Tag: சின்மயி

நடிகைகள் பாலியல் புகாரை விசாரிக்க 3 பேர் குழு- விஷால்

நடிகைகள் பாலியல் புகாரை விசாரிக்க 3 பேர் குழு- விஷால்

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகர்கள், நடிகைகள்
  சமீபத்தில் இந்தி நடிகர் நானா படேகர் மீது நடிகை தனுஸ்ரீ தத்தா பாலியல் புகார் கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். சினிமா பிரபலங்கள், அரசியல்வாதிகளின் மிரட்டலையும் பொருட்படுத்தாமல் தனுஸ்ரீ தத்தா தொடர்ந்து பாலியல் புகாரை வெளிச்சத்துக்கு கொண்டு வந்தார். அவருக்கு பெண்கள் அமைப்பு, பெண் எழுத்தாளர்கள், பிரபலங்கள் ஆதரவு தெரிவித்தனர். தனுஸ்ரீ தத்தாவைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட மேலும் பல பெண் பிரபலங்கள் தாங்கள் சந்தித்த பாலியல் தொல்லைகளை வெளியிட முன்வந்தனர். இதற்காக சமூக வலைதளத்தில் ‘மீ டூ’ ஹேஷ்டேக் தொடங்கப்பட்டது. அதில் பல பெண்கள் தெரிவித்த பாலியல் புகார்கள் வெளியிடப்பட்டன. முதலில் மத்திய மந்திரி எம்.ஜே. அக்பர் மீது பெண் பத்திரிகையாளர் ஒருவர் பாலியல் புகார் தெரிவித்தார். தென்னிந்தியாவில் முதல் முறையாக பிரபல பின்னணி பாடகி சின்மயி கவிஞர் வைரமுத்து மீது பாலியல் புகார் செய்தார். சென்ன