மார்கன் விமர்சனம் 3/5
மார்கன் விமர்சனம் 3/5
விஜய் ஆண்டனியின் 'மார்கன்' திரைப்படம், சினிமா ரசிகர்களிடையே கலவையான எதிர்பார்ப்புகளை உருவாக்கி உள்ளது.
அறிவியலும் ஆன்மீகமும் கலந்த திரைக்கதை.
'நினைவுகளின் வழியே பயணிப்பவன்' என்ற பொருள் கொண்ட சித்தர்கள் மொழியின் 'கனன மார்கன்' என்ற தலைப்பில் உருவாகிய இந்த படத்தை, இயக்குனர் லியோ ஜான் பால் இயக்கி இருக்கிறார்.
மிக வித்தியாசமான க்ரைம் த்ரில்லராக தர வேண்டும் என முயற்சித்த இயக்குனர் முதல் பாதி கதையில் காட்டிய வேகத்தை இரண்டாம் பாதியிலும் காட்டியிருந்தால் மார்கன் அதிக மார்க் வாங்கி இருப்பான்.
கதைதொடங்கும் போதே,
சென்னையில் ஒரு இளம் பெண் மர்மமான முறையில் கொல்லப்பட்டு உடல் குப்பைத்தொட்டியில் வீசப்பட்டு கிடக்கிறது.
அதோடு உடல் முழுதும் கருப்பாக மாறியிருப்பதை பார்த்து போலீஸ் அதிர்ச்சி அடைகிறது.
இதே போன்ற ஒரு வழக்கை விசாரித்த போல...
