வியாழக்கிழமை, ஏப்ரல் 30
Shadow

Tag: டெல்லி கலவரம்

டெல்லி கலவர வழக்கை விசாரித்த நீதிபதி திடீர் இடமாற்றம்! காங்.,கண்டனம்

டெல்லி கலவர வழக்கை விசாரித்த நீதிபதி திடீர் இடமாற்றம்! காங்.,கண்டனம்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
    டெல்லி கலவர வழக்கை விசாரித்த நீதிபதி திடீர் இடமாற்றம்! காங்.,கண்டனம் டெல்லி கலவரம் தொடர்பான வழக்கு விசாரணை, டெல்லி ஐகோர்ட்டில் நிலுவையில் இருக்கிறது. நீதிபதி எஸ்.முரளிதர் தலைமையிலான அமர்வு இதை விசாரித்து வந்தது. நேற்று முன்தினம் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, டெல்லி போலீஸ் மீது நீதிபதிகள் கடும் அதிருப்தி தெரிவித்தனர். வெறுப்புணர்வை தூண்டும்வகையில் பேசியதாக கூறப்படும் மத்திய மந்திரி அனுராக் தாக்குர், பா.ஜனதா தலைவர்கள் கபில் மிஸ்ரா, பர்வேஷ் வர்மா ஆகியோர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யாதது ஏன்? என்று அவர்கள் கேட்டனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த பரபரப்பு அடங்குவதற்குள், அதே நாள் மாலையில், நீதிபதி முரளிதர் பணியிட மாற்ற உத்தரவு வெளியானது. அவர் பஞ்சாப் மற்றும் அரியானா ஐகோர்ட்டுக்கு மாற்றப்பட்டார். சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதியுடன் ஆலோசித்து...
டெல்லி வன்முறை கலவரம் மத்திய அரசுக்கு ரஜினி கண்டனம்

டெல்லி வன்முறை கலவரம் மத்திய அரசுக்கு ரஜினி கண்டனம்

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
  டெல்லி வன்முறை கலவரம் மத்திய அரசுக்கு ரஜினி கண்டனம் சென்னை போயஸ் கார்டன் இல்லத்தில் நடிகர் ரஜினிகாந்த் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- சிஏஏ சட்டத்தால் இஸ்லாமியர்கள் பாதிக்கப்பட்டால்தான் முதல் ஆளாக நிற்பேன் என்று கூறியிருந்தேன். உளவுத்துறையின் தோல்வி தான் டெல்லி வன்முறைக்கு காரணம். மத்திய அரசின் உளவுத்துறை சரியாக செயல்படவில்லை. இதை நான் வன்மையாக கண்டிக்கிறேன். டெல்லி வன்முறையை மத்திய அரசு இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கி இருக்க வேண்டும். போராட்டம் வன்முறையாக மாறக்கூடாது. அமைதியாக நடைபெறலாம். டெல்லி போராட்டத்தை மத்திய அரசு ஒடுக்கவில்லை என்றால் எதிர்காலத்தில் பிரச்சனை ஏற்படும். குடியுரிமை திருத்தச் சட்டம் திரும்பப் பெறப்படும் என்ற நம்பிக்கை எனக்கு இல்லை. என்ன போராடினாலும் மத்திய அரசு இந்த சட்டத்தை திரும்பப் பெறாது என நினைக்கிறேன். சில கட...
டெல்லியில் 3வது நாளாக தொடரும் வன்முறை… பலி 10 ஆக உயர்வு!

டெல்லியில் 3வது நாளாக தொடரும் வன்முறை… பலி 10 ஆக உயர்வு!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  டெல்லியில் 3வது நாளாக தொடரும் வன்முறை... பலி 10 ஆக உயர்வு! குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு (சிஏஏ) எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெறுகின்றன. தலைநகர் டெல்லியில் பல்வேறு அமைப்பினர் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். அதேசமயம் சிஏஏ ஆதரவு போராட்டங்களும் நடைபெறுகின்றன. வடகிழக்கு டெல்லியில் நடைபெற்று வரும் போராட்டத்தின்போது வன்முறை வெடித்துள்ளது. மாஜ்பூர் பகுதியில் நேற்று நடைபெற்ற வன்முறையில் தலைமை காவலர் ரத்தன்லால் உயிரிழந்தார். இதேபோல் பல்வேறு இடங்களில் சிஏஏ எதிர்ப்பு போராட்டக்காரர்களுக்கும், சிஏஏ ஆதரவு போராட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இன்றும் ஆங்காங்கே வன்முறைச் சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. கல்வீச்சில் ஏராளமான வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளன. பதற்றம் நிறைந்த பகுதிகளில் போலீசார் மற்றும் அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். இந்த வன்முறையில் நேற்று...
தேவைபட்டால் ராணுவத்தை அழைப்பேன் – டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால் அதிரடி முடிவு

தேவைபட்டால் ராணுவத்தை அழைப்பேன் – டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால் அதிரடி முடிவு

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  டெல்லி கலவரத்தை ஒடுக்க தேவைப்பட்டால் ராணுவம் அழைக்கப்படும் என டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார். உள்துறை அமித்ஷாவுடனான ஆலோசனைக்குப் பிறகு டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் பேட்டியளித்துள்ளார். கலவரம் பாதித்த வட்டாரங்களில் அமைதியை நிலைநாட்ட அரசியல் கட்சிகள் இணைந்து பணியாற்ற முடிவு என்று கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.. அமித்ஷா நடத்திய ஆலோசனையில் பங்கேற்ற அனைவரும் வன்முறையை முடிவுக்கு கொண்டுவர வலியுறுத்தினார்....