Tuesday, August 4
Shadow

Tag: தமிழ் சினிமா

டேனி படத்தில் போலீஸ் அதிகாரியாக அசத்தும் பப்ளிக் ஸ்டார்!

டேனி படத்தில் போலீஸ் அதிகாரியாக அசத்தும் பப்ளிக் ஸ்டார்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  டேனி’ மூலம் காவல் துறை அதிகாரியாக களம் இறங்கும் துரை சுதாகர் ’களவாணி 2’ மூலம் வில்லத்தினத்தில் வித்தியாசத்தை காட்டி மிரட்டியவர் நடிகர் துரை சுதாகர். படத்தில் வில்லனாக நடித்தாலும், தஞ்சை மக்களிடம் பப்ளிக் ஸ்டார் என்ற பட்டத்துடன் ஹீரோவாக வலம் வருபவர், பல படங்களில் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்து வருகிறார். அதில் ஒரு படம் ‘டேனி’. ஒளிப்பதிவாளரும் இயக்குநருமான பி.ஜி.முத்தையா தயாரிப்பில், அறிமுக இயக்குநர் எல்.சி.சந்தானமூர்த்தி இயக்கத்தில், வரலட்சுமி கதையின் நாயகியாக நடித்திருக்கும் இப்படத்தில் வரலட்சுமிக்கு இணையான வேடத்தில் பப்ளிக் ஸ்டார் துரை சுதாகர் நடித்திருக்கிறார். தஞ்சை மாவட்டத்தில் உள்ள கிராமம் ஒன்றில் பெண்கள் கொடூரமாக கொலை செய்யப்பட, அந்த கொலைகளின் பின்னணியை கண்டுபிடிப்பது தான் கதை. சஸ்பென்ஸ் திரில்லர் படங்கள் நகரத்தை சார்ந்தே இருந்த நிலையில், இப்படம் கிராம...
தியேட்டர்கள் திறப்பது எப்போது? அமைச்சர் கடம்பூர் ராஜூ பதில்

தியேட்டர்கள் திறப்பது எப்போது? அமைச்சர் கடம்பூர் ராஜூ பதில்

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள்
    தியேட்டர்கள் திறப்பது எப்போது? அமைச்சர் கடம்பூர் ராஜூ பதில் தூத்துக்குடியில் அமைச்சர் கடம்பூர்.செ.ராஜூ செய்தியாளர்களிடம் கூறியது: “வழிபாட்டு தலங்கள், திரையங்குகள் திறப்பது குறித்து வரும் 8-ம் தேதிக்கு மேல் மாநில அரசுகள் சூழ்நிலைக்கு ஏற்ப முடிவு எடுத்து கொள்ளலாம் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. எனவே தமிழக முதல்வர் நாளைய தினம் சூழ்நிலைக்கு ஏற்ப முடிவு செய்வார். புகைப்பிடித்தல், புகையிலை போன்ற விளம்பரங்கள் வெளியிடப்பட்டாலும், அது போன்ற காட்சி வந்தாலும் அதன் தீமைகள் குறித்து குறிப்பிட்டு தான் வெளியிட வேண்டும் என்று அரசு அறிவுறுத்தியுள்ளது. தீமை பற்றி குறிப்பிடமால் விளம்பரம் வெளியிடும் நிலை தமிழகத்தில் இல்லை. சின்னத்திரை படபிடிப்பு நடத்துவதற்கு அனுமதி பெறுவதற்கான  வழிமுறைகளை எளிமைப்படுத்தி தமிழக அரசு உத்தரவு வழங்கியது. ஒரு தொடருக்கு ஒரு முறை அனுமதி வாங்கினால்...
பெப்சிக்கு அரிசி மூட்டைகள் வழங்கிய தயாரிப்பாளர், நடிகை..!

பெப்சிக்கு அரிசி மூட்டைகள் வழங்கிய தயாரிப்பாளர், நடிகை..!

