புதன்கிழமை, ஏப்ரல் 29
Shadow

Tag: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்

உள்ளாட்சி தேர்தலில் 153 வார்டுகளை கைப்பற்றியது தி.மு.க.!

உள்ளாட்சி தேர்தலில் 153 வார்டுகளை கைப்பற்றியது தி.மு.க.!

HOME SLIDER, NEWS, அரசியல், செய்திகள், தமிழக அரசியல்
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. தற்போதைய நிலையில் ஏறக்குறைய எல்லா வார்டுகளுக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் சென்னை மாநகராட்சியில் உள்ள 200 வார்டுகளுக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் தி.மு.க. தனியாக 153 வார்டுகளில் வெற்றி பெற்றது. அ.தி.மு.க. 15 இடங்களை கைப்பற்றியது. தி.மு.க. கூட்டணி கட்சியான காங்கிரஸ் 13 இடங்களில் வெற்றி பெற்றது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்  4 இடங்களையும், சி.பி.ஐ., பா.ஜனதா தலா ஒரு இடங்களிலும் வெற்றி பெற்றன. விடுதலை சிறுத்தைகள் 4 இடங்களிலும், ம.தி.மு.க. 2 இடங்களிலும், அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலா ஒரு இடங்களிலும், சுயேட்சை 5 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன....
திருப்பூர் மாவட்டத்தில் இன்று மு.க.ஸ்டாலின் பிரசாரம்!

திருப்பூர் மாவட்டத்தில் இன்று மு.க.ஸ்டாலின் பிரசாரம்!

HOME SLIDER, NEWS, politics, அரசியல், செய்திகள், தமிழக அரசியல்
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகிற 19-ந்தேதி ஒரே கட்டமாக நடைபெறுகிறது. தேர்தலுக்கு இன்னும் 7 நாட்களே உள்ள நிலையில் வேட்பாளர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அரசியல் கட்சி தலைவர்கள் தங்களது கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து தமிழகம் முழுவதும் சூறாவளி பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்  தி.மு.க மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து உள்ளாட்சியிலும் தொடரட்டும் நம்ம ஆட்சி என்ற முழக்கத்தோடு காணொலி காட்சி மூலமாக பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். கடந்த 6-ந்தேதி காணொலி காட்சி மூலம் கோவையில் பிரசாரத்தை தொடங்கிய அவர், சேலம், கடலூர், தூத்துக்குடி, ஈரோடு, குமரி ஆகிய மாவட்டங்களில் பிரசாரம் மேற்கொண்டார். இந்தநிலையில் இன்று திருப்பூர் மாவட்டத்தில் உள்ள ஒரு மாநகராட்சி மற்றும் உடுமலை, தாராபுரம், திருமுருகன...
அதிக வார்டுகள் கொடுக்க அ.தி.மு.க. மறுப்பு: தனித்து போட்டியிட பா.ஜனதா ஆலோசனை!

அதிக வார்டுகள் கொடுக்க அ.தி.மு.க. மறுப்பு: தனித்து போட்டியிட பா.ஜனதா ஆலோசனை!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள், தமிழக அரசியல்
அதிக வார்டுகள் கொடுக்க அ.தி.மு.க. மறுப்பு: தனித்து போட்டியிட பா.ஜனதா ஆலோசனை! தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் தொடங்கிவிட்டது. மனு தாக்கல் முடிவதற்கு இன்னும் 5 நாட்களே உள்ளன. ஆனால் தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. கூட்டணியில் இடப்பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தையில் இன்னும் முடிவு ஏற்படவில்லை. தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் போட்டியிட விரும்பும் இடங்கள் தொடர்பாக மாநில தலைவர் கே.எஸ். அழகிரி, தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினை நேற்று முன்தினம் சந்தித்து பேசினார். அப்போது அந்தந்த மாவட்டங்களில் தி.மு.க. மாவட்ட செயலாளர்களுடன் பேசி முடிவு செய்யும்படி கூறியுள்ளார். இதையடுத்து மாவட்ட அளவில் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள். ஆனால் காங்கிரசுக்கு மிக குறைந்த எண்ணிக்கையிலே இடங்கள் ஒதுக்குவதால் உடன்பாடு ஏற்படவில்லை. இதனால் காங்கிரஸ் தரப்பில் அதிருப்தி நிலவுக...