புதன்கிழமை, ஏப்ரல் 29
Shadow

Tag: heavy rain

உத்தர பிரதேசத்தில் கனமழையால் சுவர் இடிந்து விழுந்து 9 பேர் உயிரிழப்பு!

உத்தர பிரதேசத்தில் கனமழையால் சுவர் இடிந்து விழுந்து 9 பேர் உயிரிழப்பு!

HOME SLIDER, NEWS, செய்திகள்
உத்தர பிரதேச மாநில தலைநகர் லக்னோவில் உள்ள தில்குஷா பகுதியில் அமைந்தள்ள ராணுவ வளாகத்திற்கு வெளியே ஏராமானோர் குடிசைகளில் வசித்து வந்தனர். நேற்றிரவு தொடர் கன மழை காரணமாக ராணுவ வளாக சுவர் இடிந்து விழுந்தது. இதில் இடிபாடுகளில் சிக்கி 9 பேர் உயிரிழந்ததாகவும் ஒருவர் உயிருடன் மீட்கப்பட்டதாக, காவல்துறை இணை ஆணையர் பியூஷ் மோர்டியா தெரிவித்தார். அதிகாலை 3 மணியளவில் ஒன்பது உடல்கள் இடிபாடுகளில் இருந்து வெளியே எடுக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார். இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், இரங்கல் தெரிவித்துள்ளார். இதேபோல் துணை முதல்வர்கள் கேசவ் பிரசாத் மவுரியா மற்றும் பிரஜேஷ் பதக் ஆகியோரும் இரங்கல் தெரிவித்தனர். மேலும் உயிரிழந்த ஒவ்வொருவரின் குடும்பத்திற்கும் தலா ரூ.4 லட்சம் நிதியுதவி வழங்க உத்தரவிடப்பட்டுள்ளதாக முதலமைச்சர் அலுவலக டுவிட்டர் பதிவில் கூ...
5 நாட்கள் தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு!

5 நாட்கள் தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு!

HOME SLIDER, NEWS, செய்திகள்
தமிழக கடலோரப் பகுதிகளில் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று டெல்டா மாவட்டங்கள் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், புதுக்கோட்டை, நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல் மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. நாளை (23-ந்தேதி) தமிழகத்தில் அநேக இடங்களிலும் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யும். 24, 25, 26 ஆகிய தேதிகளில் அநேக இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். டெல்டா மாவட்டங்கள், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், புதுக்கோட்டை, நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. சென்னையில் அடுத்த 48 மணிநேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் லே...
கடும் மழையால் கோவை குற்றாலத்தில் வெள்ளப்பெருக்கு !

கடும் மழையால் கோவை குற்றாலத்தில் வெள்ளப்பெருக்கு !

HOME SLIDER, NEWS, செய்திகள்
கோவை மக்களின் முக்கிய சுற்றுலா தலமாக திகழ்வது கோவை குற்றாலம். அடர்ந்த வனப்பகுதிக்கு நடுவே இந்த சுற்றுலா தலம் உள்ளதால் இங்குள்ள இயற்கை அழகினையும், வனவிலங்குகளை கண்டு ரசிக்கவும், அருவியில் குளித்து மகிழவும் தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் தங்கள் குடும்பத்துடன் வருவார்கள். அவர்கள் அருவியில் குளித்து மகிழ்ந்து விட்டு, வனப்பகுதியில் உள்ள இயற்கை காட்சிகளை கண்டு ரசிப்பது வழக்கம். தற்போது கடந்த சில நாட்களாக மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில், பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் கோவை குற்றாலத்திற்கும் தண்ணீர் வரத்து அதிகரித்து காணப்பட்டது. இந்த நிலையில் நேற்று இரவு மலைப்பகுதியில் பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக இன்று காலை கோவை குற்றாலத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பாறைகள் முழுவதும் மறைந்து தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. வெள்ளப்பெருக்கு ஏற்...
பலத்த மழையால் திருப்பதியில் பக்தர்கள் செல்லும் வழியில் மரங்கள் சாய்ந்தது!