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகைகள்
      சினிமா பெப்சி தொழிலாளர்களுக்கு அரிசி மூட்டைகள் அளித்த "மாநாடு" தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, பார்வதி நாயர்! கொரோனாவால் உலகமே தன் இயல்பான வாழ்க்கையை நிறுத்திக் கொண்டு அவரவர் வீடுகளில் அடைந்து கிடக்கிறோம். மக்களை மகிழ்விக்கும் திரைத்துறை தொழிலாளர்கள் பலரும் கடுமையான வாழ்வாதார சிக்கலில் அவதி படுகிறார்கள். அவர்களுக்கு உதவி செய்ய திரையுலகில் பலரும் பெப்சிக்கு உதவி வருகிறார்கள். சினிமா பெப்சி தொழிளாளர்களின் குடும்பங்கள் இந்த வேலையில்லாத நாட்களைக் கடந்து வர சிறு உதவியாக 50 அரிசி மூட்டைகளை (25 கிலோ) ஃபெப்சிக்கு வழங்கினார் "மாநாடு" தயாரிப்பாளரும் இயக்குனருமான சுரேஷ் காமாட்சி . அதே போல நடிகை பார்வதி நாயரும் 1500 கிலோ அரிசி மூட்டைகள் வழங்கினார். நேற்று நடிகர் சூரி, இயக்குனர் பாரதிராஜா ஆகியோரும் அரிசி மூட்டைகளை வழங்கினார்கள்....
வடசென்னை மக்களை பற்றிய படமா பிகில்…!

வடசென்னை மக்களை பற்றிய படமா பிகில்…!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  வடசென்னை மக்களை பற்றிய படமா பிகில்...! பிகில் படத்தில் பெண்கள் கால்பந்து அணியின் பயிற்சியாளராக விஜய் நடிப்பதாக ஏற்கனவே தகவல் வெளியானது. சென்னை அருகே பல கோடி ரூபாய் செலவில் கால்பந்தாட்ட மைதானத்தை படக்குழுவினர் இதற்காக அமைத்து இருந்தனர். அதில் பெரும் பகுதி காட்சிகள் படமாக்கப்பட்டன. இந்த படத்துக்கு தலைப்பு வைக்காமலேயே ‘தளபதி 63’ என்ற பெயரில் படப்பிடிப்பை நடத்தி வந்தனர். பட வேலைகள் இறுதி கட்டத்தில் உள்ளன. படத்தை தீபாவளிக்கு திரைக்கு கொண்டுவர திட்டமிட்டுள்ளனர். இதையொட்டி நேற்று மாலை படத்தின் தலைப்பு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. விஜய் நடித்து வரும் 63-வது படத்துக்கு ‘பிகில்’ என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த படத்தில் அவர் இரட்டை வேடங்களில் நடிக்கும் தோற்றத்தையும் படக்குழுவினர் வெளியிட்டனர். இந்நிலையில் நள்ளிரவு 12 மணி அளவில் இரண்டாவது தோற்றமும் வெளியானது. படத...
நயன்தாராவின் கொலையுதிர் காலம் படத்தை வெளியிட நீதிமன்றம் இடைக்கால தடை..!

நயன்தாராவின் கொலையுதிர் காலம் படத்தை வெளியிட நீதிமன்றம் இடைக்கால தடை..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகைகள்
  நயன்தாராவின் கொலையுதிர் காலம் படத்தை வெளியிட நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. நடிகை நயன்தாரா நடித்துள்ள கொலையுதிர் காலம் படத்தை எக்சட்ரா எண்டர்டெயின்மெண்ட் தயாரித்த கொலையுதிர் காலம் படத்தை வெளியிட சென்னை உயர் நீதிமன்றம் விதித்து அதிரடி உத்தரவிட்டுள்ளது. இயக்குனர் பாலாஜிகுமார் தொடர்ந்த இந்த வழக்கில் பட தயாரிப்பு நிறுவனம் ஜூன் 2ம் தேதிக்குள் பதிலளிக்கவும் உத்தரவிட்டுள்ளது. இந்த படத்தை வரும் 14ம் தேதி வெளியிட முடிவு செய்து விளம்பரப்படுத்தி இருந்த நிலையில் பட வெளியீட்டுக்கு நீதிமன்றம் தடை விதித்துள்ளது....
3 தயாரிப்பு நிறுவனங்கள் சேர்ந்து தயாரிக்கிற படத்தில் 4 வேஷத்தில் நடிக்கும் பாபி சிம்ஹா

3 தயாரிப்பு நிறுவனங்கள் சேர்ந்து தயாரிக்கிற படத்தில் 4 வேஷத்தில் நடிக்கும் பாபி சிம்ஹா

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  தமிழ் சினிமாவில் சமீபத்திய சர்ச்சை நாயகனாக பரபரப்பான செய்தியில் சிக்கியவர் பாபி சிம்ஹா. இவர் இப்போது 3 தயாரிப்பு நிறுவனங்கள் சேர்ந்து தயாரிக்கிற படத்தில் 4 வேஷத்தில் நடிக்கிறார். தமிழ் சினிமாவில் கதாநாயகன் இரட்டை வேஷம் போடுவது சகஜம். நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நவராத்திரி படத்தில் 9 வேஷத்தில் நடித்திருந்தார். அதே போல உலகநாயகன் கமல்ஹாசன் தசாவதாரம் படத்தில் 10 வேஷங்களில் நடித்திருக்கிறார். அவர்களை தொடர்ந்து பாபி சிம்ஹா வல்லவனுக்கு வல்லவன் படத்தில் 4 வேஷத்தில் நடித்து முடித்திருக்கிறார். விஜய் தேசிங்கு என்பவர் இயக்கிய இந்த படத்தை ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ், லிப்ரா புரொடக்‌ஷன், அசால்ட் புரொடக்சன் ஆகிய மூன்று பட நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன. படம் முடிந்து ரிலீசுக்கு ரெடியாகி வருகிறது. பாபிசிம்ஹாவுடன் ஷிவதா, நெப்போலியன், கருணாகரன், ஆனந்தராஜ், சங்கிலிமுருகன், அப்...
ராட்சசி ஆன ஜோதிகா டீசர் ரிலீஸ்

ராட்சசி ஆன ஜோதிகா டீசர் ரிலீஸ்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகைகள்
  அறிமுக இயக்குநர் எஸ்.ராஜ் இயக்கத்தில் ஜோதிகா நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ராட்சசி. ஜோதிகா தலைமை ஆசிரியராக நடித்துள்ள இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு இன்று வெளியிட்டது ஜோதிகாவுடன் பூர்ணிமா பாக்யராஜ், சத்யன், ஹரிஷ் பேரடி, கவிதா பாரதி உள்ளிட்ட பலரும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். ராட்சசி படத்தின் டிரைலர், கார்த்தி நடித்துள்ள கைதி படத்தின் டீசரை சூர்யா நடிப்பில் வெளியாகி இருக்கும் என்ஜிகே படத்தின் இடைவேளையின் போது திரையிடப்படுகிறது. என்ஜிகே, ராட்சசி, கைதி ஆகிய மூன்று படங்களையுமே ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் நிறுவனமே தயாரித்துள்ளது...
தனுஷ் இன்று வெளியிடும் டாப்சியின் கேம் ஓவர் டிரைலர்..!

தனுஷ் இன்று வெளியிடும் டாப்சியின் கேம் ஓவர் டிரைலர்..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  ஆடுகளம் மூலமாக தமிழில் அறிமுகம் ஆன டாப்சி நீண்ட இடைவெளிக்கு பின் மீண்டும் தமிழில் வருகிறார். அவர் இப்போது "கேம் ஓவர்’ என்ற படத்தில் நடித்து முடித்திருக்கிறார். தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் இப்படம் வெளியாகிறது. இதனை இயக்குநர் அஸ்வின் சரவணன் இயக்கியுள்ளார். ஒய் நாட் ஸ்டூடியோஸும், ரிலையன்ஸ் எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனமும் இணைந்து தயாரித்திருக்கிறார்கள். ஏற்கனவே இதன் டீசர் வெளியாகி எதிர்பார்ப்பை கிளப்பியிருக்கும் நிலையில், இதன் டிரைலர் இன்று 1 மணிக்கு வெளியாகிறது. தமிழ் டிரைலரை நடிகர் தனுஷும், தெலுங்கு டிரைலரை தெலுங்கு நடிகர் ராணாவும் வெளியிடுகிறார்கள். இந்தி டிரைலரை டாப்சியே ரிலீஸ் செய்கிறாராம். தமிழில் ஆடுகளம் படத்தில் ஜோடியாக நடித்த டாப்சியின் பட டிரைலரை தனுஷ் வெளியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது....
தாதா87 பட இயக்குனரோடு சேர்ந்து “பீட்ரு” விடப் போகும் அம்சவர்தன்..!

தாதா87 பட இயக்குனரோடு சேர்ந்து “பீட்ரு” விடப் போகும் அம்சவர்தன்..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  தாதா87 பட இயக்குனரோடு இணைந்து "பீட்ரு" விட தயாராகி வருகிறார் நடிகர் அம்சவர்தன். ஓவரா பேசுகிறவர்களைப் பார்த்து என்னமா "பீட்ரு" உட்றான் பார்றா என்று சொல்வார்கள். அந்த பீட்ரு வார்த்தையை படத் தலைப்பாக வைத்திருக்கிறார் இயக்குனர் விஜய்ஸ்ரீ. சமீபத்தில் ரிலீஸ் ஆகி பரவலாக பேசப்பட்ட படம் தாதா 87. கதாநாயகியை திருநங்கையாக காட்டியிருப்பார். சாருஹாசன் தாதாவாக நடித்திருப்பார். இந்த படத்தின் கதையும், திரைக்கதையும் பலராலும் பாராட்டப்பட்டது. இந்த பட்த்தையும் அதன் மேக்கிங்கையும் பார்த்து விட்டு இயக்குனர் விஜய்ஸ்ரீயை அழைத்து பேசியிருக்கிறார் நடிகர் அம்சவர்தன். இப்போது இந்த கூட்டணி இணைந்து பீட்ரு படத்தை உருவாக்கி வருகிறது. முழு நீள நகைச்சுவை படமாக உருவாகி வரும் இந்த பீட்ருவில் காமெடி நடிகர்கள் பட்டாளம் அதகளப்படுத்தப் போகிறதாம். சத்தமில்லாமல் 15நாட்கள் படப்பிடிப்பு நடத...
சினிமா தயாரிப்பாளர்கள் மு.க.ஸ்டாலினை சந்தித்து தேர்தல் வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்தனர்..!

சினிமா தயாரிப்பாளர்கள் மு.க.ஸ்டாலினை சந்தித்து தேர்தல் வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்தனர்..!

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள்
  சமீபத்தில் நடந்த தேர்தலில் திமுக கூட்டணி அபார வெற்றி பெற்றது. இடைத்தேர்தலிலும் 13 இடங்களில் வெற்றி பெற்றது. திமுக தலைவராக ஸ்டாலின் தேர்வான பின் நடந்த தேர்தலில் முக.ஸ்டாலின் இமாலய வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்த சூழலில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சிங்காரவேலன் தலைமையில் தயாரிப்பாளர்கள் அறிவாலயம் சென்று ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். இந்த நிகழ்வில் திரைப்பட தயாரிப்பாளர் சிங்காரவேலனோடு சக தயாரிப்பாளர்கள மிட்டாய் அன்பு, T.T. சுரேஷ், P.V. பிரசாத், கோவை தமிழரசன், S.R. முருகேசன், நாதன், சக்கரபாணி, Associate உறுப்பினர்கள் ஆறுமுகம், கண்ணன், ஜான் பீட்டர் ஆகியோர் சென்றிருந்தனர்....