சினிமாவில் வன்முறை, பலாத்கார காட்சிகளில் எச்சரிக்கை வசனங்கள் இடம் பெற சென்சார் போர்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் தாதா87, பவுடர் பட இயக்குனர் ஆலோசனை
மத்திய அரசு மற்றும் தணிக்கைக்குழுவிற்கு தாதா87, பப்ஜி, பவுடர் படங்களின் இயக்குனர் விஜய் ஸ்ரீ ஜி கோரிக்கை!!
பெண்களுக்கு எதிரான பாலியல் பலாத்காரம் மற்றும் வன்முறைக்கு எதிரான வாசகங்கள் டைட்டில் கார்டில் பதிவிட வேண்டுகோள்.
மத்திய தணிக்கைக்குழுவின் ஆலோசனைப்படி திரைப்படங்கள் துவங்குவதற்கு முன் மது குடிப்பதும். சிகரெட் பிடிப்பதும் குற்றம் என்ற வாசகங்கள் டைட்டில் கார்டில் கட்டாயம் பதிவிடப்பட வேண்டும். இந்நாள் வரை அந்த பதிவும் திரைப்படம் துவங்குவதற்கு முன் பதிவிடப்பட்டு வருகிறது.
இதை கருத்தில் கொண்டு பெண்களுக்கு எதிராக ஏற்படும் பாலியல் குற்றச்சம்பவங்களுக்கு எதிரான வாசகம் 2019 மார்ச் 1 வெளியான ”தாதா87” படத்தின் டைட்டில் கார்டில், ”பெண்களை அனுமதி இன்றி தொடுவது சட்டபடி குற்றம்”
என்ற வாசகத்தை உலக சினிமா வரலாற்றில் முதல் முறையாக பதிவிட்டோம்.
தற்சமயம் நாட்டை கண்ணீரில...

