தப்பிய தியேட்டர் ரசிகன்…மொக்கை குறும்பட குப்பை குவியல் “புத்தம்புது காலை” – கோடங்கி விமர்சனம்
CINI NEWS, HOME SLIDER, MOVIES, REVIEWS, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள், விமர்சனம்
மொக்கையான படங்களின் ராஜ தர்பாரான அமேசான் பிரைம் OTT தளத்தில் "புத்தம் புது காலை" என்ற பெயரில் ஐந்து குறும்படங்களின் தொகுப்பு சினிமான்னு ரிலீஸ் ஆகியிருக்கிறது.
கொரோனா ஊரடங்கின் பின்னணியில் ஏதாவது புதுசா சொல்லலாமேன்னு முயற்சி எடுத்தாங்களாம்... ஆனால் ஐய்யோ பாவம் பார்வையாளர்கள்... நல்ல வேளை இது தியேட்டரில் வரல... இவ்ளோ கஷ்ட நேரத்துல காசு குடுத்து நம்பிக்கையா தியேட்டருக்கு ரசிகன் போயிருந்தா ஐய்யோ பாவம்...
சரி... இந்த குறும்படங்கள் என்னதான் சொல்லுது பாக்கலாம்...
முதல் படம் சுதா கோங்கரா இயக்கியிருக்கும் 'இளமை இதோ, இதோ'. மனைவியை இழந்த ஒரு ஆணுக்கும் கணவனை இழந்த பெண்ணும் இடையிலான காதலே இந்தப் படத்தின் கதை. இரண்டு பேருக்கும் வளர்ந்த குழந்தைகள் இருந்தாலும், இளம் காதலர்களைப் போல ஒரு அலப்பறை... நல்லவேளை அதைக் காட்ட ஒரு இளம் ஜோடிய மேட்ச் பன்னியிருப்பது. இதை காதல்னு சொல்றதா கள்ளக்காதல்ன...
