புதன்கிழமை, ஏப்ரல் 29
Shadow

Tag: Petrol price hike

ஒரே வாரத்தில் 2-வது முறையாக பெட்ரோல் விலை உயர்வு!

ஒரே வாரத்தில் 2-வது முறையாக பெட்ரோல் விலை உயர்வு!

HOME SLIDER, NEWS, World News, உலக செய்திகள், செய்திகள்
பாகிஸ்தான், பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கிறது. இம்ரான்கான் பிரதமராக இருந்தபோது, பாகிஸ்தானுக்கு கடன் வழங்குவதாக கடந்த 2019-ம் ஆண்டு சர்வதேச நாணய நிதியம் (ஐ.எம்.எப்.) அறிவித்தது. ஆனால், இந்த ஆண்டு தொடக்கத்தில், இம்ரான்கான், பெட்ரோல், டீசல் விலையை குறைத்தார். அதனால், அவற்றுக்கான மானியமாக அரசுக்கு மாதத்துக்கு 60 கோடி டாலர் செலவானது. இதனால், ஆத்திரம் அடைந்த சர்வதேச நிதியம், கடன் திட்டத்தில் மீதி தொகையான 300 கோடி டாலரை நிறுத்தி வைத்து விட்டது. அந்த கடனை விடுவிக்கவும், கூடுதலாக 200 கோடி டாலர் கடன் வழங்கவும் கோரி சர்வதேச நிதியத்துடன் பாகிஸ்தான் அரசு பேச்சுவார்த்தை நடத்தியது. பெட்ரோல், டீசல் மீதான மானியத்தை நீக்கி, விலையை உயர்த்துமாறு சர்வதேச நிதியம் நிபந்தனை விதித்ததாக தெரிகிறது. இதனால், கடந்த சில நாட்களுக்கு முன் பெட்ரோல், டீசல் விலையை அதிரடியாக பாகிஸ்தான் உயர்த்தியது. இந்தநிலையில்,...
தமிழகத்தில் இதுவரை இல்லாத உச்சம்- 35 மாவட்டங்களில் பெட்ரோல் விலை ரூ.100!

தமிழகத்தில் இதுவரை இல்லாத உச்சம்- 35 மாவட்டங்களில் பெட்ரோல் விலை ரூ.100!

HOME SLIDER, NEWS, செய்திகள்
தமிழகத்தில் இதுவரை இல்லாத உச்சம்- 35 மாவட்டங்களில் பெட்ரோல் விலை ரூ.100! பெட்ரோல்-டீசல் விலை நாடு முழுவதும் கடுமையாக உயர்ந்துள்ளது. நாட்டின் பெட்ரோலிய தேவைகளுக்கு இந்தியா இறக்குமதியையே நம்பியுள்ளது. அதிக அளவில் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யும் நாடாக நமது நாடு உள்ளது. மொத்த தேவையில் 82 சதவீதம் அளவுக்கு கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யப்படுகிறது. கடந்த ஒரு ஆண்டாக கச்சா எண்ணெயின் விலை அதிகரித்து வருகிறது. கடந்த ஆண்டு மே மாதம் கச்சா எண்ணெயின் விலை (ஒரு பேரல்) ரூ.2,800ஆக இருந்தது. இது தற்போது பல மடங்கு உயர்ந்து ரூ.5,021ஆக அதிகரித்துள்ளது. அதே நேரத்தில் மத்திய- மாநில அரசுகளும் பெட்ரோல்- டீசல் மீது வரியை விதிக்கின்றன. இந்த 2 காரணங்களாலும் பெட்ரோல்- டீசல் விலை மின்னல் வேகத்தில் உயர்ந்து இருக்கிறது. நாட்டின் பல்வேறு மாநிலங்களில் பெட்ரோல் விலை கடந்த சில நாட்களுக்கு முன்பே 100-ஐ கடந்து இருந...