ஸ்பா, மசாஜ் அறைகளில் கேமரா… உயர் நீதிமன்ற மதுரைக்கிளை அதிரடி கருத்து!
ஸ்பா, மசாஜ் அறைகளில் கேமரா... உயர் நீதிமன்ற மதுரைக்கிளை அதிரடி கருத்து!
ஸ்பா, மசாஜ் நடைபெறும் அறைகளில் CCTV கேமராக்களை பொருத்தி கண்காணிப்பது, தனிநபர் உரிமைக்கு எதிரானது என்று சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளை கருத்து தெரிவித்துள்ளது.
திருச்சியைச் சேர்ந்த பயேல் பிஸ்வாஸ், குயின் ஆயுர்வேதிக் ஸ்பா செண்டர் எனும் பெயரில் ஸ்பா மையம் நடத்த அனுமதிக்கக் கோரி NOC சான்றிதழ் வழங்க உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன் விசாரணைக்கு வந்தது.
ஸ்பா மையம் தொடங்குவதை முறைப்படுத்துவதற்கான விதிகள் ஏதுமில்லை.
ஸ்பா தொடங்குவதற்கான தடையில்லா சான்றிதழ் வழங்குவதோடு காவல்துறையினரின் தலையீட்டை தவிர்க்கவும் மனுவில் கோரியுள்ளார்.
கடந்த ஆண்டு இது போன்ற வேறு ஒரு வழக்கில் , உயர்நீதிமன்ற நீதிபதி விசாரித்து உத்தரவு...
