”ஒரே மடக்கில் ஒரு பாட்டில் ஓட்கா” சரக்கடிக்கும் சவாலில் சிக்கி உயிருக்கு போராடும் வாலிபர்!
சவால் விடலாம்... வரும் சவாலை ஏற்றுக் கொண்டு அதை நிறைவேற்றலாம்... அதிலும் ஆபத்தான சவால்கள் தவிர்க்கப்பட வேண்டும். நண்பர்களின் சரக்கடிக்கும் சவாலில் சிக்கி வாலிபர் உயிருக்கு போராடி வருகிறார்... அதென்ன சவால்...
இளைஞர் ஒருவர் நண்பர்களின் சவாலை ஏற்று, ஒரே மடக்கில் முழு ஓட்கா மதுபாட்டிலை குடித்து முடித்துள்ளார். இதையடுத்து உடல்நல பாதிப்புக்கு ஆளான அவர், உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இதுதொடர்பான தகவல்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.
அமெரிக்காவின் மின்னியாபோலிஸ் பகுதியை சேர்ந்தவர் டேனியல் சான்டுல்லி. 19 வயதாகும் இவர், கடந்த ஆண்டு அக்டோபர் மாதம், மிசோரி பல்கலைக் கழகத்தின் ஹாஸ்டலில் சேர்வதற்காக சென்றுள்ளார்.
அங்கிருந்த அவரது நண்பர்கள் சான்டுல்லியிடம், 'ஒரே மடக்கில் ஓட்காவை குடித்து விடுவாயா?' என்று ஏளனமான தொனியில் சவால் விட்டுள்ளனர்.
இதன...
