செவ்வாய்க்கிழமை, மே 14
Shadow

Tag: Sathish

சன்னி லியோன்காக தான் நடிக்க ஒத்துக்கொண்டேன் – நடிகர் சதீஷ் !

சன்னி லியோன்காக தான் நடிக்க ஒத்துக்கொண்டேன் – நடிகர் சதீஷ் !

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
இயக்குனர் யுவன் இயக்கத்தில் கவர்ச்சி நடிகை சன்னி லியோன் நடிக்கும் படம் 'ஓ மை கோஸ்ட்'. இதில் அவர் நகைச்சுவை பேய் வேடத்தில் நடித்திருக்கிறார். இந்த படத்தில் சன்னி லியோனுடன் நகைச்சுவை நடிகர் சதீஷ், 'குக் வித் கோமாளி' புகழ் தர்ஷா குப்தா, சஞ்சனா, யோகி பாபு, தங்கதுரை, திலக் ரமேஷ், ஜி.பி.முத்து உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கின்றனர். இந்த படத்தை வாவ் மீடியா என்டர்டெயின்மென்ட் மற்றும் ஒயிட் ஹார்ஸ் ஸ்டுடியோஸ் சார்பில் வீர சக்தி மற்றும் கே சசி குமார் இணைந்து தயாரித்துள்ளனர். இந்த திரைப்படம் குடும்ப பொழுதுபோக்கு படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்துக்கு ஜாவேத் ரியாஸ் இசையமைத்துள்ளார். இப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில் 'ஓ மை கோஸ்ட்' படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் நடிகர் சதீஷ் பேசியத...
‘சட்டம் என் கையில்’- படத்தில் கதாநாயகனாக நடிகும் சதீஷ்!

‘சட்டம் என் கையில்’- படத்தில் கதாநாயகனாக நடிகும் சதீஷ்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
தமிழ் சினிமாவில் பல படங்களில் காமெடி மற்றும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து பிரபலமானவர் சதீஷ். இவர் ‘நாய் சேகர்’ என்ற படம் மூலம் கதையின் நாயகனாக களமிறங்கினார். இந்த படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. மேலும் சதீஷ் நடிப்பில் ஓ மை கோஸ்ட் என்ற திரைப்படமும் உருவாகி வருகிறது. தற்போது ‘சட்டம் என் கையில்’ என்ற புதிய படத்தில் கதாநாயகனாக சதீஷ் நடித்து வருகிறார். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் சிலம்பரசன் தனது சமூக வலைத்தள பக்கத்தில் இன்று வெளியிட்டுள்ளார். இந்த போஸ்டர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வைரலாகி வருகிறது....
காமெடி நடிகருடன் இணைந்து நடிக்கும் சன்னி லியோன்!

காமெடி நடிகருடன் இணைந்து நடிக்கும் சன்னி லியோன்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
காமெடி நடிகருடன் இணைந்து நடிக்கும் சன்னி லியோன்! பிரபல கவர்ச்சி நடிகை சன்னி லியோன், தற்போது பாலிவுட்டில் பல படங்களில் நடித்து வருகிறார். இவர் தமிழில் ஜெய் நடிப்பில் வெளியான வடகறி படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடி இருப்பார். மேலும் வீரமாதேவி என்ற படத்தில் கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆனார். இந்நிலையில், யுவன் இயக்கும் வரலாற்று பின்னணியில் உருவாகும் ஹாரர் காமெடி படத்தில் சன்னி லியோன் கதாநாயகியாக நடிக்க இருக்கிறார். இப்படத்தினை வி4யு மீடியா எண்டர்டெயின்மெண்ட் சார்பில் தயாரிப்பாளர் டி.வி.சக்தி மற்றும் ஒயிட் ஹார்ஸ் ஸ்டுடியோஸ் சார்பில் கே.சசிகுமார் இணைந்து தயாரிக்கின்றனர். மேலும் இப்படத்தில் ஒரு வித்தியாசமான நாயகனாக சதீஷ் மற்றும் மொட்டை ராஜேந்திரன், ரமேஷ் திலக், தங்கதுரை, வினோத் முன்னா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். படத்தின் படப்பிடிப்பை சென்னை, பெ...
ஹீரோவானார் நகைச்சுவை நடிகர் சதீஷ்!

ஹீரோவானார் நகைச்சுவை நடிகர் சதீஷ்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
ஹீரோவானார் நகைச்சுவை நடிகர் சதீஷ்! தமிழ்த் திரையுலகில் வடிவேலு, சந்தானம், யோகிபாபு, சூரி உள்பட பல்வேறு பிரபலங்கள் நகைச்சுவை நடிகர்களாக அறிமுகமாகி பின்னர் ஹீரோவாக உயர்ந்துள்ளனர். தற்போது நடிகர் சதீஷும் அந்த வரிசையில் சேர்ந்துள்ளார். இவர் தற்போது, ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ள படத்தில் ஹீரோவாக நடிக்கிறார். இந்தப் படத்தை கிஷோர் ராஜ்குமார் இயக்கவுள்ளார். இது அவர் இயக்கும் முதல் படமாகும். பெயரிடப்படாத இப்படத்தின் பூஜை, இன்று நடைபெற்றது. இதன் ஒட்டுமொத்த படப்பிடிப்பையும் சென்னையிலேயே நடைபெற உள்ளது. இப்படத்தில் சதீஷுக்கு ஜோடியாக ‘குக் வித் கோமாளி’ பிரபலம் பவித்ரா லட்சுமி நடிக்கவுள்ளார். பிரவீன் ஒளிப்பதிவு செய்ய உள்ள இப்படத்திற்கு, அஜீஷ் அசோக் இசையமைக்க உள்ளனர். இந்தப் படத்தின் பூஜையில் நடிகர் சிவகார்த்திகேயன், சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்தார்....
அக்னி தேவி விமர்சனம்

அக்னி தேவி விமர்சனம்

HOME SLIDER, விமர்சனம்
விறைப்பான போலீஸ் உயரதிகாரியாக வருகிறார் பாபி சிம்ஹா. பேருந்து நிலையத்தில் இளம் பெண் ஒருவர் இளைஞன் ஒருவனால் கழுத்தறுக்கப்பட்டு கொலை செய்யப்படுகிறார். இந்த வழக்கை விசாரிக்கும் பொறுப்பு பாபி சிம்ஹாக்கு வருகிறது. வழக்கு அடுத்தடுத்த கட்டத்திற்கு நகரும் போது பல திடுக்கிடும் சம்பவங்கள் அரங்கேறுகிறது. இதற்கு பின்புலமாக இருப்பது தமிழகத்தின் பொதுப்பணித்துறை அமைச்சராக வரும் மதுபாலா. மதுபாலாவிற்கும் பாபி சிம்ஹாவிற்கும் நடக்கும் யுத்தமே இந்த ‘அக்னி தேவி’. வழக்கமான பாணியில் பாபி சிம்ஹாவின் நடிப்பு, இப்படத்திலும் கொடுத்திருப்பது சூப்பர். ஒரு போலீஸ் அதிகாரிக்கு உரித்தான மிடுக்கான நடிப்பில் நம்மை ஆச்சர்யப்படுத்துகிறார் பாபி. என்ன… குரல் தான் அவரோடது இல்லன்னு மட்டும் தெளிவா தெரியுது. ரோஜா படத்தில் பார்த்த நாயகியா இவர் என ஆச்சர்யபட வைக்கிறார் மதுபாலா. வில்லத்தனத்திற்கு பல நாட்கள் பயிற்சி எடுத்திருப்பார் ப...