செவ்வாய்க்கிழமை, மே 21
Shadow

Tag: tennis

விம்பிள்டன் டென்னிஸ் – இறுதிப்போட்டிக்கு முன்னேறினார் ஜோகோவிச்!

விம்பிள்டன் டென்னிஸ் – இறுதிப்போட்டிக்கு முன்னேறினார் ஜோகோவிச்!

HOME SLIDER, NEWS, sports, செய்திகள், விளையாட்டு செய்திகள்
கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் லண்டனில் நடந்து வருகிறது. ஆண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதி ஆட்டத்தில் முன்னணி வீரரான செர்பியாவின் நோவக் ஜோகோவிச், இங்கிலாந்தின் கேமரூன் நூரியுடன் மோதினார். இதில் முதல் செட்டை கேமரூன் நுரி 6-2 என கைப்பற்றினார். இதையடுத்து சுதாரித்துக் கொண்ட ஜோகோவிச் அதிரடியாக ஆடி 6-3, 6-2, 6-4 என்ற செட் கணக்கில் அடுத்த 3 சுற்றுகளை வென்றார். இதன்மூலம் ஜோகோவிச் 8-வது முறையாக இறுதிச்சுற்றுக்கு முன்னேறினார். மற்றொரு அரையிறுதியில் உலகின் 2-ம் நிலை வீரரான ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த ரபேல் நடால், ஆஸ்திரேலிய வீரர் நிக் கிர்கியோசுடன் மோத இருந்தார். ஆனால், வயிற்று தசையில் ஏற்பட்ட காயம் காரணமாக நடால் அரையிறுதியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். இதையடுத்து, விம்பிள்டன் இறுதிப்போட்டியில் நோவக் ஜோகோவிச், நிக் கிர்கியோஸ் ஆகியோர் மோதுகின்றனர்....
தடுப்பூசி செலுத்திக்கொள்ளாததால் நாடு கடத்தப்படும் நோவக் ஜோகோவிச்!

தடுப்பூசி செலுத்திக்கொள்ளாததால் நாடு கடத்தப்படும் நோவக் ஜோகோவிச்!

HOME SLIDER, NEWS, sports, உலக செய்திகள், செய்திகள்
  தடுப்பூசி செலுத்திக்கொள்ளாததால் நாடு கடத்தப்படும் நோவக் ஜோகோவிச்! ஆஸ்திரேலிய ஒபன் டென்னிஸ் போட்டி மெல்போர்ன் நகரில் நாளை தொடங்க உள்ள நிலையில், கொரோனா தடுப்பூசி போட்டுகொண்டவர்கள் மட்டுமே போட்டியில் பங்கேற்க முடியும் என்று புதிய விதிமுறை அமல்படுத்தப்பட்டது. ஆனால், நடப்பு சாம்பியனான, நம்பர் ஒன் வீரர் நோவக் ஜோகோவிச் (வயது 34), தடுப்பூசி செலுத்திக்கொள்ளாததால் போட்டியில் பங்கேற்பதில் சிக்கல் ஏற்பட்டது. எனினும், இந்த போட்டியில் பங்கேற்க போட்டி அமைப்பு குழுவின் மருத்துவ கமிட்டியிடம் மருத்துவ விதிவிலக்கு பெற்று கடந்த 5-ந் தேதி மெல்போர்ன் சென்றார். ஆனால் அவர் எல்லை பாதுகாப்பு படையினரால் தடுத்து நிறுத்தபட்டதுடன், அவரது விசாவும் அதிரடியாக ரத்து செய்யப்பட்டது. இதனால் அவர் மெல்போர்னில் தடுப்பு காவலில் வைக்கப்பட்டார். தனது விசா ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து மெல்போர்னில் உள்ள பெடரல...