Tag: விஜயகாந்த

கேப்டன் விஜயகாந்த்தை சந்தித்து ஆதரவு கேட்ட ஐசரி-பாக்யராஜ் தலைமையிலான சுவாமி சங்கரதாஸ் அணி..!

கேப்டன் விஜயகாந்த்தை சந்தித்து ஆதரவு கேட்ட ஐசரி-பாக்யராஜ் தலைமையிலான சுவாமி சங்கரதாஸ் அணி..!

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், நடிகர்கள், நடிகைகள்
  நடிகர் சங்க தேர்தலில் போட்டியிடும் பாக்கியராஜ் தலைமையிலான ஸ்வாமி சங்கரதாஸ் அணியினர் நடிகர் விஜயகாந்த் இல்லத்தில் அவரை சந்தித்தனர். மேலும் இந்த சந்திப்பின் போது, தலைவர் பதவிக்கு போட்டியிடும் பாக்கியராஜ், பொதுசெயலாளர் பதவிக்கு போட்டியிடும் ஐசிரி.கணேஷ், பொருளாளர் பிரசாந்த், துணை தலைவர்கள் குட்டி பத்தமினி, உதயா மற்றும் ரமேஷ் கண்ணா ஆகியோர் தற்போது தேமுதிக தலைவர் விஜயகாந்த் அவர்களை நேரில் சந்தித்து ஆதரவு கேட்டனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஐசரி கனேஷ் பேட்டி: நடிகர் விஜயகாந்த்தை சந்தித்து எங்கள் அணிக்கு ஆதரவு அளிக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளோம். இன்னும் ரஜினி, கமல், விஜய், அஜித் உள்ளிட்ட பல நடிகர்களை சந்தித்து ஆதரவு கேட்க உள்ளோம். ராதாரவி மட்டுமின்றி எங்கள் அணிக்கு எல்லாருடைய ஆதரவும் உள்ளது என்றார். இந்த தேர்தலில் எந்த அரசியல் தலையீடும் இல்லை என்றும், நடிகர் சங்