வியாழக்கிழமை, ஏப்ரல் 30
Shadow

Tag: covid

அமிதாப் பச்சனுக்கு இரண்டாவது முறையாக கொரோனா பாதிப்பு !

அமிதாப் பச்சனுக்கு இரண்டாவது முறையாக கொரோனா பாதிப்பு !

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
உலகம் முழுவதும் கொரோனா தொற்றுக்கு பல்வேறு நாடுகளின் தலைவர்கள், திரைப் பிரபலங்கள் பாதிக்கப்பட்டு வருவது தொடர் கதையாகி உள்ளது. இந்நிலையில் இந்தி திரையுல சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் இரண்டாவது முறையாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். 79 வயதான அமிதாப் பச்சனுக்கு நேற்று நடத்தப்பட்ட பரிசோதனையில் கொரானா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது குறித்து தமது டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ள அமிதாப், தன்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் தயவு கூர்ந்து பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார். எனினும் அவர் வீட்டில் தனிமைப்படுத்தப் பட்டுள்ளாரா அல்லது மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டாரா என்பது குறித்து தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை. முன்னதாக கடந்த 2020 ஆம் ஆண்டு முதல்முறையாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட அமிதாப், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றபின் குணமடைந்தது...
கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டால் 42 ஆயிரம் ரொக்கம் கிடைக்குமாம்!

கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டால் 42 ஆயிரம் ரொக்கம் கிடைக்குமாம்!

HOME SLIDER, NEWS, உலக செய்திகள், செய்திகள்
  கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டால் 42 ஆயிரம் ரொக்கம் கிடைக்குமாம். இந்த பரிசு தொகை குடுப்பது ஆஸ்திரியாவில். ஆஸ்திரியாவின் மக்கள் தொகையில் ஏறக்குறைய 72 சதவீத மக்கள் கொரோனாவுக்கு எதிராக முழுமையான தடுப்பூசிகளைச் செலுத்திக் கொண்டுள்ளனர். மேற்கு ஐரோப்பிய நாடுகளை ஒப்பிடும்போது ஆஸ்திரியா குறைந்த அளவிலேயே தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளது. இந்த நிலையில் ஆஸ்திரிய அரசு பொதுமக்கள் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்வதை ஊக்குவிக்கும் வகையில் லாட்டரி சீட்டை அறிமுகப்படுத்த உள்ளது. ஒவ்வொரு நாளும் ஆஸ்திரியாவில் கொரோனாவின் மாறுபாடான ஒமைக்ரான் தொற்று அதிகரித்துக் கொண்டு வருகிறது. இதனால் ஆஸ்திரியா அரசாங்கம் மற்றுமொரு ஊரடங்கைத் தவிர்க்கும் வகையில் இந்த முயற்சியை மேற்கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளது. அதன்படி பொதுமக்கள் ஏற்கெனவே தடுப்பூசி செலுத்திக் கொண்டிருந்தாலும் இனிமேல் தடுப்பூசி செலுத்துபவரா...
பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக் கொண்டார் மு.க. ஸ்டாலின்

பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக் கொண்டார் மு.க. ஸ்டாலின்

HOME SLIDER, NEWS, செய்திகள்
    தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் தடுப்பூசி மற்றும் முக கவசம் மட்டுமே தடுப்பு ஆயுதமாக பார்க்கப்பட்டு வருகிறது இந்த நிலையில், தமிழகத்தில் உள்ள முன் களப் பணியாளர்கள், மருத்துவப் பணியாளர்கள் மற்றும் 60 வயதிற்கு மேற்பட்ட இணை நோய் உள்ளவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி போடும் பணியை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார். தமிழகத்தில் ஏப்ரல் 14-ம் தேதிக்கு முன்னதாக இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தி கொண்ட 4 லட்சம் நபர்களுக்கு பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போடும் பணி தொடங்கப்பட்டு, அனைத்து தடுப்பூசி மையங்களிலும் தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போட்டுக்கொண்டார்  ...
பொங்கல் பண்டிகை நாட்களில் கோவிலுக்கு செல்ல பொது மக்களுக்கு தடை

