Thursday, February 27
Shadow

Tag: பா.சிதம்பரம்

வாழ்த்திய பா.சிதம்பரத்தை வசைபாடிய முன்னாள ஜனாதிபதி மகள்..!

வாழ்த்திய பா.சிதம்பரத்தை வசைபாடிய முன்னாள ஜனாதிபதி மகள்..!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  டெல்லி சட்டசபை தேர்தலில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி 62 தொகுதிகளை கைப்பற்றி அமோக வெற்றியை பதிவு செய்தது. பா.ஜனதா 8 இடங்களை வென்றது. காங்கிரஸ் கட்சி படுதோல்வியை தழுவியது. அந்த கட்சியை சேர்ந்த 63 வேட்பாளர்கள் டெபாசிட் இழந்தனர். காங்கிரஸ் கட்சி படுதோல்வியை தழுவினாலும், அந்த கட்சினர் பா.ஜனதா வெற்றியடையாததற்கு மகிழ்ச்சி தெரிவித்தனர். காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான ப.சிதம்பரமும் தனது டுவிட்டர் பக்கத்தில் ஆம் ஆத்மிக்கு வாழ்த்துகளை தெரிவித்தார். இந்த டுவிட்டர் பதிவை வைத்து காங்கிரசை கேலி செய்யும் விதமாக ஏராளமான மீம்ஸ்கள் சமூக வலைத்தளங்களில் வெளியானது. ஒரு தொகுதியில்கூட வெற்றி பெறவில்லை, உங்களை தோற்கடித்ததற்காக இந்த நன்றியா என்று பலர் கேலி விமர்சனங்களை முன்வைத்தனர். ப.சிதம்பரத்தின் கருத்து தொடர்பாக விமர்சனங்கள் ஒரு பக்கம் பறந்து கொண்டிருக்க முன்
பணமதிப்பிழப்பு உள்ளிட்ட 3 தவறுகளால் பொருளாதாரம் அந்தரத்தில் தொங்குகிறது – ப.சிதம்பரம்

பணமதிப்பிழப்பு உள்ளிட்ட 3 தவறுகளால் பொருளாதாரம் அந்தரத்தில் தொங்குகிறது – ப.சிதம்பரம்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
    பணமதிப்பிழப்பு உள்ளிட்ட 3 தவறுகளால் பொருளாதாரம் அந்தரத்தில் தொங்குகிறது - ப.சிதம்பரம் டெல்லியில் உள்ள ஸ்ரீராம் கல்லூரியில் மாணவர்களிடம் முன்னாள் மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரம் பேசிய போது : மத்திய அரசு, 10 சதவீத பொருளாதார வளர்ச்சி ஏற்படும் என்று கூறுகிறது. ஆனால், உண்மையிலேயே வளர்ச்சி 5 சதவீதம்தான் இருக்கும். தொடர்ந்து 6 காலாண்டுகளாக வளர்ச்சி விகிதம் வீழ்ச்சி அடைந்து வருகிறது. 7-வது காலாண்டிலும் வீழ்ச்சி ஏற்பட்டால், வீழ்ச்சி தொடரும் என்றும், நாம் மீள்வது கடினம் என்றும் அர்த்தம். நாம் நொண்டி அடித்துக் கொண்டுதான் இருப்போம். பணமதிப்பிழப்பு, குறைபாடான ஜி.எஸ்.டி. அமலாக்கம், வங்கிகளை நசுக்கியது ஆகிய மூன்று பெரும் தவறுகளால், பொருளாதாரம் அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருக்கிறது. கம்பெனி வரியை குறைப்பதற்கு பதிலாக, ஜி.எஸ்.டி. வரியை குறைத்திருந்தால், லட்சக்கணக்கானோர் கை
தமிழை அழிக்க மும்மொழி திட்டம்… மெல்ல வெளிவரும் பாஜக உண்மைமுகம் – பா.சி. காட்டம்

தமிழை அழிக்க மும்மொழி திட்டம்… மெல்ல வெளிவரும் பாஜக உண்மைமுகம் – பா.சி. காட்டம்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
தமிழை அழிக்க மும்மொழி திட்டம்... மெல்ல வெளிவரும் பாஜக உண்மைமுகம் - பா.சி. காட்டம் புதிய கல்வி கொள்கையின்படி மூன்று மொழி கொள்கையை கடைபிடிக்க பரிந்துரைக்கப்பட்டு உள்ளது. மத்திய அரசின் இந்த மும்மொழி கொள்கைக்கு முன்னாள் நிதி மந்திரி ப.சிதம்பரம் எதிர்ப்பு தெரிவித்து உள்ளார். இதுகுறித்து அவர் நேற்று தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பது: ஜ.க. அரசின் உண்மையான முகம் தெரிய தொடங்கிவிட்டது. புதிய கல்வி கொள்கையில் பள்ளிகளில் முதல் வகுப்பில் இருந்தே மும்மொழித் திட்டம் என்று அறிவித்து இருக்கிறார்கள். பள்ளிகளில் மும்மொழி திட்டம் என்றால் என்ன அர்த்தம்? இந்தி மொழியை கட்டாயப் பாடமாக்குவார்கள் என்று பொருள். இந்தி மொழி கட்டாய பாடம் என்றால் இந்தி திணிப்பு என்று பொருள். பா.ஜ.க. தேர்தல் அறிக்கையிலேயே இந்தி திணிப்புக்கு கொடி அசைத்திருந்தார்கள் என்பதை நான் தேர்தலின் போ
பா.ஜ.க.,வின் அத்துமீறல்களை மவுனமாக வேடிக்கை பார்க்கும்  தேர்தல் கமிஷன் –  ப.சிதம்பரம் குற்றச்சாட்டு

பா.ஜ.க.,வின் அத்துமீறல்களை மவுனமாக வேடிக்கை பார்க்கும் தேர்தல் கமிஷன் – ப.சிதம்பரம் குற்றச்சாட்டு

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  காங்கிரஸ் மூத்த தலைவர் பா.சிதம்பரம் கூறியதாவது: தேர்தல் கமிஷன், நாட்டு மக்களை பெரிதும் ஏமாற்றி விட்டது. பா.ஜனதாவின் அத்துமீறல்கள், பிரதமர் மோடியின் உரைகள், பா.ஜனதாவால் செலவழிக்கப்படும் பெருமளவு பணம் ஆகியவற்றை தேர்தல் கமிஷன் மவுனமாக வேடிக்கை பார்க்கிறது. எதிர்க்கட்சி வேட்பாளர்களின் சிறு செலவுகள் என்று கூறப்படுவதை எல்லாம் அவர்களின் செலவுக்கணக்கில் சேர்க்கிறது. அதே அணுகுமுறையை மேற்கொண்டால், பா.ஜனதா வேட்பாளர்கள் அனைவரும் தகுதியிழப்புக்கு ஆளாக வேண்டி இருக்கும். பா.ஜனதா தனது தோல்வியை மறைக்க ‘தேசியவாதம்’ என்ற கோஷத்தை எழுப்பி வருகிறது. பா.ஜனதா ஆட்சிக்கு வருவதற்கு முன்பு இங்கு எல்லோரும் தேசவிரோதியாகவா இருந்தார்கள்? எல்லோரும் தேசபக் தர்கள்தான். எந்த தேசபக்தரையும் தேசவிரோதியாக கருத முடியாது. ஊடகங்களை கையில் போட்டுக்கொண்டு, இந்த பிரசாரத்தை பா.ஜனதா மேற்கொண்டு வருகிறது.