சிவப்பு, ஆரஞ்சு, பச்சை வண்ணங்களில் மாநிலங்கள்… மத்திய அரசின் ஊரடங்கு திட்டம்!?
சிவப்பு, ஆரஞ்சு, பச்சை வண்ணங்களில் மாநிலங்கள்... மத்திய அரசின் ஊரடங்கு திட்டம்!?
கொரானா பரவலை தடுக்க நாடு முழுதும் வரும் 14ம் தேதி வரை ஊரடங்கு அமலில் உள்ளது.
ஊரடங்கால் ஒட்டுமொத்த தொழிலும் முடங்கிப் போய் பலகோடி மக்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு பெரும் சிரமத்தில் இருக்கிறார்கள்.
எப்படியும் இன்னும் சில நாட்களில் ஊரடங்கு தளர்த்தப்படும் என எதிர்பார்த்தவர்களுக்கு கொரானா வைரஸ் பரவல் தொடர்ந்து பரவி வருவதால் பல மாநிலத்தில் ஏப்ரல் 30 வரை ஊரடங்கு நீடித்து அம்மாநில அரசுகள் அறிவித்து விட்டது.
அதே நேரம் தொடர் ஊரடங்கால் ஒட்டுமொத்த தொழில்களும் முடங்கிப் போனதால் பல்லாயிரக்கணக்கான மக்கள் அடுத்த வேலை உணவுக்கே வழி இல்லாமல் மாநிலம் விட்டு மாநிலம் இடம் பெயர்ந்தார்கள்.
அதே போல பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு நிவாரண நிதி உதவி அளிக்க வேண்டும் என எதிர்க் கட்சித் தலைவர்கள் பலரும் க...