பொங்கல் பண்டிகை நாட்களில் கோவிலுக்கு செல்ல பொது மக்களுக்கு தடை

HOME SLIDER, NEWS, செய்திகள்
  தமிழக அரசின் புதிய கட்டுப்பாட்டின்படி, 14-01-2022 முதல் 18-01-2022 வரை அனைத்து வழிபாட்டுத் தலங்களிலும் பொது மக்களுக்கு அனுமதி இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. காணும் பொங்கல் நாளான ஜனவரி 16ம் தேதி (ஞாயிறு) முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை ஜனவரி 31ம் தேதிவரை நீட்டித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன் ஒருபகுதியாக  பொங்கல் விடுமுறை நாட்களில்  கோவிலுக்கு மக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா மற்றும் ஓமைக்ரான் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக தமிழக அரசு வார நாட்களில் இரவு ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு உள்ளிட்ட கட்டுப்பாடுகளை விதித்திருந்தது. இந்த கட்டுப்பாடுகள் நிறைவடையும் நிலையில், கொரோனா கட்டுப்பாடுகளை ஜனவரி 31ம் தேதிவரை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்த...
இந்தியாவில் கொரோனா பரவல் 3ம் அலை இம்மாத இறுதியில் உச்சத்தை தொடலாமாம்!

இந்தியாவில் கொரோனா பரவல் 3ம் அலை இம்மாத இறுதியில் உச்சத்தை தொடலாமாம்!

HOME SLIDER, NEWS, செய்திகள்
இந்தியாவில் கொரோனா பரவல் 3ம் அலை இம்மாத இறுதியில் உச்சத்தை தொடலாமாம். இந்தியாவில் கொரோனா பரவல் இம்மாத இறுதியில் உச்சத்தை தொட வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. டெல்லி மற்றும் மகாராஷ்டிர மாநிலங்களில் மிக அதிக எண்ணிக்கையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், இங்கு அடுத்த வாரம் பாதிப்பு உச்சத்தை அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவது குறித்து ஐஐடி கான்பூர் கல்வி நிலைய பேராசிரியர்கள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். அவர்கள் அளித்த தகவலின்படி அடுத்த மாதத்தில் இருந்து பாதிப்பு குறையத் தொடங்கும் என்று கூறப்படுகிறது டெல்லியில் பரவல் உச்ச நிலையை அடையும்போது நாள் ஒன்றுக்கு பாதிப்பு 50 ஆயிரம் முதல் 60 ஆயிரம் வரை இருக்கும். மும்பையை பொருத்தவரையில் ஒருநாள் பாதிப்பு அதிகபட்சமாக 30 ஆயிரம் வரை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது ...
கோவிட் வைரஸ் மக்களுடன் மக்களாக கடைசி வரை பயணிக்கும் – அதிர்ச்சித்தகவல் வெளியிட்ட விஞ்ஞானி

கோவிட் வைரஸ் மக்களுடன் மக்களாக கடைசி வரை பயணிக்கும் – அதிர்ச்சித்தகவல் வெளியிட்ட விஞ்ஞானி

helth tips, HOME SLIDER, NEWS, செய்திகள்
  ‛‛கோவிட் வைரஸ் மக்களுடன் மக்களாக கடைசி வரை பயணிக்கும் என்பதால், தமிழகத்திற்கு மீண்டும் பொது முழு ஊரடங்கு தேவையில்லை,'' என, உலக சுகாதார நிறுவனத்தின் தலைமை விஞ்ஞானி சவுமியா சுவாமிநாதன் கூறினார். எம்.எஸ்.சுவாமிநாதன் அறக்கட்டளை சார்பில், ஊட்டச்சத்து குறைபாட்டை நீக்குவதற்காக அமைக்கப்பட்டுள்ள பூங்காவை, சவுமியா சுவாமிநாதன், திறந்து வைத்தார். பின், சவுமியா சுவாமிநாதன் அளித்த பேட்டி:கொரோனா தொற்றின் முதல் அலையில், தொற்றை கட்டுப்படுத்துவது குறித்து தெரியாத சூழலில், பொது முடக்கம் தேவைப்பட்டது. தற்போது, உலக முழுதும் மருத்துவ கட்டமைப்புகள் வலுப்படுத்தப்பட்டுள்ள நிலையில், பொது முழு முடக்கம் தேவையில்லை. டெல்டா வைரஸ் உடன் ஒப்பிடுகையில், ஒமைக்ரான் பரவல் வேகம் நான்கு மடங்கு அதிகரித்தாலும், மருந்து சிகிச்சைக்கான தேவை குறைவாக உள்ளதால், தமிழகத்திற்கு முழு ஊரடங்கு தேவைப்படாது.தற்போதைய ச...
தினசரி பாதிப்பு 10 லட்சத்தை எட்டிய ஐரோப்பிய யூனியன்- பல நாடுகளில் எல்லை மூடல்!

