திங்கட்கிழமை, ஜூன் 15
Shadow

Tag: ராம்சரண்

இயக்குனர் ஷங்கருடன் இணையும் ஹிருத்திக் ரோஷன்-ராம்சரண்!

இயக்குனர் ஷங்கருடன் இணையும் ஹிருத்திக் ரோஷன்-ராம்சரண்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
தமிழ் சினிமாவின் பிரமாண்ட இயக்குனர் என்று அழைக்கப்படுபவர் ஷங்கர். சமீபத்தில், 'இந்தியன்-2' படம் இயக்குவதாக ஷங்கர் அறிவித்து, படப்பிடிப்பு பணிகளும் நடந்தன. ஆனால் பல்வேறு சிக்கல்கள் காரணமாக அந்த படத்தின் படப்பிடிப்பு நிலுவையில் இருக்கிறது. இதற்கிடையில் தெலுங்கில் ராம் சரணுடன் ஒரு படம், இந்தியில் ரன்வீர் சிங்குடன் ஒரு படம் என ஷங்கர் 'பிஸி'யாக இருக்கிறார். இந்த படங்களை தொடர்ந்து 'இந்தியன்-2' படத்தின் படப்பிடிப்பு பணிகள் தொடங்கும் என்று கூறப்படுகிறது. ஷங்கருக்கு, நீருக்கடியில் அறிவியல் கலந்த ஒரு படத்தை இயக்குவது என்பது கனவு. இதற்கான முன்னோட்டமாக தான் 'எந்திரன்' படத்தை அவர் இயக்கினார். தற்போது கைவசம் உள்ள படங்களை முடித்துவிட்டு தனது கனவு படத்தை இயக்க ஷங்கர் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி ரூ.1,000 கோடி பட்ஜெட்டில் உருவாகும் இந்த படத்தில் இந்தி சினிமா உலகின் முன்னணி நடிகர...
முதல் கட்டத்தை முடித்த ஷங்கர்!

முதல் கட்டத்தை முடித்த ஷங்கர்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள்
முதல் கட்டத்தை முடித்த ஷங்கர்! ராஜமவுலியின் ஆர்.ஆர்.ஆர் படத்தில் நடித்து முடித்துள்ள நடிகர் ராம்சரண், அடுத்ததாக இயக்குனர் ஷங்கருடன் கூட்டணி அமைத்துள்ளார். தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய 3 மொழிகளில் தயாராகும் இப்படத்தை தில் ராஜு தயாரிக்கிறார். இப்படத்தில் ராம்சரணுக்கு ஜோடியாக பிரபல இந்தி நடிகை கியாரா அத்வானி நடிக்கிறார். மேலும் அஞ்சலி, ஜெயராம், சுரேஷ்கோபி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. இந்நிலையில், முதல் கட்ட படப்பிடிப்பு முடிந்து விட்டதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். மேலும் படக்குழுவினருடன் ஷங்கர் இருக்கும் புகைப்படம் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது....
பூஜையுடன் தொடங்கியது ஷங்கர் – ராம்சரண் படம்!

பூஜையுடன் தொடங்கியது ஷங்கர் – ராம்சரண் படம்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
பூஜையுடன் தொடங்கியது ஷங்கர் - ராம்சரண் படம்! தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம்வரும் ஷங்கர், அடுத்ததாக தெலுங்கு நடிகர் ராம்சரணை வைத்து புதிய படம் ஒன்றை இயக்குகிறார். இப்படத்தை பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜூ பிரம்மாண்டமாக தயாரிக்கிறார். இப்படத்தில் ராம்சரணுக்கு ஜோடியாக கியாரா அத்வானி நடிக்கிறார். மேலும் ஜெயராம், அஞ்சலி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். தமன் இசையமைக்கும் இப்படத்திற்கு திருநாவுக்கரசு ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்திற்கு இன்று பூஜை போடப்பட்டது. இன்று நடைபெற்ற பூஜையில், சிறப்பு விருந்தினர்களாக நடிகர்கள் சிரஞ்சீவி, ரன்வீர் சிங், பிரபல இயக்குனர்கள் ராஜமவுலி, லிங்குசாமி ஆகியோர் கலந்துகொண்டனர். இப்படத்தின் படப்பிடிப்பு நாளை தொடங்க உள்ளது. முதலில் பாடல் காட்சியை படமாக்க உள்ளார்களாம். இதற்காக பிரம்மாண்ட அரங்கு அமைக்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி ...
படப்பிடிப்புக்காக வெளிநாடு செல்லும் ‘ஆர்.ஆர்.ஆர்’ படக்குழு!

