செவ்வாய்க்கிழமை, ஏப்ரல் 23
Shadow

Tag: அரசியல்

நடிகர் ரஜினி கவர்னர் ஆகிறார்?

நடிகர் ரஜினி கவர்னர் ஆகிறார்?

CINI NEWS, HOME SLIDER, politics, அரசியல், சினி நிகழ்வுகள், தமிழக அரசியல், நடிகர்கள்
நடிகர் ரஜினிகாந்த் சமீபத்தில் டெல்லி சென்று பிரதமர் மோடியை சந்தித்து பேசிவிட்டு வந்த சூட்டோடு சூடாக தமிழக கவர்னர் ஆர்.என்.ரவியை சந்தித்துப் பேசியது பலவிதமான யூகங்களை அரசியல் வட்டாரத்தில் ஏற்படுத்தி இருக்கிறது. கவர்னருடன் அரசியல் பேசினேன் என்று ரஜினி "பளீர்" என கூறியதும் விவாதமாகி இருக்கிறது. உண்மையில் கவர்னர் ஆர்.என்.ரவி-ரஜினி சந்திப்பில் என்னதான் நடந்திருக்கும் என்ற கேள்விக்குறி எல்லோரது மனதிலும் எழுந்துள்ளது. 2024-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பு தமிழகத்தில் பாரதிய ஜனதாவை மேலும் வலுப்படுத்த வேண்டும் என்பதில் பா.ஜ.க. மேலிட தலைவர்கள் மிக, மிக தீவிரமாகி இருக்கிறார்கள். அந்த இலக்கின் ஒரு பகுதிதான் கவர்னர் ரவி-ரஜினி சந்திப்பு என்கிறார்கள். ரஜினியை பயன்படுத்திக் கொள்வதில் பாரதிய ஜனதா வட்டாரத்தில் ஆதரவும் இருக்கிறது. எதிர்ப்பும் இருக்கிறது. பிரதமர் மோடி, ரஜினியை விரு...
அரசியல் வெற்றிக்கு முதலில் எழுச்சி வேண்டும்… அடுத்தது அலை கடைசியில் சுனாமி ஏற்பட வேண்டுமாம் – சொல்வது ரஜினி !

அரசியல் வெற்றிக்கு முதலில் எழுச்சி வேண்டும்… அடுத்தது அலை கடைசியில் சுனாமி ஏற்பட வேண்டுமாம் – சொல்வது ரஜினி !

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
    அரசியல் வெற்றிக்கு முதலில் எழுச்சி வேண்டும்... அடுத்தது அலை கடைசியில் சுனாமி ஏற்பட வேண்டுமாம் - சொல்வது ரஜினி ! ஒரு தனியார் விழாவில் ரஜினி பேசியதாவது: அரசியலில் அலை முக்கியம். அதனால் தான், அலை உண்டாக வேண்டும்; இயக்கம் உருவாக வேண்டும் என்றேன். உடனே, ‘இவர் வர மாட்டாரா’ என, கேட்கின்றனர். எனவே ஒரு விஷயத்தை சொல்ல நினைக்கிறேன். சினிமாவில் இருந்து வந்த, எம்.ஜி.ஆர்., முதல்வரானார். அவர், 25 ஆண்டுகள், தி.மு.க.,வில் இருந்தார்; ரொம்ப நல்லவர்; நிறைய உதவிகள் செய்துள்ளார். கருணாநிதி முதல்வராக, அவரும் மிகப்பெரிய காரணம் இருந்தார். திமுக.வில் பொருளாளராக இருந்த அவர், கணக்கு கேட்டதற்காக, கட்சியில் இருந்து நீக்கினார்கள். அவராக வெளியே சென்றிருந்தால் அது சரியாக இருந்திருக்காது. அவரை வெளியேற்றிய பின்னர் ‘என்ன தவறு செய்தேன்; கணக்கு கேட்டது தப்பா’ என, கேட்டார். அனுதாப அலை வீசியது. ...
என் மீதோ, என் ரசிகர்கள் மீதோ அரசியல் சாயம் பூசவேண்டாம்… வாக்களிப்பது மட்டுமே என் அதிகபட்ச அரசியல்பணி – அஜீத் அதிரடி அறிக்கை

என் மீதோ, என் ரசிகர்கள் மீதோ அரசியல் சாயம் பூசவேண்டாம்… வாக்களிப்பது மட்டுமே என் அதிகபட்ச அரசியல்பணி – அஜீத் அதிரடி அறிக்கை

CINI NEWS, HOME SLIDER, NEWS, Photos, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
வாக்களிப்பது மட்டுமே எனது அரசியல் கடமை தமிழ்நாட்டு அரசியலில் கடந்த சில நாட்களாக அஜித் ரசிகர்கள் சிலர் பாஜக-வில் இணைந்ததாக செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. அவற்றிற்கு பதிலளிக்கும் விதமாக அஜித் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். வாக்களிப்பது மட்டுமே எனது உச்சகட்ட அரசியல் தொடர்பு என்று தெரிவித்திருக்கிறார். மேலும், சமூக வலைத்தளங்களில் மற்ற நடிகர்களைப் பற்றி வசைபாடுவதை தான் என்றுமே ஆதரித்ததில்லை என்றும் தெரிவித்திருக்கிறார். ”நான்‌ தனிப்பட்ட முறையிலோ அல்லது நான்‌ சார்ந்த திரைப்படங்களில்‌ கூட அரசியல்‌ சாயம்‌ வந்து விடக்‌கூடாது என்பதில்‌ மிகவும்‌ தீர்மானமாக உள்ளவன்‌ என்பது அனைவரும்‌ அறித்ததே. என்னுடைய தொழில்‌ சினிமாவில்‌ நடிப்பது மட்டுமே என்பதை நான்‌ தெளிவாக புரிந்து வைத்து இருப்பதே இதற்குக் காரணம்‌. சில வருடங்களுக்கு முன்னர்‌ என்‌ ரசிகர்‌ இயக்கங்களை நான...
முழு நேர அரசியலுக்காக சினிமாவுக்கு கமல் முழுக்கு..!

முழு நேர அரசியலுக்காக சினிமாவுக்கு கமல் முழுக்கு..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
    1996ம் ஆண்டு கமல்-ஷங்கர் கூட்டணியில் வெளியான ‘இந்தியன்’ திரைப்படம் சுதந்திர போரட்டத்துக்கு பின், நாட்டில் ஊடுருவிய ஊழலை மையமாகக் கொண்டு உருவானது. இந்த திரைப்படம் அப்போதே ரூ.50 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. இந்நிலையில், இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகவுள்ளதாகவும், லைகா நிறுவனம் தயாரிப்பதாகவும் அறிவிக்கப்பட்டது. இப்படத்தின் ஆரம்பக்கட்ட பணிகள் நிறைவடைந்து வரும் டிச.14ம் தேதி முதல் ஷூட்டிங்கை துவக்க இயக்குநர் ஷங்கர் திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது. இப்படத்தில் கமல்ஹாசனுக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்கவுள்ளார். இந்நிலையில், ‘இந்தியன் 2’ திரைப்படம் தான், தனது கடைசி திரைப்படம் என்றும், அதற்கு பின் நடிப்புக்கு முழுக்குப் போட்டு நடிகர் கமல்ஹாசன் தீவிர அரசியலில் களமிறங்கவுள்ளதாகவும் கூறப்பட்டது. ஆனால், 1992ம் ஆண்டு வெளியாகி ஆஸ்கருக்கு சென்று வந்த ‘தேவ...
இலங்கை அரசில் மற்றொரு அதிரடி ராஜபக்சே பிரதமர் அலுவலக செலவுகளை செய்வதற்கு தடை

இலங்கை அரசில் மற்றொரு அதிரடி ராஜபக்சே பிரதமர் அலுவலக செலவுகளை செய்வதற்கு தடை

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  இலங்கை அதிபர் சிறிசேனா கடந்த அக்டோபர் மாதம் 26-ந்தேதி பிரதமர் விக்ரமசிங்கேவை அதிரடியாக நீக்கிவிட்டு, முன்னாள் அதிபர் ராஜபக்சேவை பிரதமராக நியமித்தார். அன்று முதல் இலங்கையில் அரசியல் நெருக்கடி உருவானது. பின்னர் சிறிசேனா, சுமார் 20 மாதங்கள் முன்னதாகவே நாடாளுமன்றத்தை கலைத்துவிட்டு, உடனே தேர்தல் நடத்த உத்தரவிட்டார். ஆனால் சுப்ரீம் கோர்ட்டு அதிபரின் முடிவை ஏற்கமறுத்து, தேர்தல் நடவடிக்கைகளை நிறுத்திவைத்தது. விக்ரமசிங்கே, ராஜபக்சே இருவரும் தாங்கள் தான் பிரதமர் என்று அறிவித்தனர். விக்ரமசிங்கே தன்னை நீக்கியது செல்லாது, தனக்கே நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை உள்ளது என்று கூறிவந்தார். சபாநாயகர் கரு ஜெயசூரியா, ராஜபக்சே தனது பெரும்பான்மையை நிரூபிக்கும் வரை அவரை சட்டப்படி பிரதமராக இந்த அவை ஏற்றுக்கொள்ளாது என்று அறிவித்தார். விக்ரமசிங்கேவின் ஐக்கிய தேசிய முன்னணி ராஜபக்சே மீது 3 நம்பிக்கையி...