சனிக்கிழமை, மே 2
Shadow

Tag: விமான விபத்து

கேரளா விமான விபத்தில் பலி எண்ணிக்கை 19 ஆக உயர்வு!

கேரளா விமான விபத்தில் பலி எண்ணிக்கை 19 ஆக உயர்வு!

HOME SLIDER, NEWS, politics, உலக செய்திகள், செய்திகள்
துபாயில் இருந்து கேரளா வந்த சிறப்பு விமானம் விபத்தில் சிக்கியதில் பலி எண்ணிக்கை 19 ஆக உயர்வு. துபாயில் இருந்து கேரள மாநிலம் கோழிக்கோடு கரிப்பூர் விமான நிலையத்திற்கு நேற்று ஏர் இந்தியாவின் ஐ.எக்ஸ்.-1344 விமானம் வந்தடைந்தது. அந்த விமானத்தில் 184 பயணிகள் மற்றும் 6 விமான பணிக்குழுவினர் என மொத்தம் 190 பேர் பயணம் செய்தனர். கோழிக்கோடு விமான நிலையத்தை வந்தடைந்த விமானம் 10-வது ஓடுதளத்தில் தரையிறங்க முற்பட்டது. ஆனால் அப்போது ஓடுதளத்தில் வழுக்கிக்கொண்டு அருகில் உள்ள பள்ளத்தில் கவிழ்ந்து விமானம் விபத்துக்குள்ளானது. இதில் விமானம் இரண்டு பாகங்களாக உடைந்தது. இந்த விபத்து குறித்து தகவலறிந்த அருகில் வசித்து வந்த கிராமத்தினர் உடனடியாக சம்பவம் நடைபெற்ற பகுதிக்கு விரைந்து சென்று விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். கிராமத்தினர் மீட்பு பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த சிறிது நேரத்தில் அர...
தரையிறங்கும் போது வீடுகளின் மீது விழுந்து நொறுங்கி தீப்பிடித்து சிதறிய பயணிகள் விமானம்… பாக்., சோகம்!

தரையிறங்கும் போது வீடுகளின் மீது விழுந்து நொறுங்கி தீப்பிடித்து சிதறிய பயணிகள் விமானம்… பாக்., சோகம்!

HOME SLIDER, NEWS, politics, உலக செய்திகள், உலகம், செய்திகள்
  தரையிறங்கும் போது வீடுகளின் மீது நொறுங்கி வெடித்து சிதறிய பயணிகள் விமானம்... பாக்., சோகம்! பாகிஸ்தானின் கராச்சி விமான நிலையம் அருகே இன்று, பயணிகள் விமானம் நொறுங்கி விழுந்து விபத்துக்குள்ளானது. லாகூரில் இருந்து புறப்பட்டு வந்த அந்த விமானம், கராச்சி விமான நிலையத்தை நெருங்கியபோது, கட்டுப்பாட்டை இழந்து வீடுகளின் மீது மோதி தரையில் விழுந்தது. விழுந்த வேகத்தில் விமானம் தீப்பிடித்து எரிந்தது. அந்த விமானத்தில் 107 பயணிகள் பயணம் செய்தனர். அவர்களில் பெரும்பாலானவர்கள் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. வீடுகளில் இருந்தவர்களும் உயிரிழந்ததிருக்க வாய்ப்பு உள்ளது. விபத்து குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் மற்றும் மீட்புக்குழுவினர் சம்பவ இடத்திற்கு சென்று மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்  ...
தரையிறங்கிய போது இரண்டாக உடைந்து தீ பிடித்த துருக்கி விமானம்!

தரையிறங்கிய போது இரண்டாக உடைந்து தீ பிடித்த துருக்கி விமானம்!

HOME SLIDER, NEWS, செய்திகள்
  தரையிறங்கிய போது இரண்டாக உடைந்து தீ பிடித்த விமானம்! துருக்கியின் ஏஜியன் நகரில் இருந்து தலைநகர் இஸ்தான்புல் சபிகா காக்சன் விமான நிலையத்திற்கு இன்று ஒரு பயணிகள் விமானம் வந்தது. பெகாசஸ் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் அந்த விமானம், இஸ்தான்புல் விமான நிலையத்தில் தரையிறங்கும்போது ஓடுபாதையில் சறுக்கிக்கொண்டு வேகமாக சென்றது. பின்னர் ஓடுபாதையைவிட்டு விலகி சாலையில் மோதி நின்றது. மோதிய வேகத்தில் விமானம் இரண்டாக உடைந்துள்ளது. அத்துடன் விமானத்தின் உட்பகுதியில் தீப்பிடித்துள்ளது. மீட்புக் குழுவினர் மற்றும் தீயணைப்பு வீரர்கள் உடனடியாக ஓடுபாதைக்கு விரைந்து சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டனர். விமானம் உடைந்த பகுதி வழியாக பயணிகள் மீட்கப்பட்டனர். வானிலை மிகவும் ஈரப்பதமாக இருந்ததால் விமானம் ஓடுபாதையில் நிற்காமல் சறுக்கியதாக தகவல் வெளியாகி உள்ளது. விபத்தில் உடைந்த விமானம் மற்றும் அதன் உட்பக...
விழுந்து நொறுங்கியதா… இந்திய விமானப்படை விமானம் திடீர் மாயம்… அதிர்ச்சியில் இராணுவம்..!

விழுந்து நொறுங்கியதா… இந்திய விமானப்படை விமானம் திடீர் மாயம்… அதிர்ச்சியில் இராணுவம்..!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  இந்திய விமானப்படை விமானம் திடீர் மாயம்... அதிர்ச்சியில் இராணுவம்..! இந்திய விமானப்படைக்கு சொந்தமான அண்டனோவ் ஏ.எந்32 ரக போக்குவரத்து விமானம் அசாமின் ஜோர்கத் விமான தளத்திலிருந்து திங்கள் கிழமை மதியம் 12.25க்கு புறப்பட்டுள்ளது. அதில் விமானி உட்பட மொத்தம் 13 பேர் பயணித்திருக்கிறார்கள். மதியம் 1 மணியளவில் அருணாச்சல பிரதேசத்தின் மலைப்பகுதிகளில் பறந்து கொண்டிருந்த விமானத்தின் ராடார் இணைப்பு திடீரென துண்டிக்கப்பட்டது. அதிகாரிகள் எவ்வளவு முயற்சி செய்தும் விமானத்தை தொடர்பு கொள்ள முடியவில்லை. இதுகுறித்து பாதுகாப்புத்துறைக்கு புதிதாக பதவியேற்ற அமைச்சர் ராஜ்நாத்சிங் தனது டிவிட்டர் பதிவில் “காணாமல் போன விமானம் குறித்து விமானப்படை துணை தலைவர் ராகேஷ் சிங்கிடம் பேசியுள்ளேன். விமானத்தில் பயணித்த அனைவரும் நலமுடன் திரும்ப பிரார்த்திக்கிறேன்” என தெரிவித்துள்ளார். https://twitter.com/rajna...