பலத்த மழையால் திருப்பதியில் பக்தர்கள் செல்லும் வழியில் மரங்கள் சாய்ந்தது!

HOME SLIDER, NEWS, செய்திகள்
ஆந்திர மாநிலம் திருப்பதியில் கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வதைத்த நிலையில் தற்போது பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று மாலை கருமேகங்கள் சூழ்ந்து வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. லேசாக சாரல் மழை செய்தது. கோடை விடுமுறை என்பதால் தற்போது திருப்பதியில் ஏராளமான பக்தர்கள் தரிசனத்திற்கு குவிந்து வருகின்றனர். சூறாவளி காற்றுடன் மழை பெய்ததால் பக்தர்கள் மிகுந்த சிரமம் அடைந்தனர். இந்தநிலையில் மாலை 5 மணிக்கு திடீரென சூறாவளி காற்றுடன் பலத்த மழை கொட்டி தீர்த்தது. சூறாவளி காற்று வீசியதால் மரங்கள் வேரோடு சாய்ந்தது. சாலைகள் மற்றும் மின்கம்பங்கள் மீது விழுந்ததால் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. சாலைகளில் மரம் விழுந்ததால் வாகனங்கள் செல்ல முடியாமல் வாகன ஓட்டிகள் அவதி அடைந்தனர். பக்தர்கள் செல்லும் வழியிலும் மரக்கிளைகள் முறிந்து விழுந்தது. மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் த...
அசாமில் வெள்ளத்தால்  நீரில் மூழ்கி 222 கிராமங்கள்!

அசாமில் வெள்ளத்தால் நீரில் மூழ்கி 222 கிராமங்கள்!

HOME SLIDER, NEWS, செய்திகள்
அசாமில் கொட்டி தீர்த்த மழையால் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. 15 வருவாய் வட்டங்களுக்கு உட்பட்ட 222 கிராமங்கள் வெள்ளத்தால் சூழப்பட்டுள்ளன. 1,0321 ஹெக்டேர் விவசாய நிலங்கள் நீரில் மூழ்கியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 57,000 பேர் வீடுகளை இழந்துள்ளனர். ஒரு குழந்தை உட்பட 3 பேர் உயிரிழந்தனர். லக்கிம்பூர் மற்றும் நாகோன் மாவட்டங்களில் பல சாலைகள், பாலங்கள் மற்றும் நீர்ப்பாசன கால்வாய்கள் சேதமடைந்துள்ளன. இடைவிடாத மழையால் திமா ஹசாவ் மாவட்டத்தில் 12 கிராமங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால் ரயில் பாதை, பாலங்கள் மற்றும் சாலை தகவல் தொடர்புகளுக்கு பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ராணுவம், துணை ராணுவப் படைகள், தேசிய பேரிடர் மீட்பு படையினர், தீயணைப்பு மற்றும் அவசர சேவைகள் மீட்பு படையினர் நிவாரண பணிகளில் ஈடுபட்டுள்ளனர். டிடோக்செரா ரெயில் நிலையத்தில...
கடும்மழை, நிலச்சரிவு வரலாறுகாணாத வெள்ளம் துண்டிக்கப்பட்ட “எந்திரன்” பட சூட்டிங் ஸ்பாட்!

கடும்மழை, நிலச்சரிவு வரலாறுகாணாத வெள்ளம் துண்டிக்கப்பட்ட “எந்திரன்” பட சூட்டிங் ஸ்பாட்!

