புதன்கிழமை, ஏப்ரல் 29
Shadow

Tag: actor Vivek

தமிழக அரசு, காவல்துறை, ரசிகர்களுக்கு விவேக் குடும்பத்தினர் நன்றி!

தமிழக அரசு, காவல்துறை, ரசிகர்களுக்கு விவேக் குடும்பத்தினர் நன்றி!

HOME SLIDER, NEWS, செய்திகள், நடிகர்கள்
தமிழக அரசு, காவல்துறை, ரசிகர்களுக்கு விவேக் குடும்பத்தினர் நன்றி! காவல்துறை மரியாதையுடன் நடிகர் விவேக்கின் உடல் தகனம் செய்யப்பட்டதற்கு,  அவரது குடும்பத்தினர் அரசுக்கும், காவல்துறைக்கும், ரசிகர்களுக்கும் தங்கள் நன்றியை தெரிவித்துள்ளனர் கடந்த வெள்ளிக்கிழமை மாரடைப்பால் பாதிக்கப்பட்ட நடிகர் விவேக் சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு ஆஞ்சியோகிராம் உள்ளிட்ட தீவிர சிகிச்சையளிக்கப்பட்டது. இருப்பினும் சிகிச்சை பலனின்றி நேற்று காலை அவரது உயிர் பிரிந்தது. அவரது மறைவுக்கு பிரபலங்களும், ரசிகர்களும் நேரிலும், சமூக வலைதளங்களிலும் தங்களது இரங்கலை தெரிவித்தனர். இதையடுத்து விவேக்கின் உடல் முழு அரசு மரியாதையுடன் 78 குண்டுகள் முழங்க தகனம் செய்யப்பட்டது. இந்நிலையில் இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த விவேக்கின் குடும்பத்தினர் அரசு, காவல்துறை மற்றும் ரசிகர்களு...
நடிகர் விவேக் உடல் தகனம் செய்யப்பட்டது – 78 குண்டுகள் முழங்க காவல்துறை மரியாதை!

நடிகர் விவேக் உடல் தகனம் செய்யப்பட்டது – 78 குண்டுகள் முழங்க காவல்துறை மரியாதை!

HOME SLIDER, NEWS, செய்திகள், நடிகர்கள்
நடிகர் விவேக் உடல் தகனம் செய்யப்பட்டது - 78 குண்டுகள் முழங்க காவல்துறை மரியாதை! சென்னையில் வசித்து வந்த நடிகர் விவேக், மாரடைப்பு காரணமாக நேற்று (ஏப்.16) காலை 11 மணியளவில் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு மருத்துவமனையில் எக்மோ சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், இன்று (ஏப்.17) அதிகாலை 4.35 மணியளவில் அவர் உயிரிழந்ததாக மருத்துவமனை தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அவரின் உடல் விருகம்பாக்கத்திலுள்ள அவரது இல்லத்திற்கு கொண்டுசெல்லப்பட்டது. அங்கு அவரது நண்பர்கள், திரைத்துறை பிரபலங்கள், நடிகர்கள், நடிகைகள், பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர். இதையடுத்து மாலை 4 மணியளவில் விருகம்பாக்கத்தில் இருந்து, மேட்டுக்குப்பம் பகுதியில் உள்ள மின்மயானத்திற்கு அவரது உடல், ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டது. இறுதி ஊர்வலத்தில் ஏராளமான திரையுலக பிரபலங்களும்,...
நடிகர் விவேக்கிற்கு மாரடைப்பு – மருத்துவமனையில் தீவிர சிகிச்சை!

நடிகர் விவேக்கிற்கு மாரடைப்பு – மருத்துவமனையில் தீவிர சிகிச்சை!

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
நடிகர் விவேக்கிற்கு மாரடைப்பு - மருத்துவமனையில் தீவிர சிகிச்சை! தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் விவேக். இவர் தமது காமெடி மூலமாக மக்களுக்கு தேவையான நல்ல கருத்துக்களை கொண்டு சேர்த்துள்ளார். தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில், நடிகர் விவேக்கிற்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு, அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள விவேக்கின் உடல்நிலையை மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். நடிகர் விவேக் கடந்த சில தினங்களுக்கு முன்னர் சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது....