புதன்கிழமை, ஜூலை 29
Shadow

ஜூன் 1ம் தேதிக்கு பின்பே கொரானா பீதிக்கு விடிவு பிறக்கும் – அமெரிக்க அதிபர் டிரம்ப் கவலை

 

ஜூன் 1ம் தேதிக்கு பின்பே கொரானா பீதிக்கு விடிவு பிறக்கும் – அமெரிக்க அதிபர் டிரம்ப் கவலை

உலகம் முழுவதும் பீதியை ஏற்படுத்தி உள்ள உயிர்க்கொல்லி வைரசான கொரானாவை கட்டுப்படுத்த முடியாமைல் உலக நாடுகள் திணறி வருகின்றன.

சீனாவில் தொடங்கி பின்னர் படிப்படியாக இத்தாலி, ஸ்பெயின், பிரான்ஸ், ஈரான் ஆகிய நாடுகளைத் தொடர்ந்து வல்லரசு நாடான அமெரிக்காவிலும் கொரானா வைரஸ் வேகமாக பரவி வருகிறது.

கொரானா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அமெரிக்காவில்தான் அதிகம். இன்று காலை நிலவரப்படி அமெரிக்காவில் 1 லட்சத்து 42 ஆயிரத்து 70 பேருக்கு கொரானா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில் 2484 பேர் உயிரிழந்துள்ளனர். 4500க்கும் மேற்பட்டோர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

அமெரிக்காவில் நோய்த் தடுப்பு நடவடிக்கை மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெற்றபோதிலும், கடந்த சில தினங்களாக புதிய நோயாளிகளின் வருகை அதிகரித்துள்ளது. இறப்பு விகிதமும் பெருமளவில் உயர்ந்து வருகிறது. அடுத்த இரண்டு வாரங்களில் வைரஸ் தாக்கம் மற்றும் உயிரிழப்பு உச்சத்தை அடையலாம் என அதிபர் டிரம்ப் கவலை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் டிரம்ப் பேசுகையில், ‘கொரானா வைரஸ் பாதிப்பால் அமெரிக்காவில் அடுத்த இரு வாரங்களில் பலி எண்ணிக்கை உச்சக்கட்டத்தை எட்டும்.

உயிரிழப்பை 1 லட்சத்திற்குள் கட்டுப்படுத்தினாலே பெரிய விஷயம். வைரஸ் பரவலை தடுக்கும் நடவடிக்கை தீவிரப்படுத்தப்படும். சமூக விலகல் உத்தரவை மேலும் ஒரு மாதத்திற்கு அதாவது, ஏப்ரல் 30 வரை நீட்டிக்கப்படுகிறது. ஜூன் 1ம் தேதிக்கு மேல் விடிவு பிறக்கும்’ என்றார்.

அமெரிக்க அதிபரின் இந்த கருத்தால் உலகின் வளர்ந்த பல நாடுகளும் அதிர்ந்து போய் உள்ளது.

744 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன