வியாழக்கிழமை, மே 16
Shadow

Tag: Public Exam

10-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத முடியாத மாணவர்களுக்கு மறுதேர்வு!

10-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத முடியாத மாணவர்களுக்கு மறுதேர்வு!

HOME SLIDER, NEWS, செய்திகள்
தமிழகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு 10-ம் வகுப்பு, 11-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு நடைபெற்றது. இதில், சுமார் 6.70 லட்சம்  மாணவர்கள் தேர்வு எழுதவில்லை. 10-ம் வகுப்பு தேர்வில் மட்டும் 2.25 லட்சம் மாணவர்கள் தேர்வில் பங்கேற்கவில்லை. இதனை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியும் உறுதிப்படுத்தினார். இந்நிலையில், தேர்வு எழுதாத மாணவர்களை மீண்டும் பள்ளிக்கு அழைத்து உடனடி தேர்வில் பங்கேற்க நடவடிக்கை எடுக்கும்படி அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக, அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலகர்களும் பள்ளிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளனர். அதில், 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதாத மாணவர்களை கண்டறிந்து, ஜூலை மாதம் நடைபெறவிருக்கும் மறுதேர்வில் பங்கேற்க அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதன்மை கல...
பொதுத்தேர்வின்போது தடையற்ற மின்சாரம் வழங்க வேண்டும்- மின்வாரியம் உத்தரவு!

பொதுத்தேர்வின்போது தடையற்ற மின்சாரம் வழங்க வேண்டும்- மின்வாரியம் உத்தரவு!

HOME SLIDER, NEWS, செய்திகள்
தமிழகத்தில் வரும் மே 5-ம் தேதி ப்ளஸ் 2 வகுப்புக்கும், மே 6-ம் தேதி முதல் 10-ம் வகுப்புக்கும், மே 10-ம் தேதி முதல் ப்ளஸ் 1 வகுப்புக்கும் பொதுத் தேர்வு நடைபெறுகிறது. இந்நிலையில் தேர்வின்போது தடையற்ற மின்சாரம் வழங்க வேண்டும் என்று மின்சார வாரியம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.. நாளை மறுநாள் முதல் பொதுத்தேர்வு தொடங் உள்ள நிலையில் மண்டல தலைமை பொறியாளர்களுக்கு மின்வாரியம் உத்தரவிட்டுள்ளது. சுற்றறிக்கையில், தேர்வு மையங்களில் மின்தடை ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், மின்தடை ஏற்பட்டால் மாற்று வசதி ஏற்படுத்தவும் தயார் நிலையில் இருக்க வேண்டும் என்றும் மின்சார வாரியம் உத்தரவிட்டுள்ளது. மேலும், பொதுத்தேர்வு மையங்களில் மின்வாரிய அதிகாரிகள் முன்கூட்டியே மின்பாதைகள் பற்றி ஆய்வு செய்ய வேண்டும் என்றும் பொதுத்தேர்வு மையங்களுக்கு அருகேயுள்ள மின்மாற்றி பழுதடைந்தால் உடனே மாற்றவும் ம...
பிளஸ்-2 தேர்வை பாதுகாப்புடன் நடத்த முடிவு!

பிளஸ்-2 தேர்வை பாதுகாப்புடன் நடத்த முடிவு!

HOME SLIDER, NEWS, செய்திகள்
பிளஸ்-2 தேர்வை பாதுகாப்புடன் நடத்த முடிவு! கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா பரவல் அதிகமானதை அடுத்து பள்ளிகள் மூடப்பட்டு ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்பட்டன. பின்னர் இந்த ஆண்டு தொடக்கத்தில் பிளஸ்-2 மாணவர்களுக்கு மட்டும் நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டன. அதன்பிறகு பிப்ரவரி மாதத்தில் 9, 10, 11-ம் வகுப்பு மாணவர்களுக்காக பள்ளிகள் திறக்கப்பட்டன. ஆனால் பிப்ரவரி மாத இறுதியில் இந்த 3 வகுப்பு மாணவர்களும் ஆல்பாஸ் செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவித்தது. இதன் பிறகு அவர்களுக்கு ஆன்லைன் வகுப்பு நீடித்து வருகிறது. பிளஸ்-2 மாணவர்களுக்கு மட்டும் தொடர்ந்து நேரடி வகுப்புகள் நடந்து வந்தன. பண்டிகைகள், தேர்தல் காரணமாக கடந்த 2-ந்தேதியில் இருந்து 6 நாட்கள் அவர்களுக்கு தொடர்ந்து விடுமுறை அளிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் பிளஸ்-2 மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் முழுமைய...
6 நாட்களுக்கு பிறகு பிளஸ்-2 மாணவர்களுக்கு மீண்டும் வகுப்பு நாளை தொடக்கம்!

