செவ்வாய்க்கிழமை, ஜூன் 16
Shadow

Tag: winter olympics 2022

குளிர்கால ஒலிம்பிக்கில் முதல் தங்கப்பதக்கத்தை வென்ற நார்வே

குளிர்கால ஒலிம்பிக்கில் முதல் தங்கப்பதக்கத்தை வென்ற நார்வே

HOME SLIDER, sports, உலக செய்திகள், விளையாட்டு செய்திகள்
  24-வது குளிர்கால ஒலிம்பிக் போட்டி சீன தலைநகர் பீஜிங்கில் நேற்று முன்தினம் தொடங்கியது. முழுக்க முழுக்க உறைபனியில் நடக்கும் இந்த போட்டியில் முதலாவது தங்கப்பதக்தக்தை நார்வே தட்டிச் சென்றது. பெண்களுக்கான 15 கிலோமீட்டர் ஸ்கியாத்லான் பந்தயத்தில் (காலில் சக்கர பலகை கட்டிக்கொண்டு ஐஸ்கட்டி பாதையில் சறுக்கியும், கம்பு ஊன்றியும் ஓடுவது) நார்வே வீராங்கனை தெரசி ஜோஹாக் 44 நிமிடம் 13.7 வினாடிகளில் இலக்கை கடந்து தங்கப்பதக்கத்துக்கு முத்தமிட்டார். ரஷிய வீராங்கனை நதாலியா நேப்ரியேவா வெள்ளிப்பதக்கம் பெற்றார். 33 வயதான ஜோஹாக் ஊக்கமருந்து பயன்படுத்தியதால் 1½ ஆண்டு கால தடை காரணமாக 2018-ம்ஆண்டு குளிர்கால ஒலிம்பிக்கில் பங்கேற்க முடியாமல் போனது குறிப்பிடத்தக்கது....
சீனாவில் தொடங்கிய உலகின் மிகப் பெரிய பனிச் சிற்ப திருவிழா !

சீனாவில் தொடங்கிய உலகின் மிகப் பெரிய பனிச் சிற்ப திருவிழா !

HOME SLIDER, NEWS, உலக செய்திகள், செய்திகள்
  சீனாவில் தொடங்கிய உலகின் மிகப் பெரிய பனிச் சிற்ப திருவிழா ! உலகின் மிகப் பெரிய பனிச் சிற்ப திருவிழா சீனாவில் தொடங்கியுள்ளது. இந்த ஆண்டு குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளுக்கு பனிச் சிற்பங்கள் அர்ப்பணிக்கப்பட்டுள்ளன. சீன நாட்டில் 1963- ஆம் ஆண்டு முதல் ஆண்டு தோறும் ஹெய்லாங்ஜியாங் மாகாண தலைநகரான ஹார்பின் நகரில் பனிச் சிற்ப திருவிழா நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டும் பனிச் சிற்ப திருவிழா பிரமாண்டமாக தொடங்கப்பட்டுள்ளது. 4 லட்சம் சதுர மீட்டர் அளவிலான மிகப்பெரிய நிலப்பரப்பில் வகைவகையான பனிச் சிற்பங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. 65 வகையான சிற்பங்களை காட்சிப்படுத்த 2 லட்சத்து 30 ஆயிரம் கன மீட்டர் பனிக்கட்டிகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. குளிர்கால ஒலிம்பிக்ஸ் போட்டிகளை நினைவுப்படுத்தும் 42 மீட்டர் உயரம் கொண்ட டார்ச் வைக்கப்பட்டுள்ளது. 24-வது குளிர்கால போட்டிகளை குறிக்கும் வகையில், 24 ...