திங்கட்கிழமை, ஏப்ரல் 29
Shadow

Tag: ஆப்கானிஸ்தான்

ஆப்கானிஸ்தானில் ஒரு வருடத்திற்கு பிறகு சினிமா தியேட்டர்கள் திறப்பு!

ஆப்கானிஸ்தானில் ஒரு வருடத்திற்கு பிறகு சினிமா தியேட்டர்கள் திறப்பு!

CINI NEWS, HOME SLIDER, NEWS, World News, உலக செய்திகள், சினி நிகழ்வுகள், செய்திகள்
20 வருட போருக்கு பிறகு ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் கடந்த ஆண்டு ஆட்சியை கைப்பற்றினார்கள். அவர்கள் ஆப்கானிஸ்தானில் ஆட்சியை பிடித்து ஒரு வருடம் முடிந்துள்ளது. தலிபான்கள் ஆட்சிக்கு வந்தது முதல் அவர்கள் பெண்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறார்கள். பெண்கள் தேவையில்லாமல் வெளியே வரக்கூடாது என்று கூறியுள்ளனர். பெண்கள் வெளியே வந்தால் உடலை முழுவதும் மூடியபடி வர வேண்டும் என்ற கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர். பெண்கள் மேல்நிலை கல்வி கற்க தடை பிறப்பித்துள்ளனர். கல்விக்காக வெளிநாடு செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் தலிபான்கள் ஆட்சிக்கு வந்த பிறகு சினிமா தியேட்டர்களையும் மூடிவிட்டனர். இந்த நிலையில் ஒரு வருடத்துக்கு பிறகு சினிமா தியேட்டர்களை திறக்க தலிபான்கள் அனுமதி அளித்துள்ளனர். இதனால் ஆப்கானிஸ்தானில் ஒரு வருடத்துக்கு பிறகு மீண்டும் சினிமா தியேட்டர்கள் திறக்கப்பட உள...
ஆப்கானிஸ்தானில் ஐ.நா. பெண் ஊழியர்களும் ஹிஜாப் அணிவது கட்டாயம்-தலிபான்கள் உத்தரவு!

ஆப்கானிஸ்தானில் ஐ.நா. பெண் ஊழியர்களும் ஹிஜாப் அணிவது கட்டாயம்-தலிபான்கள் உத்தரவு!

HOME SLIDER, NEWS, World News, உலக செய்திகள், செய்திகள்
ஆப்கானிஸ்தானில் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றிய தலிபான்கள் தங்களின் ஆட்சியில் பெண்களுக்கு சம உரிமை வழங்கப்படும் என உறுதி அளித்தனர். ஆனால் அதற்கு நேர்மாறாக பெ ண்களின் அடிப்படை உரிமைகளை பறிக்கும் வகையிலான கட்டுப்பாடுகளை தொடர்ந்து விதித்து வருகின்றனர். சமீபத்தில் ஆப்கானிஸ்தானை சேர்ந்த சிறுமிகள் 6-ம் வகுப்புக்கு மேல் படிப்பை தொடர தலிபான்கள் தடை விதித்தது சர்வதேச அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்தநிலையில் ஆப்கானிஸ்தானில் பணிபுரியும் அனைத்து பெண்களும் ஹிஜாப் அணிவது ஏற்கனவே கட்டாயமாக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது, ஆப்கானிஸ்தானில் உள்ள ஐ.நா. உதவிக்குழுவில் பணியாற்றும் பெண் ஊழியர்களும் இனி கட்டாயம் ஹிஜாப் அணிய வேண்டும் என தலிபான்கள் உத்தரவு பிறப்பித்துள்ளனர். இதுகுறித்து அவர்கள் வெஆப்கானிஸ்தானில் ஐ.நா. பெண் ஊழியர்களும் ஹிஜாப் அணிவது கட்டாயம் என தலிபான்கள் உத்தரவு ப...
ஆப்கான் தூதரக ஊழியர்கள் உள்பட 150 பேருடன் இந்திய தூதர் டெல்லி திரும்பினார்!

ஆப்கான் தூதரக ஊழியர்கள் உள்பட 150 பேருடன் இந்திய தூதர் டெல்லி திரும்பினார்!

HOME SLIDER, NEWS, உலக செய்திகள், செய்திகள்
ஆப்கான் தூதரக ஊழியர்கள் உள்பட 150 பேருடன் இந்திய தூதர் டெல்லி திரும்பினார்! ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றி விட்டனர். இதனால் அங்குள்ள இந்தியர்கள் மற்றும் வெளிநாட்டினரின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி இருக்கிறது. இந்தியர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய எல்லா நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்தது. இந்தியர்களை அவசரமாக வெளியேற்ற திட்டம் வகுக்கப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்தது. அதன்படி, நேற்று முன்தினம் இந்திய விமானப்படைக்கு சொந்தமான இரண்டு சி-17 குளோப்மாஸ்டர் விமானங்கள் காபூலுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. ஒரு விமானத்தில், இந்திய தூதரக ஊழியர்கள் உள்பட 40 பேர் நேற்று முன்தினம் இந்தியாவுக்கு அழைத்து வரப்பட்டனர். மற்றொரு விமானப்படை விமானத்தில் மீதியுள்ள இந்தியர்கள் அனைவரையும் அழைத்துவர திட்டமிடப்பட்டது. ஆனால், இந்திய தூதரகம் அமைந்துள்ள உயர் பாதுகாப்பு பகுதிக்குள் தலிப...
தலிபான் தொடர்புடைய வாட்ஸ் அப் கணக்குகள் முடக்கம்!

தலிபான் தொடர்புடைய வாட்ஸ் அப் கணக்குகள் முடக்கம்!

HOME SLIDER, NEWS, உலக செய்திகள், செய்திகள்
தலிபான் தொடர்புடைய வாட்ஸ் அப் கணக்குகள் முடக்கம்! ஆப்கானிஸ்தானில் தலிபான்களுக்கும் அந்த நாட்டு அரசுக்கும் இடையே நடந்து வந்த போர் முடிவுக்கு வந்து தலிபான்கள் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றி உள்ளனர். ‘ஆப்கானிஸ்தான்  தலிபான்கள் வசம் போய்விட்டது என்ற செய்தி வந்ததுமே, உலக நாடுகள் பலவும் அங்கு இருக்கும் தங்கள் நாட்டுத் தூதரகங்களைக் காலி செய்யும் பணிகளை தொடங்கின. அதேபோல், ஆப்கானிஸ்தான் மக்கள் மத்தியிலும் ஒருவித அசாதாரண சூழல் நிலவி வருகிறது. இதையடுத்து தலிபான்கள் மற்றும் அவர்களுக்கு ஆதரவான கணக்குகளை முடக்குவதாக நேற்று பேஸ்புக் நிறுவனம் அறிவித்தது. அமெரிக்க சட்டப்படி தலிபான்கள் பயங்கரவாத அமைப்பாக வகைப்படுத்தப்பட்டுள்ளதால் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக பேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் தலிபான்கள் தொடர்புடைய வாட்ஸ் அப் கணக்குகளும் முடக்கப்பட்டுள்ளது. தலிபான்கள் நிர்வாக தொடர்புக...
நாட்டை விட்டு வெளியேறும் போது மூட்டை மூட்டையாக பணத்தை அள்ளிச்சென்ற அதிபர்!

நாட்டை விட்டு வெளியேறும் போது மூட்டை மூட்டையாக பணத்தை அள்ளிச்சென்ற அதிபர்!

HOME SLIDER, NEWS, உலக செய்திகள், செய்திகள்
நாட்டை விட்டு வெளியேறும் போது மூட்டை மூட்டையாக பணத்தை அள்ளிச்சென்ற அதிபர்! ஆப்கானிஸ்தானை தலீபான் பயங்கரவாதிகள் முழுமையாக தங்கள் ஆளுகைக்குள் கொண்டு வந்துள்ளனர். நேற்று முன்தினம் தலைநகர் காபூலை கைப்பற்றிய அவர்கள், அதிபர் மாளிகைக்குள்ளும் புகுந்தனர். இதைத்தொடர்ந்து அதிபர் அஷ்ரப் கனி நாட்டை விட்டு தப்பி ஓடினார். அவர் அண்டை நாடான தஜிகிஸ்தானில் தஞ்சம் புகுந்திருப்பதாக கூறப்படுகிறது. அவர் நாட்டை விட்டு வெளியேறும்போது மூட்டை மூட்டையாக பணத்தை அள்ளிச்சென்ற தகவல் தற்போது வெளியாகி இருக்கிறது. அதாவது தப்பி செல்வதற்காக விமானப்படை தளத்துக்கு 4 கார்கள் நிறைய பணத்துடன் வந்த அவர், அங்கிருந்து ஹெலிகாப்டரில் தப்பி சென்றார். 4 கார்களில் கொண்டு வரப்பட்ட பணத்தை ஹெலிகாப்டரில் திணித்தனர். ஆனால் ஒரு அளவுக்கு மேல் அவர்களால் பணத்தை ஹெலிகாப்டருக்குள் ஏற்ற முடியவில்லை. எனவே கொஞ்சம் பணக்கட்டுகளை ஹெலிகாப்டர் நிறுத்தப...
ஆப்கானிஸ்தானில் விமானப்படை குண்டு வீச்சில் 200 தலிபான்கள் பலி!

ஆப்கானிஸ்தானில் விமானப்படை குண்டு வீச்சில் 200 தலிபான்கள் பலி!

HOME SLIDER, NEWS, உலக செய்திகள், செய்திகள்
ஆப்கானிஸ்தானில் விமானப்படை குண்டு வீச்சில் 200 தலிபான்கள் பலி! ஆப்கானிஸ்தான் நாட்டில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறி வருவதால் தலிபான் பயங்கரவாதிதிகளின் ஆதிக்கம் அதிகரித்து வருகிறது. ஏற்கனவே பல பகுதிகளை தங்கள் கைவசம் வைத்திருந்த தலிபான் பயங்கரவாதிகள் இப்போது ஒவ்வொரு பெரிய நகரங்களையும் கைப்பற்றி வருகிறார்கள். மாகாண தலைநகரங்களை கைப்பற்றும் முயற்சியில் தீவிரமாக சண்டையிட்டு வருகின்றனர். ஏற்கனவே தலிபான்களிடம் நிம்ரோஸ் மாகாண தலைநகரம் சாரஞ்ச் வீழ்ந்து இருந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் ஜவ்சான் மாகாண தலைநகரம் ஷெபர்கானை தலிபான்கள் கைப்பற்றினார்கள். 2 மாகாண தலைநகரங்கள் தலிபான்கள் கைவசம் சென்றுவிட்டதால் அடுத்து என்ன நடக்குமோ என்ற நிலை அங்கு நிலவுகிறது. தலிபான்கள் கைப்பற்றிய ஷெபர்கான் பகுதியை மீட்பதற்கு ஆப்கானிஸ்தான் ராணுவம் தாக்குதலை தொடங்கி உள்ளது. நகருக்குள் பதுங்கி இருக்கும...