Saturday, January 23
Shadow

தப்பிய தியேட்டர் ரசிகன்…மொக்கை குறும்பட குப்பை குவியல் “புத்தம்புது காலை” – கோடங்கி விமர்சனம்

404 Views

 

மொக்கையான படங்களின் ராஜ தர்பாரான அமேசான் பிரைம் OTT தளத்தில் “புத்தம் புது காலை” என்ற பெயரில் ஐந்து குறும்படங்களின் தொகுப்பு சினிமான்னு ரிலீஸ் ஆகியிருக்கிறது.

கொரோனா ஊரடங்கின் பின்னணியில் ஏதாவது புதுசா சொல்லலாமேன்னு முயற்சி எடுத்தாங்களாம்… ஆனால் ஐய்யோ பாவம் பார்வையாளர்கள்… நல்ல வேளை இது தியேட்டரில் வரல… இவ்ளோ கஷ்ட நேரத்துல காசு குடுத்து நம்பிக்கையா தியேட்டருக்கு ரசிகன் போயிருந்தா ஐய்யோ பாவம்…

சரி… இந்த குறும்படங்கள் என்னதான் சொல்லுது பாக்கலாம்…

முதல் படம் சுதா கோங்கரா இயக்கியிருக்கும் ‘இளமை இதோ, இதோ’. மனைவியை இழந்த ஒரு ஆணுக்கும் கணவனை இழந்த பெண்ணும் இடையிலான காதலே இந்தப் படத்தின் கதை. இரண்டு பேருக்கும் வளர்ந்த குழந்தைகள் இருந்தாலும், இளம் காதலர்களைப் போல ஒரு அலப்பறை… நல்லவேளை அதைக் காட்ட ஒரு இளம் ஜோடிய மேட்ச் பன்னியிருப்பது. இதை காதல்னு சொல்றதா கள்ளக்காதல்னு சொல்றதா…

அடுத்த படம், கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கியிருக்கும் ‘அவரும் நானும் – அவளும் நானும்’. காதல் திருமணம் செய்துகொண்ட தன் பெற்றோரை ஒதுக்கிய தாத்தாவுக்கும் பேத்திக்ககுமான உறவுதான் கதை. ஒரு சூழலில், தன் பெற்றோரை ஒதுக்கியது ஏன் என கேட்கும் பேத்திக்கு தாத்தா சொல்லும் பதில்தான் படம்.

மூன்றாவது படம் சுஹாசினி மணிரத்னம் இயக்கியுள்ள ‘காஃபி எனி ஓன்?’

பேருதான் மார்டனா இருக்கு சரக்கு அர்த பழசு… ஏற்கனவே “வசூல் ராஜா எம்பிபிஎஸ்” படத்தில், கோமாவில் உள்ள ஒரு நோயாளியை தன் அரவணைப்பினாலும் கவனிப்பினாலும் கதாநாயகன் கமல் சரிபடுத்துவாரே.. கிட்டத்தட்ட அதே மாதிரிதான் லைன். மூச்சுப் பேச்சு இல்லாம கிடக்கும் தன் மனைவியை, மகள்களின் எதிர்ப்பை மீறி வீட்டுக்கு அழைத்துவந்து விடுகிறார் கணவர். அவரது அன்பால் மனைவி மீள்கிறாரா இல்லையா இதுதான் கதை.

நான்காவது படம் ராஜீவ் மேனன் இயக்கியுள்ள ‘Reunion’. கொரோனா காலத்தில் தன் பள்ளித் தோழனின் வீட்டில் வந்து தங்கும் தோழிக்கு போதைப் பழக்கம் இருக்கிறது. தோழனின் நல்லெண்ணம் அவளை மீட்கிறதா என்பதுதான் கதை. புதுசா ஒன்னும் இல்ல வழக்கமான ராஜீவ்மேனன் டெம்ப்லெட்டுகள்.

ஐந்தாவது படம் கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ள ‘Miracle’. இதுதான் இருக்குறதுலயே அர்த பழசு… புதுச்சரக்கு ஒன்னுமே இல்ல… கொரோனாவால் பணம் இல்லாமல் ஒரு இயக்குனரின் படம் நின்றுவிடுகிறது. மற்றொரு பக்கம், ஒரு காரில் பெரும் பணம் பதுக்கி வைச்சிருக்காங்க. இந்த இரண்டு தரப்பில் யார் வாழ்க்கையில மிராக்கிள்… அதாங்க அற்புதம் நடக்குது இதுதான் லைன்.

மொத்தத்துல இந்த 5 குறும்படங்களும் பயங்கர மொக்கையாதான் இருக்கு… இதுல எது ரொம்ப பயங்கர மொக்கைன்னு வரிசை படுத்துனா கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய “மிராக்கிள்” இதுதான் மொக்கையில் நம்பர் ஒன் இடத்தை பிடிக்கும் சூப்பர் மொக்கை படம்.

அடுத்தது ராஜீவ் மேனன் இயக்கிய ரீ யூனியன்… 96 படத்த பாத்தபிறகு இதெல்லாம் ஒரு கதைன்னு எப்படி ராஜீவ் மேனனுக்கு வாய்ப்பு குடுத்தாங்க… சோ செகண்ட் மொக்கை

அடுத்த மொக்கை சுஹாசினி இயக்கியுள்ள காபி எனி ஒன்… இதுல சொன்ன விஷயத்தை ஒலக நாயகன் வசூல்ராஜா எம் பி பி எஸ் படத்துலயே சொல்லிட்டார். ஒரு சுவாரஸ்யமும் இல்லாத சுமார் மொக்கை படம் இது.

முதல்படமாக வரும் சுதா கோங்கராவின் இளமை இதோ இதோ குறும்படம் மொக்கையில் பரவாயில்லை இடத்தை பிடிக்கிறது.

அடுத்து கவுதம் வாசுதேவ மேனன் இயக்கிய அவரும் நானும் அவளும் நானும் குறும்படம் இந்த ஐந்தில் கடைசி மொக்கைப் படமாக இடம் பிடிக்கிறது.

ஆக மொத்தம் பெயர் மட்டும் தான் புத்தம் புது காலை… படத்தில் புதுசா எதுவுமே இல்லை.

கடைசியாக OTT தளம் எனும் குப்பை கிடங்கில் மொக்கைப் படங்களை தொடர்ந்து ரிலீஸ் செய்து “மொக்கை ராஜா” பட்டத்தை தட்டிச் செல்கிறது அமேசான் பிரைம்.
நல்ல வேளை தியேட்டர் ரசிகன் தப்பினான்.

– கோடங்கி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seven + one =