flood news, HOME SLIDER, NEWS, உலக செய்திகள்
    தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான பெரு, மலைப்பகுதிகள் மற்றும் மழைக்காடுகளை அதிக அளவில் கொண்ட நாடாகும். அங்குள்ள ‘மச்சு பிச்சு’ என்ற 15 ஆம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்ட மலை நகரம் உலகப் புகழ் பெற்றது. இதைக் காண உலகெங்கிலும் இருந்து வருடந்தோறும் லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் பெரு நாட்டிற்கு வருகை தருகின்றனர்.   தமிழ் சினிமாவில் சங்கர் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்த ‘எந்திரன்’ திரைப்படத்தில் முதல் முறையாக இந்த மச்சு பிச்சு மலைகள் இடம்பெற்றன. அந்த படத்தில் வரும் ‘கிளிமாஞ்சாரோ’ பாடல் இந்த இடத்தில் தான் படமாக்கப்பட்டது. இந்நிலையில் அந்த மலைப்பகுதிகளில் கடந்த வெள்ளிக்கிழமையன்று ஏற்பட்ட பெருமழை மற்றும் அதனை தொடர்ந்து ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக மச்சு பிச்சு செல்லும் பாதை முழுவதுமாக துண்டிக்கப்பட்டுள்ளது. பல பகுதிகள் வெள்ளம் காரணமாக சேதமடைந்துள்ளன. இ...
கனமழை எதிரொலி: 6 மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை!

கனமழை எதிரொலி: 6 மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை!

HOME SLIDER, NEWS, செய்திகள்
கனமழை எதிரொலி: 6 மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை! இலங்கை கடலோரப்பகுதி மற்றும் அதனையொட்டிய தென் தமிழக கடலோர பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நீடித்து வருகிறது. இதனால், தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் நேற்று முதல் தீபாவளி வரை 5 நாட்களுக்கு பலத்த மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதையடுத்து, டெல்டா மாவட்டங்கள் மற்றும் புதுக்கோட்டை, ராமநாதபுரம், திருநெல்வேலி, தூத்துக்குடி, கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்யும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்கிடையே, தமிழகத்தில் கொரோனா தொற்று காரணமாக ஒன்றரை ஆண்டுகளாக மூடப்பட்டிருந்த பள்ளிகள் இன்று முதல் செயல்பட உள்ளன. 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை இன்று முதல் பள்ளிகள் திறக்கப்படுகிறது. இந்நிலையில், வேலூர், நெல்லை, விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் தொடர...
வரலாறு காணாத கனமழை- வெள்ளக்காடாக காட்சியளித்த டெல்லி விமான நிலையம்!

வரலாறு காணாத கனமழை- வெள்ளக்காடாக காட்சியளித்த டெல்லி விமான நிலையம்!

HOME SLIDER, NEWS, செய்திகள்
வரலாறு காணாத கனமழை- வெள்ளக்காடாக காட்சியளித்த டெல்லி விமான நிலையம்! டெல்லி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. தாழ்வான பகுதிகள் தண்ணீரில் தத்தளிக்கின்றன. இந்த பருவமழை சீசனில் சாதனை அளவாக இதுவரை 1005.3 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. 2010ம் ஆண்டுக்கு பிறகு முதல் முறையாக பருவமழை காலத்தில் பெய்த மழை அளவு 1000 மில்லி மீட்டரை தாண்டியிருக்கிறது. தொடர்ந்து டெல்லியில் கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கனமழை காரணமாக டெல்லி இந்திராகாந்தி விமான நிலைய வளாகம் வெள்ளக்காடாக மாறியது. விமானங்களை நிறுத்தி வைத்திருந்த பகுதி முழுவதும் மழைநீர் தேங்கி குளம் போல் காட்சியளித்தது. மோசமான வானிலை காரணமாக  விமான போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது....
shocking video – Heavy Rain massive Flood in Mexico

shocking video – Heavy Rain massive Flood in Mexico

Uncategorized
  shockingvideo Heavy Rain massive Flood in Mexico #viralvideo   The strong rains with hail registered in the State of Mexico caused large floods in the municipalities Atizapán de Zaragoza, Naucalpan and Tlalnepantla. The rains began on Monday, and the large amount of water registered in the drains caused it to rise 60 centimeters, trapping some cars and vehicles. Atizapán is one of the most affected by the floods.   https://youtu.be/gwDe6_IWA_8 What do you think? Why are there been so many massive natural disasters Mexico? Is it a climatic weapon? or is it an omen of the end? Perhaps science has already given the answer and this is global warming? Please write your opinion in the comments below the video!