சனிக்கிழமை, ஜூன் 13
Shadow

”ஒரே மடக்கில் ஒரு பாட்டில் ஓட்கா” சரக்கடிக்கும் சவாலில் சிக்கி உயிருக்கு போராடும் வாலிபர்!

 

சவால் விடலாம்… வரும் சவாலை ஏற்றுக் கொண்டு அதை நிறைவேற்றலாம்… அதிலும் ஆபத்தான சவால்கள் தவிர்க்கப்பட வேண்டும்.  நண்பர்களின் சரக்கடிக்கும் சவாலில் சிக்கி வாலிபர் உயிருக்கு போராடி வருகிறார்… அதென்ன சவால்…

இளைஞர் ஒருவர் நண்பர்களின் சவாலை ஏற்று, ஒரே மடக்கில் முழு ஓட்கா மதுபாட்டிலை குடித்து முடித்துள்ளார். இதையடுத்து உடல்நல பாதிப்புக்கு ஆளான அவர், உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இதுதொடர்பான தகவல்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

அமெரிக்காவின் மின்னியாபோலிஸ் பகுதியை சேர்ந்தவர் டேனியல் சான்டுல்லி. 19 வயதாகும் இவர், கடந்த ஆண்டு அக்டோபர் மாதம், மிசோரி பல்கலைக் கழகத்தின் ஹாஸ்டலில் சேர்வதற்காக சென்றுள்ளார்.

அங்கிருந்த அவரது நண்பர்கள் சான்டுல்லியிடம், ‘ஒரே மடக்கில் ஓட்காவை குடித்து விடுவாயா?’ என்று ஏளனமான தொனியில் சவால் விட்டுள்ளனர்.

இதனை ஏற்றுக் கொண்ட சான்டுல்லி, ஓட்காவை ஒரே மடக்கில் முழு பாட்டிலையும் குடித்து சவாலில் வெற்றி பெற்றார். ஆனால் இதற்கு பிறகு நடந்ததுதான் சோகமான சம்பவம்.

ஒரே மடக்கில் ஓட்கா உள்ளே சென்றதால், அவரது இரத்தத்தில் ஆல்கஹாலின் அளவு 6 மடங்கு அதிகரித்துள்ளது.

இந்த ஆல்கஹால் மூளைக்கு ஏறியதால் டேனியலுக்கு உடல்நல பாதிப்பு ஏற்பட்டு சரிந்து விழுந்தார். தொடர்ந்து மாரடைப்பும் ஏற்பட்டதால் அவரது குடும்பத்தினர் பதறிப்போயினர்.

உயிருக்கு போராடிய நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட டேனியலுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

இதில் ஓரளவு முன்னேற்றம் ஏற்பட்டதை தொடர்ந்து அவர் வென்டிலேட்டரில் வைக்கப்பட்டார். இன்னமும் அவருக்கு மூளை பாதிப்பு முழுமையாக நீங்கவில்லை.

இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்திற்கு வந்தபோதுதான் நடந்த சம்பவங்கள் வெளியே வந்துள்ளன.

546 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன