வருமானவரித்துறை விழாவுக்கு வராவிட்டால் ஷூட்டிங் ஸ்பாட்டில் வந்து பிடிப்போம் – ரெய்டு மிரட்டலால் பயந்தாரா நயன்தாரா!?
வருமான வரி துறை நிகழ்ச்சிக்கு நயன்தாரா போனதற்கு "ரெய்டு" பயமா?!
தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் என்ற அடையாளத்தோடு வலம் வருபவர் நயன்தாரா. ஆண்டுக்கு ஆண்டு வயசு கூடினாலும் தனது மார்க்கெட்டையும், சம்பளத்தையும் உயர்த்திக் கொண்டே போகும் நயன்தாராவுக்கு பொது நிகழ்ச்சிகள் என்றால் மட்டும் அலர்ஜி.
பலகோடி சம்பளம் கொடுத்து தன்னை வைத்து படம் தயாரிக்கும் பட விழாக்களுக்கு கூட வர மாட்டார் நயன்தாரா என்பது பல ஆண்டுகளாக அவர் மீதான் குற்றச்சாட்டு.
ஆனாலும் ரசிகர்கள் விருப்பத்தால் வேறு வழியின்றி நயன்தாரா பின்னால் ஓட வேண்டிய நிலைக்கு தமிழ் சினிமா தள்ளப்பட்டுள்ளது.
பணம் மொத்தமாக வருகிறது சம்பளம் கேட்டது கிடைக்கிறது என்பதற்காக தனது நெற்றிக்கண் படத் தயாரிப்பையே நிறுத்தி விட்டு ஐசரி கணேஷ் தயாரிக்கும் மூக்குத்தி அம்மன் படத்தில் நடிக்க போனார் நயன்தாரா. இந்த படத்தில் நயனுக்கு...


