வெள்ளிக்கிழமை, ஏப்ரல் 26
Shadow

Tag: அமெரிக்காவில் அவசர நிலை

ஜூன் 1ம் தேதிக்கு பின்பே கொரானா பீதிக்கு விடிவு பிறக்கும் – அமெரிக்க அதிபர் டிரம்ப் கவலை

ஜூன் 1ம் தேதிக்கு பின்பே கொரானா பீதிக்கு விடிவு பிறக்கும் – அமெரிக்க அதிபர் டிரம்ப் கவலை

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  ஜூன் 1ம் தேதிக்கு பின்பே கொரானா பீதிக்கு விடிவு பிறக்கும் - அமெரிக்க அதிபர் டிரம்ப் கவலை உலகம் முழுவதும் பீதியை ஏற்படுத்தி உள்ள உயிர்க்கொல்லி வைரசான கொரானாவை கட்டுப்படுத்த முடியாமைல் உலக நாடுகள் திணறி வருகின்றன. சீனாவில் தொடங்கி பின்னர் படிப்படியாக இத்தாலி, ஸ்பெயின், பிரான்ஸ், ஈரான் ஆகிய நாடுகளைத் தொடர்ந்து வல்லரசு நாடான அமெரிக்காவிலும் கொரானா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. கொரானா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அமெரிக்காவில்தான் அதிகம். இன்று காலை நிலவரப்படி அமெரிக்காவில் 1 லட்சத்து 42 ஆயிரத்து 70 பேருக்கு கொரானா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில் 2484 பேர் உயிரிழந்துள்ளனர். 4500க்கும் மேற்பட்டோர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். அமெரிக்காவில் நோய்த் தடுப்பு நடவடிக்கை மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெற்றபோதிலும், கடந்த சில தினங்களாக...
சீனா, இத்தாலியை பின்னுக்கு தள்ளி கொரானா தாக்குதலில் உலக அளவில் முதலிடத்தை எட்டிய அமெரிக்கா!

சீனா, இத்தாலியை பின்னுக்கு தள்ளி கொரானா தாக்குதலில் உலக அளவில் முதலிடத்தை எட்டிய அமெரிக்கா!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  கொரானா தாக்குதலில் உலக அளவில் முதலிடத்தை எட்டிய அமெரிக்கா! மிக வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் தற்போது உலகின் 198 நாடுகளில் பரவியுள்ளது. இந்த வைரஸ் தாக்குதலின் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. உயிர் பலிகளின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே போகிறது. உலகம் முழுவதும் இதுவரை 5 லட்சத்து 29 ஆயிரத்து 614 பேருக்கு இந்த வைரஸ் பரவியுள்ளது. இவர்களில் இதுவரை 23 ஆயிரத்து 976 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 3 லட்சத்து 82 ஆயிரத்து 258 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் இதுவரை ஒரு லட்சத்து 23 ஆயிரத்து 976 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். கொரோனா வைரஸ் சீனா, ஐரோப்பிய நாடுகளை தொடர்ந்து தற்போது அமெரிக்காவில் நிலை கொண்டுள்ளது. அந்நாட்டில் வைரஸ் பயங்கர வேகத்தில் பரவி வருகிறது. இந்நிலையில், அமெரிக்காவில் நேற்று ஒ...
அமெரிக்காவில் அவசர நிலை பிரகடனம்… கொரானா வைரஸ் தடுக்க – டிரம்ப் அறிவிப்பு

அமெரிக்காவில் அவசர நிலை பிரகடனம்… கொரானா வைரஸ் தடுக்க – டிரம்ப் அறிவிப்பு

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
    சீனாவில் ஹூகான் நகரில் கடந்த டிசம்பர் மாதம் உருவான கொரோனா வைரஸ் தற்போது உலகையே அச்சுறுத்தி வருகிறது. உலகம் முழுவதும் சுமார் 121 நாடுகளுக்கு பரவியுள்ள இந்த வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 5 ஆயிரத்து 43 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 1 லட்சத்து 34 ஆயிரத்து 300-க்கும் அதிகமானோருக்கு வைரஸ் பரவி இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவிலும் 2 பேர் பலியாகி உள்ளனர். இந்த சூழலில் அமெரிக்காவிலும் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 41 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 2 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதால் அமெரிக்கா முழுவதும் அவசர நிலை பிரகடனம் செய்வதாக அதிபர் டொனால்டு டிரம்ப் இன்று அறிவித்துள்ளார். இது குறித்து அவர் வெள்ளை மாளிகையில் இன்று செய்தியாளர்களிடம் கூறுகையில், '' நான் அதிகாரப்பூர்வமாக தேசிய அவசர...