சனிக்கிழமை, ஏப்ரல் 27
Shadow

Tag: mk stalin in dubai

5 நாள் அரசுமுறை பயணத்தை முடித்துக் கொண்டு துபாயிலிருந்து சென்னை திரும்பினார் முதல்வர் ஸ்டாலின்!

5 நாள் அரசுமுறை பயணத்தை முடித்துக் கொண்டு துபாயிலிருந்து சென்னை திரும்பினார் முதல்வர் ஸ்டாலின்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள், தமிழக அரசியல்
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 5 நாள் அரசுமுறை பயணமாக கடந்த 24-ம் தேதி மாலை துபாய் சென்றார். அங்கு ஐக்கிய அரபு அமீரகத்தின் பொருளாதார அமைச்சகத்துக்கு சென்று அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளைச் சந்தித்து தமிழகத்தில் பல்வேறு துறைகளில் முதலீடுகள் மேற்கொள்வது குறித்து ஆலோசனை மேற்கொண்டார். அதன்பின், அங்கு நடைபெற்ற சர்வதேச வர்த்தக கண்காட்சியில் தமிழகத்திற்கான அரங்கை தொடங்கி வைத்து பார்வையிட்டார். அதைத் தொடர்ந்து, துபாயில் உள்ள ஐக்கிய அரபு நாடுகளின் முதலீட்டாளர்களைச் சந்தித்துப் பேசினார். அவரது முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திடப்பட்டன. துபாயில் இருந்து அபுதாபி புறப்பட்டு சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அங்குள்ள தொழில் அதிபர்களை சந்தித்து உரையாடினார். அவரது முன்னிலையில் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். மாலையில் அபுதாபியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பாராட...
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் துபாய் சென்றடைந்தார்!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் துபாய் சென்றடைந்தார்!

HOME SLIDER, politics, World News, உலக செய்திகள், தமிழக அரசியல்
துபாயில்  கடந்த அக்டோபா் 1-ல் தொடங்கிய சா்வதேச தொழில் கண்காட்சி மாா்ச் 31-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இங்கு மாா்ச் 25 முதல் 31 வரை தமிழ்நாடு வாரமாக கண்காட்சியில் உள்ள தமிழ்நாடு அரங்கில் கடைப்பிடிக்கப்படவுள்ளது. இந்நிலையில், துபாய் எக்ஸ்போவில் பங்கேற்க அரசுமுறை பயணமாக சென்னையில் இருந்து இன்று மாலை தனி விமானத்தில் புறப்பட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் துபாய் சென்றடைந்தார். துபாய் சென்றடைந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை அந்நாட்டிற்கான இந்திய தூதர் அமன் பூரி வரவேற்றார். துபாய் சென்றடைந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாடு அரங்கை நாளை நேரில் சென்று திறந்து வைக்கிறாா் https://www.youtube.com/watch?v=QxyC5nG5XkI துபாயில்  உள்ள முன்னணி வணிக மற்றும் தொழில் நிறுவனங்களின் தலைமை நிா்வாக அதிகாரிகளுடனான சந்திப்பு, வா்த்தக மற்றும் தொழில் சங்கங்களின் தலைவா்களுடனான சந்திப்பு ஆகியனவும் நடைபெறவுள்ளன...