ஞாயிற்றுக்கிழமை, மே 19
Shadow

Tag: Mens Hockey

ஒரு வெள்ளி, 3 வெண்கலம்: டோக்கியோ ஒலிம்பிக் பதக்க வரிசையில் இந்தியாவுக்கு 66-வது இடம்!

ஒரு வெள்ளி, 3 வெண்கலம்: டோக்கியோ ஒலிம்பிக் பதக்க வரிசையில் இந்தியாவுக்கு 66-வது இடம்!

HOME SLIDER, NEWS, செய்திகள், விளையாட்டு செய்திகள்
ஒரு வெள்ளி, 3 வெண்கலம்: டோக்கியோ ஒலிம்பிக் பதக்க வரிசையில் இந்தியாவுக்கு 66-வது இடம்! டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்திய ஆடவர் ஹாக்கி அணி ஜெர்மனியை 5-4 என வீழ்த்தி வெண்கலப் பதக்கம் வென்றது. இதன்மூலம் இந்தியா ஒரு வெள்ளி, மூன்று வெண்கலப் பதக்கம் வென்றுள்ளது. நான்கு பதக்கங்களுடன் இந்தியா பதக்க பட்டியலில் 66-வது இடத்தை பிடித்துள்ளது. மல்யுத்தம் போட்டியில் ரவிக்குமார் தாஹியா வெள்ளி வென்றால் இந்தியா 59-வது இடத்திற்கு முன்னேறும். தங்கம் வென்றால் 43-வது இடத்திற்கு முன்னேற வாய்ப்புள்ளது. சீனா 32 தங்கம், 23 வெள்ளி, 16 வெண்கலப் பதக்கங்களுடன் முதலிடம் வகிக்கிறது. 27 தங்கம், 33 வெள்ளி, 24 வெண்கலப் பதக்கங்களுடன் அமெரிக்கா 2-வது இடத்தை பிடித்துள்ளது. போட்டியை நடத்தும் ஜப்பான் 21 தங்கம், 7 வெள்ளி, 12 வெண்கலப் பதக்கங்களுடன் 3-வது இடத்தை பிடித்துள்ளது....
ஆடவர் ஆக்கி- ஜெர்மனியை துவம்சம் செய்து வெண்கல பதக்கம் வென்றது இந்தியா!

ஆடவர் ஆக்கி- ஜெர்மனியை துவம்சம் செய்து வெண்கல பதக்கம் வென்றது இந்தியா!

HOME SLIDER, NEWS, செய்திகள், விளையாட்டு செய்திகள்
ஆடவர் ஆக்கி- ஜெர்மனியை துவம்சம் செய்து வெண்கல பதக்கம் வென்றது இந்தியா! டோக்கியோ ஒலிம்பிக்கில் ஆண்களுக்கான ஆக்கி போட்டியில்  வெண்கல பதக்கத்திற்கான போட்டி இன்று காலை நடைபெற்றது. இதில் இந்திய அணி ஜெர்மனியை எதிர்கொண்டது. ஆட்டம் தொடங்கிய 2-வது நிமிடத்திலேயே இந்திய அணிக்கு அதிர்ச்சி காத்திருந்தது. ஜெர்மனி வீரர் டிமுர் ஒருஸ் கோல் அடித்தார். இதனால் ஜெர்மனி 1-0 என முன்னிலை பெற்றது. அதன்பின் முதல் கால் பகுதி நேர ஆட்ட முடிவில் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை. 2-வது கால் பகுதி ஆட்டத்தில் ஜெர்மனிக்கு இந்திய அணி பதிலடி கொடுத்தது. ஆட்டம் தொடங்கிய 2-வது நிமிடத்தில் அதாவது 17-வது நிமிடத்தில் சிம்ரஞ்ஜீத் சிங் அபாரமாக கோல் அடித்தார். இதனால் ஸ்கோர் 1-1 என முன்னிலைப் பெற்றது. ஜெர்மனி வீரர் ஃபர்க் 25-வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார். அதற்கு பதிலடியாக ஹர்திக் சிங் மற்றும் ஹர்மன்ப்ரீத் சிங் முறையே 27 ம...
ஆண்கள் ஹாக்கி – இந்தியாவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது பெல்ஜியம்!

ஆண்கள் ஹாக்கி – இந்தியாவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது பெல்ஜியம்!

HOME SLIDER, NEWS, sports, செய்திகள், விளையாட்டு செய்திகள்
ஆண்கள் ஹாக்கி - இந்தியாவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது பெல்ஜியம்! டோக்கியோ ஒலிம்பிக் ஆண்கள் ஹாக்கி போட்டியின் அரையிறுதி ஆட்டத்தில் இந்தியா-பெல்ஜியம் அணிகள் இன்று மோதின. ஹர்மன்பிரீத் சிங் 7வது நிமிடத்திலும், மந்தீப் சிங் 8வது நிமிடத்திலும் தலா ஒரு கோல் அடித்தனர். இதனால் முதல் கால் பாதியில் இந்தியா 2-1 என முன்னிலை வகித்தது. இரண்டாவது கால் பாதியில் பெல்ஜியம் அணி ஒரு கோல் அடித்தது. இதனால் 2-2 என சமனிலை வகித்தது. மூன்றாவது பாதியில் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை. நான்காவது கால் பாதியில் பெனால்டி கார்னர் மூலம் பெல்ஜியம் அணி 2 கோல்கள் அடித்தது. இறுதியில், பெல்ஜியம் அணி 5-2 என்ற கோல் கணக்கில் இந்தியாவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. ...