புதன்கிழமை, ஏப்ரல் 29
Shadow

Tag: பி.வி. சிந்து

தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன் தொடர்-அரையிறுதிக்கு முன்னேறினார் பி.வி.சிந்து!

தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன் தொடர்-அரையிறுதிக்கு முன்னேறினார் பி.வி.சிந்து!

HOME SLIDER, NEWS, sports, செய்திகள், விளையாட்டு செய்திகள்
தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன் தொடர் பாங்காக்கில் நடைபெற்றது. இதில் நேற்று நடைபெற்ற காலிறுதி சுற்றில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்துவும், ஜப்பானைச் சேர்ந்த நம்பர் 1 வீராங்கனை அகானே யமகுச்சியும் மோதினர். தொடக்கம் முதல் சிறப்பாக ஆடிய பி.வி.சிந்து முதல் செட்டை 21 -15 என கைப்பற்றினார். இதற்கு பதிலடி கொடுக்கும் விதத்தில் அகானே யமகுச்சி 22 - 20 என வெற்றி பெற்றார். இதையடுத்து, வெற்றியாளரை நிர்ணயிக்கும் மூன்றாவது சுற்றில் 21 -13 என கைப்பற்றி அரை இறுதிச்சுற்றுக்க்கு முன்னேறினார். இன்று நடைபெற உள்ள அரையிறுதிப் போட்டியில் பிவி சிந்து, சீன வீராங்கனை யு பெய் சென்னுடன் மோதுகிறார்....
டோக்கியோ ஒலிம்பிக் – அரையிறுதிக்கு முன்னேறினார் பி.வி. சிந்து!

டோக்கியோ ஒலிம்பிக் – அரையிறுதிக்கு முன்னேறினார் பி.வி. சிந்து!

HOME SLIDER, NEWS, sports, செய்திகள், விளையாட்டு செய்திகள்
டோக்கியோ ஒலிம்பிக் - அரையிறுதிக்கு முன்னேறினார் பி.வி. சிந்து! டோக்கியோ ஒலிம்பிக் பேட்மிண்டன் போட்டியின் பெண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதி ஆட்டத்தில் ஜப்பானை சேர்ந்த அகேன் யமாகுச்சியை எதிர்கொண்ட பி.வி. சிந்து 21-13, 22-20 என்ற நேர்செட் கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறினார்.
பேட்மிண்டன்: டென்மார்க் வீராங்கனையை வீழ்த்தி பி.வி. சிந்து காலிறுதிக்கு முன்னேற்றம்!

பேட்மிண்டன்: டென்மார்க் வீராங்கனையை வீழ்த்தி பி.வி. சிந்து காலிறுதிக்கு முன்னேற்றம்!

HOME SLIDER, NEWS, செய்திகள், விளையாட்டு செய்திகள்
பேட்மிண்டன்: டென்மார்க் வீராங்கனையை வீழ்த்தி பி.வி. சிந்து காலிறுதிக்கு முன்னேற்றம்! பேட்மிண்டன் போட்டியின் பெண்கள் ஒற்றையர் பிரிவு நாக்அவுட் சுற்றுகள் நடைபெற்று வருகின்றன. இன்று காலை நடைபெற்ற ரவுண்ட் ஆஃப் 16 சுற்றில் இந்தியாவின் பி.வி. சிந்து (தரநிலை 6) டென்மார்க்கின் மியா பிலிசெல்ட்-ஐ (தரநிலை 13) எதிர்கொண்டார். இதில் பி.வி. சிந்து 21-15, 21-13 என நேர்செட் கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறினார். நாளை நடைபெறும் காலிறுதியில் கொரியாவின் 12-ம் நிலை வீராங்கனை அல்லது ஜப்பானின் 4-ம் நிலை வீராங்கனையை எதிர்கொள்ள இருக்கிறார்....