புதன்கிழமை, ஏப்ரல் 24
Shadow

தமிழை அழிக்க மும்மொழி திட்டம்… மெல்ல வெளிவரும் பாஜக உண்மைமுகம் – பா.சி. காட்டம்

தமிழை அழிக்க மும்மொழி திட்டம்… மெல்ல வெளிவரும் பாஜக உண்மைமுகம் – பா.சி. காட்டம்

புதிய கல்வி கொள்கையின்படி மூன்று மொழி கொள்கையை கடைபிடிக்க பரிந்துரைக்கப்பட்டு உள்ளது. மத்திய அரசின் இந்த மும்மொழி கொள்கைக்கு முன்னாள் நிதி மந்திரி ப.சிதம்பரம் எதிர்ப்பு தெரிவித்து உள்ளார். இதுகுறித்து அவர் நேற்று தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பது:

ஜ.க. அரசின் உண்மையான முகம் தெரிய தொடங்கிவிட்டது. புதிய கல்வி கொள்கையில் பள்ளிகளில் முதல் வகுப்பில் இருந்தே மும்மொழித் திட்டம் என்று அறிவித்து இருக்கிறார்கள். பள்ளிகளில் மும்மொழி திட்டம் என்றால் என்ன அர்த்தம்? இந்தி மொழியை கட்டாயப் பாடமாக்குவார்கள் என்று பொருள்.

இந்தி மொழி கட்டாய பாடம் என்றால் இந்தி திணிப்பு என்று பொருள்.

பா.ஜ.க. தேர்தல் அறிக்கையிலேயே இந்தி திணிப்புக்கு கொடி அசைத்திருந்தார்கள் என்பதை நான் தேர்தலின் போதே சுட்டிக்காட்டி இருந்தேன். சமஸ்கிருத மொழியை பரப்புவோம் என்று பா.ஜ.க. தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டது.

இந்த முயற்சிக்கு தேர்தல் அறிக்கை சூட்டிய தலைப்பு ‘பாரதிய மொழி கலாசாரம்’.

என்று கூறியிருக்கிறார்.

அதே நேரம் “இரு மொழி கொள்கையில் உறுதியாக இருப்போம்” என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறியிருக்கிறார்.

466 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன