Thursday, February 27
Shadow

Tag: சூரரைப் போற்று

சூர்யாவின் சூரரைப் போற்று இந்தியில் ரீமேக் ஆகிறது!

சூர்யாவின் சூரரைப் போற்று இந்தியில் ரீமேக் ஆகிறது!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
    சூர்யாவின் சூரரைப் போற்று இந்தியில் ரீமேக் ஆகிறது! சூர்யா நடிப்பில் இப்போது உருவாகி இருக்கும் படம் ‘சூரரைப் போற்று’. இப்படத்தை சுதா கொங்கரா இயக்கியுள்ளார். இதில் நாயகியாக அபர்ணா பாலமுரளி நடித்துள்ளார். மேலும், மோகன் பாபு, ஜாக்கி ஷெராப், கருணாஸ் உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். இத்திரைப்படம் தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் உருவாகி உள்ளது. குறைந்த கட்டணத்தில் சாதாரண மக்களும் விமான பயணத்தை மேற்கொள்ள முடியும் என காட்டிய ஏர் டெக்கான் நிறுவனர் ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கையில் நிகழ்ந்த சில சுவாரஸ்யமான நிகழ்வுகளை மையப்படுத்தி இந்த கதை உருவாக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தை 2டி என்டர்டெய்ன்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. படப்பிடிப்பு முடிந்து பின்னணி வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இப்படத்தை ஏப்ரலில் ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளது
நடு வானில் பாடல்… என் 20 வருட சினிமாவில் இதுதான் பெஸ்ட் “சூரரைப் போற்று” சூர்யா நெகிழ்ச்சி!

நடு வானில் பாடல்… என் 20 வருட சினிமாவில் இதுதான் பெஸ்ட் “சூரரைப் போற்று” சூர்யா நெகிழ்ச்சி!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
    70 குழந்தைகளுடன் நடுவானில் வெளியிடப்பட்ட 'சூரரைப் போற்று' படத்தின் ஒரு பாடல். சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் வழங்கும் 'சூரரைப் போற்று' படத்தின் ஒரு பாடல் வெளியீட்டு விழா ஸ்பைஸ் ஜெட் விமானத்தில் நடைபெற்றது. இப்படத்தின் பாடல்களில் ஒன்றான 'வெய்யோன்சில்லி' என்று தொடங்கும் பாடல் நடுவானில் ஸ்பைஸ் ஜெட் நிறுவனத்தின் தலைவர் அஜய் சிங் மற்றும் சூர்யா இருவரும் வெளியிட்டனர். இதுகுறித்து நடிகர் சூர்யா கூறியதாவது :- எனது 20 வருட சினிமாவில் இந்த படத்தை தான் முக்கியமாக கருதுகிறேன். இப்படம் சிறப்பாக வருவதற்காக இயக்குநர் சுதா 10 வருடங்கள் உழைத்திருக்கிறார். இது சாதாரண விஷயமல்ல. மேலும், சுமார் 30 நிமிட காட்சிகள் விமானத்தில் எடுக்கப்பட்டது. அதற்கு ஸ்பைஸ் ஜெட் நிறுவனதிற்கு மட்டும் நன்றி கூற முடியாது. படப்பிடிப்பின் போது எங்களுக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்த ஒவ்வொரு குழுவ
பறக்கும் விமானத்தில் சூரரைப் போற்று பாடல் வெளியிட திட்டம்!

பறக்கும் விமானத்தில் சூரரைப் போற்று பாடல் வெளியிட திட்டம்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
    சூர்யா நடிப்பில் சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகி வரும் படம் சூரரைப் போற்று. இந்தியாவின் முதல் பட்ஜெட் விமானத்தை உருவாக்கிய ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கையை மையப்படுத்தி உருவாகி வரும் இந்தப் படத்தில் அபர்ணா பாலமுரளி, தெலுங்கு நடிகர் மோகன் பாபு, கருணாஸ் உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கும் இந்தப் படத்தை சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனமும், சிக்யா நிறுவனமும் இணைந்து தயாரிக்கின்றன. இந்நிலையில், அரசுப் பள்ளியில் பயிலும் 100 மாணவர்களை இலவசமாக விமானத்தில் அழைத்து செல்ல சூரரை போற்று படக்குழு முடிவு எடுத்துள்ளது. விமான நிறுவனம் தொடங்குவது தொடர்பான கதை களத்தில் சூர்யா நடிக்கிறார். இதனால் பள்ளி மாணவர்களை விமானத்தில் அழைத்து செல்ல படக்குழு முடிவு எடுத்தது. அதன்படி அகரம் பவுண்டேசன் சார்பில் சுமார் 100 மாணவ, மாண