எஸ்சி/எஸ்டி பிரிவினரை இந்து பட்டியலில் இருந்து நீக்க வேண்டும் – திருமாவளவன் MP கோரிக்கை
எஸ்சி/ எஸ்டி பிரிவு மக்களை இந்து பட்டியலில் இருந்து நீக்க வேண்டும் என்றும் அவர்களை பூர்வ பௌத்தர்களாக அறிவிக்க வேண்டும் என்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் நாடாளுமன்றத்தில் இன்று கோரிக்கை வைத்தார்.
உத்தரப் பிரதேசத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட 4 மாவட்டங்களை சேர்ந்த பழங்குடியின மக்களை எஸ்டி பட்டியலில் சேர்ப்பது தொடர்பான மசோதா நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட்டது.
அரசியலமைப்பு (பட்டியலிடப்பட்ட சாதிகள் மற்றும் பழங்குடியினர்) ஆணைகள் (இரண்டாவது திருத்தம்) மசோதா, 2022 (Constitution (Scheduled Castes and Scheduled Tribes) Orders (Second Amendment) Bill, 2022) என அழைக்கப்படும் மசோதா மீது பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவரும் எம்.பி.யுமான திருமாவளவன்,
எஸ்சி/ எஸ்டி மக்கள் மதமில்லா மண்ணின் மைந்தர்கள்.
இவர்களுக்கு மதமும் இல்லை சாதியும் இல்லை. ஆனால் இந்துக்கள்...

