”பன்றிக்கு நன்றி சொல்லி” சிரிப்புக்கு கியாரண்டி -கோடங்கி விமர்சனம்
டார்க் காமெடி படங்கள் எப்போதாவதுதான் தமிழ் சினிமாவில் பேசப்படும். அப்படி பேசு பொருளாக மாறிய படம்தான் பன்றிக்கு நன்றி சொல்லி.
தலைப்பைப் போலவே படம் முழுக்க சிரிப்புக்கு பஞ்சம் இல்லை.
சரி என்னதான் கதை...
பல நூறாண்டுகளுக்கு முன் சீனாவில் ஒரு அரசன் பஞ்சலோகத்தால் ஆன சின்ன பன்றி சிலையை வைத்திருக்கிறார்.
இந்த சிலையை வைத்திருபவர்கள் செல்வ செழிப்பில் இருப்பார்கள் என்பதால் பலர் அந்த பன்றி சிலையை திருட முயற்சிக்கிறார்கள்.
எப்படியோ அந்த சோழ தேசம் வருகிறது. அங்கே சிலை மண்ணுக்குள் புதைக்கப்படுகிறது.
இது நடந்து பல நூறாண்டுகளுக்கு பின் அதாவது நிகழ்கால வருடத்தில் தொல்துறை ஆராய்ச்சியாளர் ஒருவரிடம் சிக்குகிறது அந்த பன்றியின் சிலை.
இதை தெரிந்து கொண்ட ஒரு ரவுடி ஆராய்ச்சியாளரைக் கொன்று, சிலையை கைப்பற்றிச் செல்கிறான்.
அந்த ரவுடியுடன் இருந்த 2 பேர் அந்த சிலையை எங்கோ மறைத்து வைக்கி...


