சனிக்கிழமை, ஏப்ரல் 27
Shadow

Tag: TN Assembly

தமிழக சட்டசபை மீண்டும் நாளை கூடுகிறது!

தமிழக சட்டசபை மீண்டும் நாளை கூடுகிறது!

Assembly news, HOME SLIDER, NEWS, politics, அரசியல், செய்திகள்
தமிழக சட்டசபை கூட்டம் கடந்த 6-ந்தேதி முதல் நடைபெற்று வந்தது. அன்றைய தினம் முதல் மானிய கோரிக்கைகள் மிதான விவாதம் நடைபெற்று வந்தது. கடந்த 13-ந்தேதி வேளாண்மை, மீன் வளம், கால்நடை, பால்வளத்துறை ஆகிய மானிய கோரிக்கைகள் மீது விவாதம் நடைபெற்றது. இதையடுத்து 14-ந்தேதி முதல் 17-ந்தேதி (இன்று) வரை 4 நாட்கள் சட்டசபைக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. மீண்டும் நாளை (திங்கட்கிழமை) காலை 10 மணிக்கு சட்டசபை கூட்டத் தொடர் தொடங்குகிறது. நாளை காலை சட்டசபை கூட்டம் தொடங்கியதும் கேள்வி-நேரம் எடுத்துக் கொள்ளப்படும். இதைத் தொடர்ந்து வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை, இயற்கை சீற்றங்கள் குறித்து துயர் தணிப்பு துறை ஆகிய மானிய கோரிக்கைகள் மீது விவாதம் நடைபெறும். விவாதத்துக்கு வருவாய்த் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் பதில் அளித்து, துறைக்கான முக்கிய அறிவிப்புகளை வெளியிடுவார். தொடர்ந்து...
வேளாண் பட்ஜெட் – கரும்பு விவசாயிகளுக்கு ரூ.195 சிறப்பு ஊக்கத்தொகை!

வேளாண் பட்ஜெட் – கரும்பு விவசாயிகளுக்கு ரூ.195 சிறப்பு ஊக்கத்தொகை!

HOME SLIDER, NEWS, செய்திகள்
தமிழக சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. முதல் நாளான நேற்று 2022-2023-ம் நிதியாண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. 2-வது நாளான இன்று வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். பட்ஜெட்டில் கூறப்பட்டு இருப்பதாவது:- பண்டைத் தமிழர்கள் கரும்பைக் கசக்கி சாறு பிழிந்து சர்க்கரையாக்கும் தொழில் நுட்பத்தைத் தெரிந்து வைத்திருந்தனர் என்பதைக் ‘கரும்பாட்டிக் கட்டி சிறு காலைக் கொண்டார்’ என்று நாலடியார் நவில்கிறது. கடித்தாலும் சுவை தருகிறது கரும்பு, காய்ச்சினாலும் வெல்லம் தருகிறது அதன் சாறு. தொழில் துறை வசமிருந்த சர்க்கரைத் துறை வேளாண் துறைக்கு மாற்றப்பட்டது உழவர்களுக்கு ஓர் இனிப்பான செய்தி. கரும்பு உற்பத்தி, சர்க்கரைக் கட்டுமானத்தை உயர்த்துவதற்காக, தமிழ்நாடு அரசு பல்வேறு சீரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. கூட்டுறவு, பொதுத்துறை, தனியார்...
அம்மா உணவகங்கள் மூடப்படாது- மு.க.ஸ்டாலின் உறுதி!

அம்மா உணவகங்கள் மூடப்படாது- மு.க.ஸ்டாலின் உறுதி!

