வியாழக்கிழமை, ஏப்ரல் 18
Shadow

தோல்வியால் ஆத்திரம்… பார்லிமெண்ட்டில் வன்முறையை கட்டவிழ்த்த ராஜபக்சே ஆதரவாளர்கள்!

 

இலங்கை நாடாளுமன்றத்தில் சபாநாயகர் கரு.ஜெயசூர்யா மீது ராஜபக்சே ஆதரவு எம்.பிக்கள் தாக்குதல் முயற்சி செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

இலங்கை நாடாளுமன்றம் நேற்று கூடியதும் ராஜபக்சேவுக்கு எதிராக ரணில் விக்ரமசிங்கே தரப்பினர் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தனர், அதில் ராஜபக்சே தனது பெரும்பான்மையை நிரூபிக்க முடியாமல் தோல்வியடைந்தார். எனவே, ரணில் விக்ரமசிங்கே தரப்பு கொண்டுவந்த நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி பெற்றதாக சபாநாயகர் கரு.ஜெயசூர்யா அறிவித்தார். இதனால் ராஜபக்சே தனது பிரதமர் பதவியை இழந்தார்.

இந்நிலையில், இலங்கை நாடாளுமன்றம் இன்று காலை 10 மணிக்கு மீண்டும் கூடியது.  அப்போது ராஜபக்சேவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தை இன்று மீண்டும் சமர்பிப்பதாகவும், அதன் மீது வாக்கெடுப்பு நடத்தும்படியும் ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.

அப்போது உரையாற்றிய ராஜபக்சே, நான் சிறு வயதிலிருந்தே நாடாளுமன்றத்திற்கு வந்திருக்கின்றேன். மந்திரி பதவிக்காகவோ, பிரதமர் பதவிக்காகவோ நான் சபைக்கு வரவில்லை. இதனை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள் என பேசினார்.

இதனையடுத்து அவரது பேச்சை ராஜபக்சே ஆதரவு எம்.பி.க்கள் ஆவேசத்துடன் சபாநாயகர் கரு ஜெயசூர்யா அமர்ந்திருந்த பகுதிக்கு ஓடிச்சென்று அவரை தாக்க முயன்றதால் நாடாளுமன்றத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

ஏற்கனவே தமிழர்களை கொன்று குவித்த ராஜபக்சே சொந்த நாட்டில் மீண்டும் வன்முறையை கையில் எடுத்திருக்கிறார்.
நம்பிக்கை வாக்கெடுப்பில் படு தோல்வி கண்டு மண்ணை கவ்விய தமிழ் விரோதி, கொலைகார குற்றவாளி ராஜபக்சேவின் தகிடுதத்தங்களை மீண்டும் உலகம் உற்றுப் பார்க்கத் தொடங்கி உள்ளது.

 

390 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன