாழக்கிழமை, ஜூலை 30
Shadow

Tag: சிங்கப்பூர்

சிங்கப்பூரில் ஒமைக்ரான் வைரஸ் பரவல் விரைவில் உச்சத்தை தொடும்- நிபுணர்கள் எச்சரிக்கை!

சிங்கப்பூரில் ஒமைக்ரான் வைரஸ் பரவல் விரைவில் உச்சத்தை தொடும்- நிபுணர்கள் எச்சரிக்கை!

HOME SLIDER, NEWS, செய்திகள்
சிங்கப்பூரில் ஒமைக்ரான் வைரஸ் பரவல் விரைவில் உச்சத்தை தொடும்- நிபுணர்கள் எச்சரிக்கை! சிங்கப்பூரில் தற்போது ஒமைக்ரான் வைரஸ் பரவி வருகிறது. கடந்த சனிக்கிழமை நிலவரப்படி அங்கு 692 பேருக்கு ஒமைக்ரான் வகை வைரஸ் உறுதி செய்யப்பட்டது. இதில் 541 பேருக்கு உள்நாட்டிலேயே ஒமைக்ரான் வைரஸ் பரவியதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்து உள்ளது. இந்தநிலையில் கடந்த ஆண்டு தென் ஆப்பிரிக்காவில் பரவியதை போல சிங்கப்பூரில் ஒமைக்ரான் வகை தொற்று பரவல் அதிகரிக்க கூடும் என்று தொற்று நோயியல் நிபுணர் அலெக்ஸ் குக் எச்சரிக்கை விடுத்து உள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:- சிங்கப்பூரில் தினசரி ஒமைக்ரான் பாதிப்பு 10 ஆயிரத்தில் இருந்து 15 ஆயிரம் வரை விரைவில் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. சிங்கப்பூரில் எந்த வகையான கட்டுப்பாடுகள் கடைப்பிடிக்கப்படுகின்றன என்பதை பொறுத்து ஒமைக்ரான் அலையின் தீவிரம் இருக்கும். இவ்வாறு அவர் கூறினார். ...
கொரானா தடுப்பூசி கிடைக்க இன்னும் ஓராண்டாகலாம் என்கிறார் சிங்கப்பூர் பிரதமர்!

கொரானா தடுப்பூசி கிடைக்க இன்னும் ஓராண்டாகலாம் என்கிறார் சிங்கப்பூர் பிரதமர்!

HOME SLIDER, NEWS, politics, உலக செய்திகள், உலகம், செய்திகள்
    கொரானா தடுப்பூசி கிடைக்க இன்னும் ஓராண்டாகலாம் என்கிறார் சிங்கப்பூர் பிரதமர்! கொரானா வைரஸ் தடுப்பூசி உலகம் முழுவதும் பரவலாக அனைவருக்கும் கிடைக்க குறைந்தது ஓராண்டு ஆகும் என்று சிங்கப்பூர் பிரதமர் லீ சியென் லூங் தெரிவித்துள்ளார். நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற பிரதமர் லீ சி யென்லூங் பேசியதாவது:- கொரானா வைரசுக்கு எதிரான தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்ட காலத்தில் இருந்து உலகம் முழுவதும் அனைவருக்கும் பரவலாக கிடைக்க குறைந்தது ஒரு ஆண்டாகும். அநேகமாக ஓராண்டு காலத்திற்கு மேல் ஆகலாம். நாம் கொரானா வைரசுடன் நீண்ட நாட்கள் வாழ கற்றுக்கொள்ள வேண்டும். அது காசநோய் போன்ற ஆபத்தான தொற்று நோயுடன் கடந்த காலத்தில் நாம் வாழ்ந்து வருவதுபோல் கற்றுக்கொள்ள வேண்டும். சிங்கப்பூரில் புதிதாக பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகிறது. கொரானா தொற்று மனித இனம் நீண்ட காலத்துக்கு பிறக...