HOME SLIDER, NEWS, செய்திகள்
அம்மா உணவகங்கள் மூடப்படாது- மு.க.ஸ்டாலின் உறுதி! சட்டசபையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:- தி.மு.க. ஆட்சியில் கொண்டுவரப்பட்ட பல திட்டங்களை அ.தி.மு.க. ஆட்சியில் முடக்கி உள்ளனர். குறிப்பாக பல இடங்களில் கருணாநிதியின் பெயர்கள் மறைக்கப்பட்டுள்ளது. செம்மொழி பூங்காவில் கலைஞரின் பெயரை மறைக்கும் வகையில் செடி, கொடிகளை நட்டு வைத்தனர். இராணி மேரி கல்லூரியிலும் கலைஞர் பெயர் மறைக்கப்பட்டது. கலைஞர் ஆட்சியில் புதியதாக கட்டப்பட்ட சட்டசபை கட்டிடத்தை ஆஸ்பத்திரியாக மாற்றினார்கள். கலைஞர் கொண்டுவந்த சமத்துவபுரம், உழவர் சந்தை, நமக்கு நாமே திட்டங்களும் முடக்கப்பட்டன. இப்படி தி.மு.க. ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டங்கள் அ.தி.மு.க. ஆட்சியில் முடக்கப்பட்டது பற்றி பட்டியல் இட்டுக்கொண்டே செல்லலாம். ஆனால் தி.மு.க. ஆட்சியில் நாங்கள் அதுபோன்று செயல்படவில்லை. அந்த எண்ணமும் எனக்கு இல்லை. அதனால் தான்...
ஜெயலலிதா பல்கலைக்கழக இணைப்பு விவகாரம்- ஓ.பி.எஸ் உட்பட அதிமுகவினர் கைது!

ஜெயலலிதா பல்கலைக்கழக இணைப்பு விவகாரம்- ஓ.பி.எஸ் உட்பட அதிமுகவினர் கைது!

Assembly news, HOME SLIDER, NEWS, politics, செய்திகள், தமிழக அரசியல்
ஜெயலலிதா பல்கலைக்கழக இணைப்பு விவகாரம்- ஓ.பி.எஸ் உட்பட அதிமுகவினர் கைது! தமிழக சட்டசபையில் இன்று அண்ணாமலை பல்கலைக்கழகத்தோடு விழுப்புரத்தில் உள்ள ஜெயலலிதா பல்கலைக்கழகத்தை இணைப்பதற்கான சட்டமுன்வடிவை உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தாக்கல் செய்தார். இம்மசோதாவுக்கு அதிமுக உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்தனர். கலைவாணர் அரங்கத்திற்கு வெளியே ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் அதிமுக எம்எல்ஏக்கள் சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து போராட்டத்தில்  ஈடுபட்ட ஓ.பன்னீர்செல்வம் உட்பட அதிமுக எம்எல்ஏக்களை போலீசார் கைது செய்து வாகனத்தில் ஏற்றிச் சென்றனர்....
போதைப்பொருட்கள் விற்பனை செய்தால் கடும் தண்டனை- மு.க.ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு!

போதைப்பொருட்கள் விற்பனை செய்தால் கடும் தண்டனை- மு.க.ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு!

Assembly news, HOME SLIDER, NEWS, politics, செய்திகள், தமிழக அரசியல்
போதைப்பொருட்கள் விற்பனை செய்தால் கடும் தண்டனை- மு.க.ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு! சட்டசபையில் இன்று கேள்வி நேரத்தின் போது பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி, ‘தடை செய்யப்பட்ட போதைப்பொருட்கள் விற்பனையை முற்றிலும் தடுக்க அரசு முன்வருமா? என்று கேள்வி எழுப்பினார். இதற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அளித்த பதில் வருமாறு:- இந்த அரசு பொறுப்பேற்ற நாளில் இருந்து 29.8.2021 வரை தடை செய்யப்பட்ட போதைப்பொருட்கள் விற்பனை தொடர்பாக கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதனை விற்பவர்கள், கடத்துபவர்கள் ஆகியோர் மீது 10,673 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. 11,247 பேர் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள். இவர்களிடம் இருந்து 149.43 டன் குட்கா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 113 நான்கு சக்கர வாகனங்களும், 106 இருசக்கர வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. 15 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள்....
சாகுபடி பரப்பு உயர்வு, மரபுசார் நெல் பாதுகாப்பு… வேளாண் பட்ஜெட்டில் முக்கிய அறிவிப்புகள்!

சாகுபடி பரப்பு உயர்வு, மரபுசார் நெல் பாதுகாப்பு… வேளாண் பட்ஜெட்டில் முக்கிய அறிவிப்புகள்!

HOME SLIDER, NEWS, செய்திகள்
சாகுபடி பரப்பு உயர்வு, மரபுசார் நெல் பாதுகாப்பு... வேளாண் பட்ஜெட்டில் முக்கிய அறிவிப்புகள்! தமிழக சட்டசபையில் இன்று வேளாண்மைத் துறைக்கான தனி பட்ஜெட்டை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். அதில் உள்ள முக்கிய அம்சங்கள்:- * தமிழ்நாட்டில் 36 மாவட்டங்களில் ஆரம்ப கட்ட ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு தற்போது 19.31 லட்சம் ஹெக்டேர் தரிசு நிலங்கள் உள்ளன எனத் தெரியவந்துள்ளது. * தரிசாக உள்ள நிலங்களில் 11.75 லட்சம் ஹெக்டேர் பரப்பில் குறைந்த நீர் செலவில் சாகுபடி செய்யப்படும் * வேளாண் வளர்ச்சி திட்டத்திற்கு ரூ.250 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும் * நடப்பாண்டில் 2,500 கிராமங்களில் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் செயல்படுத்தப்படும் * சிறுதானியங்கள், பயறு வகைகள், எண்ணெய் வித்துக்கள், காய்கறி, பழம் பயிரிட்டு நிகர சாகுபடி பரப்பு 75% ஆக உயர்த்தப்படும் * தமிழகத்...
தமிழக பட்ஜெட் இன்று தாக்கல் – கம்ப்யூட்டர் திரையில் எம்.எல்.ஏ.க்கள் காண ஏற்பாடு!

தமிழக பட்ஜெட் இன்று தாக்கல் – கம்ப்யூட்டர் திரையில் எம்.எல்.ஏ.க்கள் காண ஏற்பாடு!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள், தமிழக அரசியல்
தமிழக பட்ஜெட் இன்று தாக்கல் - கம்ப்யூட்டர் திரையில் எம்.எல்.ஏ.க்கள் காண ஏற்பாடு! தமிழக சட்டசபையில் கடந்த 2018-ம் ஆண்டில் காகிதமில்லா சட்டசபை என்ற திட்டம் தொடங்கப்பட்டது. கடந்த பிப்ரவரியில் தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால நிதிநிலை அறிக்கை (பட்ஜெட்) காகித வடிவில் தாக்கல் செய்யப்பட்டது. தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் சட்டசபையில் காதிதமில்லா திட்டத்தை முழு அளவில் நடைமுறைப்படுத்த முடிவு செய்யப்பட்டது. அந்த வகையில் முதல் முறையாக எலக்ட்ரானிக் வடிவிலான முதல் நிதிநிலை அறிக்கை (இ-பட்ஜெட்) இன்று சட்டசபையில் தாக்கல் செய்யப்படுகிறது. அதுவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் ஆட்சியில் தாக்கல் செய்யப்படும் முதல் பட்ஜெட் இதுவாகும். இ-பட்ஜெட்டை நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இன்று காலை 10 மணிக்கு தாக்கல் செய்கிறார். அவர் சுமார் 1.30 மணி நேரம் பட்ஜெட்டை வாசிப்பார். அவர் வாசிக்கும் வாசகங்கள், எம்.எல்.ஏ.க...
தமிழக பட்ஜெட் ஆக.13ந்தேதி தாக்கல்!

தமிழக பட்ஜெட் ஆக.13ந்தேதி தாக்கல்!

HOME SLIDER, NEWS, செய்திகள்
தமிழக பட்ஜெட் ஆக.13ந்தேதி தாக்கல்! தமிழக அமைச்சரவை கூட்டம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று பகல் 11 மணிக்கு தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. கூட்டத்தில் அனைத்து அமைச்சர்களும், அரசு உயர் அதிகாரிகளும் கலந்து கொண்டனர். கூட்டத்தில் 2021- 22-ம் ஆண்டுக்கான பொது பட்ஜெட் மற்றும் வேளாண் பட்ஜெட் குறித்து தீவிர ஆலோசனை நடத்தப்பட்டது. புதிய தொழில் நிறுவனங்கள் தொடர்பாகவும் ஆய்வு செய்யப்பட்டது. தமிழகத்தில் தொழில் துறை தொடர்பான முக்கிய திட்டங்களை அமல்படுத்துவது தொடர்பாக விவாதிக்கப்பட்டது. நிதி நிலை அறிக்கை தொடர்பாக வெள்ளை அறிக்கை தயாரிக்கும் பணியை தமிழக நிதித்துறை மேற்கொண்டு வருகிறது. இது பற்றி கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. கூட்டத்தில் 2021- 22-ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டுக்கு ஒப்புதல் தெரிவிக்கப்பட்டது. கடந்த ஏப்ரல் மாதம் சட்டசபை தேர்தல் நடத்தப்பட்டதால் அ.தி.மு.க. அரசு இடைக்கால...
தமிழ் மிகவும் இனிமையான மொழி- கவர்னர் உரை!

தமிழ் மிகவும் இனிமையான மொழி- கவர்னர் உரை!

HOME SLIDER, NEWS, செய்திகள்
தமிழ் மிகவும் இனிமையான மொழி- கவர்னர் உரை! தி.மு.க. ஆட்சி அமைத்த பிறகு முதல் முறையாக தமிழக சட்டசபை இன்று கூடியது. இதில், கவர்னர் பன்வாரிலால் புரோகித் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது: * தமிழ் மிகவும் இனிமையான மொழி. எளிமையான வாழ்க்கையை வாழுங்கள். * அரசின் ஒவ்வொரு செயலும் சமூக நீதி, ஆண்-பெண் சமத்துவம், அனைவருக்குமான பொருளாதார நீதியை அடிப்படையாக கொண்டிருக்கும். * தனக்கு வாக்களித்தோர் என்றும், வாக்களிக்காதோர் என்றும் எவ்வித பாரபட்சமின்றி அனைத்து மக்களுக்குமான அரசாக செயல்படும். * அரசின் ஒவ்வொரு செயலும் சமூக நீதி, ஆண்-பெண் சமத்துவம், அனைவருக்குமான பொருளாதார நீதியை அடிப்படையாக கொண்டிருக்கும். * தனக்கு வாக்களித்தோர் என்றும், வாக்களிக்காதோர் என்றும் எவ்வித பாரபட்சமின்றி அனைத்து மக்களுக்குமான அரசாக செயல்படும். * உறவுக்கு கைகொடுப்போம், உரிமைக்கு குரல் கொடுப்போம் என்ற கொள்கைக...
தமிழக சட்டசபை விரைவில் கூடுகிறது- அடுத்த மாதம் பட்ஜெட் தாக்கல்!

தமிழக சட்டசபை விரைவில் கூடுகிறது- அடுத்த மாதம் பட்ஜெட் தாக்கல்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
தமிழக சட்டசபை விரைவில் கூடுகிறது- அடுத்த மாதம் பட்ஜெட் தாக்கல்! தமிழக சட்டசபை கூட்டத்தொடர் கடந்த மே 11-ந்தேதி தொடங்கியது. இந்த கூட்டம் 2 நாட்கள் நடைபெற்றது. முதல் நாள் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் தற்காலிக சபாநாயகர் பிச்சாண்டி முன்னிலையில் பதவி ஏற்றுக்கொண்டனர். 2-வது நாள் சபாநாயகர் தேர்வு நடைபெற்றது. இதில் போட்டியின்றி சபாநாயகராக அப்பாவு தேர்ந்தெடுக்கப்பட்டதால் அன்றைய தினமே சபாநாயகராக அப்பாவு பதவி ஏற்றார். அவரை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், , எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்பட சட்டமன்ற கட்சி தலைவர்கள் வாழ்த்தி பேசினார்கள். அத்துடன் சட்டசபை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது. முந்தைய அ.தி.மு.க. அரசு இடைக்கால பட்ஜெட்டை கடந்த பிப்ரவரி மாதம் 23-ந்தேதி தாக்கல் செய்தது. புதிதாக ஆட்சி அமைத்துள்ள மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. அரசு இந்த கூட்டத்தொடரில்...