வியாழக்கிழமை, ஜூலை 30
Shadow

நாடு முழுவதும் உள்ள ஏழை எளிய மக்களுக்கு தலா 5 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும் – மத்திய அரசுக்கு பா.சிதம்பரம் வேண்டுகோள்

 

 

நாடு முழுவதும் உள்ள ஏழை எளிய மக்களுக்கு தலா 5 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும் – மத்திய அரசுக்கு பா.சிதம்பரம் வேண்டுகோள்

உலகையே ஆட்டிப்படைத்து வரும் கொரானா இந்தியா முழுவதும் கடந்த சில வாரங்களாக அதிக அளவில் பரவி வருவதை அடுத்து மத்திய மாநில அரசுகள் மிக தீவிரமாக நடவடிக்கை எடுத்து வருகிறது.

இதன் பரவலை தடுக்க நாடு முழுதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

இந்த ஊரடங்கு வரும் 14ஆம் தேதி முடிகிறது. அதே நேரம் வைரஸ் பரவல் கட்டுக்குள் கொண்டுவர ஊரடங்கு உத்தரவை ஏப்ரல் 30ஆம் தேதி வரை நாடு முழுவதும் நீடிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
இதற்கு பல மாநில முதல்வர்கள் சம்மதித்து விட்டதாக கூறப்படுகிறது. சில மாநில முதல்வர்கள் அறிவித்து விட்டார்கள்.

இருப்பினும் ஊரடங்கு உத்தரவு காரணமாக ஏழை எளிய மக்கள் மிகவும் பாதிக்கப்படுவார்கள் என்பதால் அவர்களுடைய வாழ்வாதாரத்திற்கு அரசு உதவி செய்ய வேண்டும் என எதிர்க்கட்சிகள் மத்திய அரசுக்கு வலியுறுத்தி வருகிறது
இந்த நிலையில் முன்னாள் நிதி அமைச்சரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் ” இந்தியாவில் உள்ள அனைத்து ஏழை குடும்பங்களுக்கும் தலா ரூபாய் 5000 வழங்க வேண்டும்” என மத்திய அரசுக்கு வலியுறுத்தி தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு டுவிட்டை பதிவு செய்துள்ளார்

இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது: ஊரடங்கு காலத்தில் மோடி அரசு ஏழைகளை மறந்துவிட்டது.

இந்தியாவில் உள்ள அனைத்து ஏழைக் குடும்பங்களுக்கும் தலா
ரூ 5000 தந்தால் மொத்தச் செலவு ரூ 65,000 கோடி. இது நம்மால் முடியும், இதனைக் கண்டிப்பாகச் செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

ஏற்கனவே இதே போன்ற ஒரு கோரிக்கையை முன் வைத்து தமிழகத்தில் உள்ள ஏழை எளிய மக்களுக்கு 5 ஆயிரம் ரூபாய் நிவாரண நிதி உதவி வழங்க வேண்டும் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஸ்டாலின் கடிதம் எழுதியது குறிப்பிடத்தக்கது.

 

 

574 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன