சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் பீஸ்ட். இந்தப் படம் வரும் 13-ம் தேதி வெளியாகவுள்ளது. இந்தப் படத்துக்கான முன் பதிவு கடந்த சில தினங்களுக்கு முன்னர் தொடங்கியது.
தொடங்கிய நாள் முதலே முன்பதிவு வேகமாக நடைபெற்றுவருகிறது. ரசிகர்களும் தீவிர கொண்டாட்டத்துக்கு தயாராகிவருகின்றன.
இந்த நிலையில், திருப்பூரில் ஒரு பின்னலாடை நிறுவனம் பீஸ்ட் பட வெளியீட்டுக்கு விடுமுறை அறிவித்துள்ளது.
திருப்பூர் முதலிபாளையம் சிட்கோவில் செயல்பட்டு வரும் நிட் பிரைன் என்ற தனியார் பின்னலாடை நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்கள்
பீஸ்ட் திரைப்படத்தை காண விடுமுறை கேட்டு வந்த நிலையில் நிறுவனம் சார்பில் அனைவருக்கும் பீஸ்ட் படத்திற்கான டிக்கெட் முன்பதிவு செய்து கொடுத்து, விடுமுறை அளித்துள்ளனர்
புத்தாண்டை முன்னிட்டு 14ம் தேதி விடுமுறை அளித்திருந்த நிலையில் ஊழியர்களை உற்சாகப்...
பீஸ்ட் படத்தின் இந்தி ட்ரைலர் வெளியிடப்பட்டுள்ளது. இதனை பிரபல பாலிவுட் நடிகர் வருண் தவான் ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். ’அதிரடியான #BeastHindiTrailer-ஐ அறிமுகப்படுத்துவதில் மகிழ்ச்சி. எப்போதும் விஜய் சாரின் தீவிர ரசிகன் நான்’ என அதில் குறிப்பிட்டுள்ளார்.
https://youtu.be/0q7bKjLa0Nc
விஜய் நடித்த பீஸ்ட் படத்துக்கு யு/ஏ சான்று... ஏப்ரல் 13ம் தேதி ரிலீஸ்!
நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள பீஸ்ட்(Beast) திரைப்படம். இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தின் அனைத்து பணிகளும் நிறைவு பெற்று, தற்போது வெளியீட்டு பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
முதற்கட்டமாக படத்தின் போஸ்டர், புகைப்படங்கள் வெளியாகி வைரலான நிலையில், படம் அடுத்த மாதம் வெளியாகும் என்ற அறிவிப்பும் வெளியானது.
இந்தநிலையில், தற்போது விஜய்யின் 'பீஸ்ட்' சென்சார் அனுமதிக்காக திரையிடபட்டது. படத்தை பார்த்த சென்சார் குழு பீஸ்ட் படத்துக்கு யு/ஏ சான்றிதழ் வழங்கி இருக்கிறார்கள்.
படம் ஏப்ரல் 13ம் தேதி அன்று அதாவது தமிழ் புத்தாண்டுக்கு முந்தைய தினம் உலகம் முழுதும் ரிலீஸ் ஆகிறது. வெளி நாட்டு உரிமையை ஐங்கரன் நிறுவனம் கைப்பற்றி உள்ளதாக கூறப்படுகிறது.
...