படப்பிடிப்புக்காக வெளிநாடு செல்லும் ‘ஆர்.ஆர்.ஆர்’ படக்குழு!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
படப்பிடிப்புக்காக வெளிநாடு செல்லும் ‘ஆர்.ஆர்.ஆர்’ படக்குழு! இயக்குனர் ராஜமவுலி இயக்கத்தில் தற்போது இரத்தம் ரணம் ரௌத்திரம் (ஆர்.ஆர்.ஆர்) படம் உருவாகி வருகிறது. இப்படத்தில் தெலுங்கின் முன்னணி கதாநாயகர்களான ராம்சரண் தேஜா மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். டிவிவி தானய்யா தயாரிக்கும் இந்தப் படம் பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாகி வருகிறது. இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய 5 மொழிகளில் உருவாகி வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது. இன்னும் 2 பாடல் காட்சிகள் மட்டுமே எஞ்சியுள்ளது. அதில் ஒரு பாடல் காட்சியை வெளிநாட்டில் படமாக்க முடிவு செய்து, அதற்கான இடத்தை தேடி வந்த ராஜமவுலி, இறுதியாக உக்ரைனில் படமாக்க முடிவு செய்துள்ளாராம். இதற்காக ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர், ஆலியா பட் உள்ளிட்ட படக்குழுவினர் விரைவில் ...
‘இந்தியன் 2’ பிரச்சனை எதிரொலி….ஷங்கருக்கு ராம்சரண் புதிய நிபந்தனை!

‘இந்தியன் 2’ பிரச்சனை எதிரொலி….ஷங்கருக்கு ராம்சரண் புதிய நிபந்தனை!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
‘இந்தியன் 2’பிரச்சனை எதிரொலி....ஷங்கருக்கு ராம்சரண் புதிய நிபந்தனை! கமல்ஹாசன் நடிக்கும் ‘இந்தியன் 2’ படம் முடங்கியதால், இயக்குனர் ஷங்கர் தெலுங்கில் ராம்சரணை வைத்து புதிய படம் இயக்க தயாரானார். இதுபோல் ரன்வீர் சிங் கதாநாயகனாக நடிக்க அந்நியன் படத்தின் இந்தி ரீமேக்கை இயக்க உள்ளதாகவும் அறிவித்தார். இது சர்ச்சையானது. ‘இந்தியன் 2’ படத்தை முடித்துக் கொடுக்காமல் வேறு படங்களை இயக்க ஷங்கருக்கு தடை விதிக்கும்படி கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது. இந்தப் பிரச்சினையில் இருதரப்புக்கும் நடந்த சமரச பேச்சுவார்த்தையும் தோல்வி அடைந்துள்ளது. ஷங்கர் ‘இந்தியன் 2’ படத்தை முடிக்காமல் தெலுங்கு, இந்திப் படங்களை இயக்க அனுமதிக்க வேண்டாம் என்று அங்குள்ள திரைப்பட வர்த்தக சபைகளுக்கும் ‘இந்தியன் 2’ பட நிறுவனம் கடிதம் அனுப்பி உள்ளது. இந்த சர்ச்சைகளை தொடர்ந்து ஷங்கர் இயக்கும் படத்தில் நடிக்க ராம்சரண் தயங்குவத...
ராம்சரண் முதல்வரா- இயக்குனர் ஷங்கர்!

ராம்சரண் முதல்வரா- இயக்குனர் ஷங்கர்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்த இந்தியன் 2 படம், விபத்து, கொரோனா பரவல், கமல்ஹாசனின் அரசியல் பணிகள் போன்ற காரணங்களால் பல மாதங்களாக முடங்கி உள்ளது. இதனால் அப்படத்தை கிடப்பில் போட்டுள்ள இயக்குனர் ஷங்கர், அடுத்ததாக தெலுங்கு நடிகர் ராம்சரணை வைத்து புதிய படம் ஒன்றை இயக்க உள்ளார். இப்படத்தில் ராம்சரணுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை கியாரா அத்வானி நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இப்படத்தின் கதை குறித்த புதிய தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி இது அரசியல் படமாக உருவாக உள்ளதாகவும், ராம்சரண் இப்படத்தில் முதல்வராக நடிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் இது முதல்வன் படத்தின் இரண்டாம் பாகமாக இருக்கலாம் எனவும் தகவல் பரவி வருகிறது. இந்த படத்தை தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் வெளியிட திட்டமிட்டு உள்ளனர். படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது....
ஷங்கரின் அடுத்த 2 படங்களில் நடிக்கும் பாலிவுட் நடிகை!

ஷங்கரின் அடுத்த 2 படங்களில் நடிக்கும் பாலிவுட் நடிகை!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, NEWS, Photos, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
ஷங்கரின் அடுத்த 2 படங்களில் நடிக்கும் பாலிவுட் நடிகை! ஷங்கர் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வந்த படம் ‘இந்தியன் 2’. படப்பிடிப்பு தளத்தில் ஏற்பட்ட விபத்து காரணமாக கடந்தாண்டு நிறுத்தப்பட்ட இப்படத்தின் படப்பிடிப்பு, தற்போது வரை தொடங்கப்படவில்லை. கொரோனா அச்சுறுத்தல் மற்றும் கமலின் தேர்தல் பணி காரணமாக அப்படத்தை கிடப்பில் போட்டுள்ள ஷங்கர், அடுத்த படம் இயக்க தயாராகி வருகிறார். அதன்படி இயக்குனர் ஷங்கர், அடுத்ததாக பிரபல தெலுங்கு நடிகர் ராம்சரணை வைத்து படம் இயக்க உள்ளார். அதேபோல் பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங்கை வைத்து ஒரு படம் இயக்கவும் ஒப்பந்தமாகி உள்ளாராம். இது அந்நியன் படத்தின் ரீமேக் என கூறப்படுகிறது. இந்நிலையில், இந்த இரண்டு படங்களுக்கும் பிரபல பாலிவுட் நடிகை கியாரா அத்வானி ஹீரோயினாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகக்கூடும் என ...