6 நாட்களுக்கு பிறகு பிளஸ்-2 மாணவர்களுக்கு மீண்டும் வகுப்பு நாளை தொடக்கம்!

HOME SLIDER, NEWS, செய்திகள்
6 நாட்களுக்கு பிறகு பிளஸ்-2 மாணவர்களுக்கு மீண்டும் வகுப்பு நாளை தொடக்கம்!! கொரோனா தொற்று பரவல் காரணமாக பிளஸ்-2 மாணவர்களுக்கு மட்டும் நேரடி வகுப்பு நடைபெற்று வருகிறது. மே மாதம் 3-ந் தேதி பொதுத்தேர்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருப்பதால் அதற்குள்ளாக பாடத்திட்டங்கள் நடத்தி முடித்து திருப்புதல் தேர்வுகளை நடத்துவதில் பள்ளிகள் தீவிரமாக உள்ளன. இந்த நிலையில் பள்ளி மாணவர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவதால் பொதுத்தேர்வு தள்ளி வைக்கப்படுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. பிளஸ்-2 மாணவர்களுக்கான செய்முறை தேர்வு அடுத்த வாரம் முதல் தொடங்குகிறது. அதனை தொடர்ந்து பொதுத் தேர்வினை நடத்துவதற்கான ஏற்பாடுகளும் நடைபெறுகின்றன. இதற்கிடையில் சட்டசபை தேர்தல் மற்றும் புனித வெள்ளிக்காக கடந்த வாரம் 3-ந் தேதி முதல் பிளஸ்-2 மாணவர்களுக்கு விடுமுறை விடப்பட்டு இருந்தது. வாக்குச்சாவடிகளாக செயல்படும் பள்ளி...
12-ம் வகுப்பு பொதுத்தேர்வை தள்ளிவைக்க வாய்ப்பு!

12-ம் வகுப்பு பொதுத்தேர்வை தள்ளிவைக்க வாய்ப்பு!

helth tips, HOME SLIDER, உலக செய்திகள், செய்திகள்
கொரோனா தொற்று பரவல் காரணமாக 12-ம் வகுப்பு பொதுத்தேர்வை தள்ளிவைக்க வாய்ப்பு! கொரோனா தொற்று கடந்த ஆண்டு மார்ச் மாதம் பரவியதை தொடர்ந்து பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டன. மாணவ-மாணவிகள் ஆன்லைன் வழியாக வீடுகளில் இருந்து படித்து வந்தார்கள். 10 மாதங்களுக்கு பிறகு ஜனவரி மாதம் பள்ளிகள் திறக்கப்பட்டன. 9, 10, 11, 12 ஆகிய வகுப்பு மாணவர்களுக்கு கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி வகுப்புகள் நடத்தப்பட்டன. இந்த நிலையில் சட்டசபை தேர்தல், கொரோனா தொற்று பரவல் காரணமாக 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பொதுத்தேர்வு நடத்த அரசு முடிவு செய்தது. 9, 10, 11 வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக சட்டசபையில் முதல்-அமைச்சர் அறிவித்தார். மேலும் 12-ம் வகுப்பு தேர்வு கால அட்டவணையும் வெளியிடப்பட்டது. மே மாதம் 3-ந்தேதி தொடங்கி 23-ந் தேதி வரை தேர்வு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் தம...