தினசரி பாதிப்பு 10 லட்சத்தை எட்டிய ஐரோப்பிய யூனியன்- பல நாடுகளில் எல்லை மூடல்!

HOME SLIDER, NEWS, உலக செய்திகள், செய்திகள்
தினசரி பாதிப்பு 10 லட்சத்தை எட்டிய ஐரோப்பிய யூனியன்- பல நாடுகளில் எல்லை மூடல்! உலக நாடுகளில் கொரோனா மற்றும் உருமாறிய ஒமைக்ரான் வைரஸ் வேகமாக பரவி வருகிறது. ஐரோப்பிய யூனியன் நாடுகளில் தான் இதன் பாதிப்பு அதிகரித்துள்ளது. தொற்று நோய் பரவியதில் இருந்து இந்த நாடுகளில் நாளுக்கு நாள் கொரோனாவின் வேகம் அதிகரித்துள்ளது. தற்போது தினசரி பாதிப்பு 8 லட்சத்தை தாண்டி உள்ளது. இது உலகமெங்கும் உள்ள நோய் தொற்றுகளில் மூன்றில் ஒரு பங்கு அதிகமாக உள்ளது. கடந்த சில மாதங்களாக ஐரோப்பிய நாடுகள் மீண்டும் தொற்று நோயின் மையமாக மாறியுள்ளது. அட்லாண்டிக் கடற்கரையில் இருந்து அஜர்பைஜான் மற்றும் ரஷியா வரையிலான 52 நாடுகள் மற்றும் பிரதேசங்கள் உள்பட ஐரோப்பிய கண்டத்தில் கடந்த 2 ஆண்டுகளாக கொரோனாவில் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் எண்ணிக்கை 10 கோடியை தாண்டியுள்ளது. பிரான்சில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் தினமும் பாதிக்கப்ப...
கொரோனா பாதிப்பு… வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்ட பிரபல நடிகர்!

கொரோனா பாதிப்பு… வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்ட பிரபல நடிகர்!

HOME SLIDER, NEWS, செய்திகள், நடிகர்கள்
  கொரோனா பாதிப்பு... வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்ட நடிகர் மகேஷ் பாபு தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபுவுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருக்கிறது. தற்போது துபாயில் இருக்கும் மகேஷ் பாபு, தனக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட தகவலை டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். லேசான அறிகுறிகளுடன் பாதிப்பு ஏற்பட்டிருப்பதாகவும், மருத்துவர்களின் அறிவுறுத்தலின்பேரில் வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டிருப்பதாகவும் அவர் கூறி உள்ளார். மேலும், சமீபத்தில் தன்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் அனைவரும் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும் என்றும், தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்கள் உடனே தடுப்பூசி செலுத்திக்கொள்ளுங்கள் என்றும் மகேஷ் பாபு கேட்டுக்கொண்டுள்ளார்.  ...
பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக் கொண்ட பிறகும் சுவீடன் மன்னர், ராணி இருவருக்கும் கொரோனா!

பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக் கொண்ட பிறகும் சுவீடன் மன்னர், ராணி இருவருக்கும் கொரோனா!

HOME SLIDER, NEWS, உலக செய்திகள், செய்திகள்
சுவீடன் மன்னர், ராணி இருவருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது அந்த நாட்டு மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்ற்படுத்தி உள்ளது. சுவீடன் நாட்டு மன்னர் கார்ல் குஸ்டாப் (வயது 75). ராணி சில்வியா (78). இவர்கள் இருவருக்கும் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து நடத்தப்பட்ட பரிசோதனையில் அவர்களுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது தெரியவந்தது. இது குறித்து அரண்மனை சார்பில் கூறும்போது, மன்னர், ராணிக்கு லேசான கொரோனா அறிகுறிகள் உள்ளன. அவர்கள் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இருவரும் நன்றாக உள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சுவீடன் மன்னர், ராணி, இருவரும் ஏற்கனவே 2 டோஸ் தடுப்பூசியும், கூடுதலாக பூஸ்டர் தடுப்பூசி செலுத்தி கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.  ...