செவ்வாய்க்கிழமை, ஜூன் 16
Shadow

Author: Kodanki

அதே கண்கள்… விளம்பரமில்லா வெற்றி..!

அதே கண்கள்… விளம்பரமில்லா வெற்றி..!

செய்திகள்
அதே கண்கள்... விளம்பரமில்லா வெற்றி..! கலையரசன் நடிப்பில் சிவி.குமார் தயாரிப்பில் சமீபத்திய வெளியான படம் ‘அதேகண்கள்’. தமிழ் சினிமாவில் சமீபகாலமாக படங்கள் தயாரிப்பதை விட ரிலீஸ் செய்ய செலவிடும் தொகை ஒரு பட தயாரிப்பை மிஞ்சும் அளவுக்கு மாறியுள்ளது. அந்த அளவுக்கு செலவு செய்தாலும் ரசிகர்களுக்கு ஏற்ற கதையில்லாமல் போனால் கோடிகளில் விளம்பரம் செய்தாலும் பட ரிசல்ட் படுத்துக் கொள்ளும். சூப்பர் ஸ்டார் படம் தொடங்கி அறிமுக நடிகர்கள் படம்வரை இதுதான் இன்றைய கோலிவுட் நிலை. அதிலும் குறிப்பாக பட ரிலீஸ் நேரத்தில் டிவி விளம்பரம், ரேடியோ விளம்பரம், பேப்பர் விளம்பரம், இணையதள விளம்பரம் இவை தவிர ‘மிரட்டல் விளம்பரம்’(இதுதனி ரகம்). இப்படி பல முனைகளில் படத்தை விளம்பரப்படுத்தி அதற்காக பல கோடிகளை செலவு செய்தால் மட்டுமே படத்தை ரிலீஸ் செய்ய முடிகிறது. தமிழ் சினிமாவில் சமீபத்திய தயாரிப்பாளர்கள் எல்லாம் படம் தொடங்கும்போத...
கூடு விட்டு கூடு பாயும் வித்தைக்காரன் ‘போகன்’ விமர்சனம்

கூடு விட்டு கூடு பாயும் வித்தைக்காரன் ‘போகன்’ விமர்சனம்

விமர்சனம்
கூடு விட்டு கூடு பாயும் வித்தைக்காரன் ‘போகன்’ விமர்சனம் ஜெயம் ரவி அசிஸ்டெண்ட் கமிஷனராக பணிபுரிந்து வருகிறார். இவருடைய அப்பா நரேன் வங்கியில் மேனேஜராக பணியாற்றி வருகிறார். இதே ஊரில், ராஜ பரம்பரையில் இருந்து வந்த வாரிசான அரவிந்த்சாமி, வாழும் வரை ஜாலியாகவும், ஆடம்பரமாகவும் வாழவேண்டும் என்ற குறிக்கோளோடு சொர்க்கலோக வாழ்க்கை வாழ்கிறார். இந்நிலையில், ஒருநாள் அரவிந்த்சாமி ஒரு நகைக்கடையின் முன் தனது காரை நிறுத்துகிறார். காரில் இருந்தபடியே நகைக்கடையின் உள்ளே இருக்கும் பையனை உற்றுப் பார்க்கிறார். அப்போது, அந்த பையன் நகைக்கடைக்குள் இருந்து பணத்தை கொண்டு வந்து இவரது காரில் எதுவும் சொல்லாமல் வைத்துவிட்டு, உடனே மயங்கி விழுகிறான். இதற்கிடையில், ஜெயம் ரவிக்கும் ஹன்சிகாவுக்கும் பெற்றோர்களால் திருமணம் செய்து வைக்க ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. திருமண தேதி நெருங்கும் சமயத்தில், வழக்கம்போல், அரவிந்த்சாமி தன...
‘பகடி ஆட்டம்’ படத்தின் பாடல்களை ஆர்யா வெளியிட்டார்

‘பகடி ஆட்டம்’ படத்தின் பாடல்களை ஆர்யா வெளியிட்டார்

செய்திகள்
ரகுமான் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘பகடி ஆட்டம்’ படத்தின் பாடல்களை ஆர்யா வெளியிட்டார். மரம் மூவீஸ் பட நிறுவனம் சார்பாக T.S.குமார், கே.காமராஜ், பரணி மூவீஸ் சார்பாக A.குணசேகர், D.சுபாசந்திரபோஸ் ஆகியோர் இணைந்து தயாரிக்கும் படத்திற்கு “ பகடி ஆட்டம் “ என்று பெயரிட்டுள்ளனர். இந்த படத்தில் ரகுமான் சைபர் கிரைம் போலீஸ் உயர் அதிகாரி வேடத்தில் நடிக்கிறார். சமுத்திரகனி இயக்கத்தில் ஜெயம்ரவி நடித்த படத்தில் போலி சான்றிதழ் தயாரிக்கும் அதிரடி வேடத்தில் நடித்த கௌரி நந்தா இந்த படத்தில் கதையின் நாயகி வேடத்தில் நடிக்கிறார். ஒரு பெண் நினைத்தால் எதை வேண்டுமானாலும் சாதிக்க முடியும் என்ற உயரிய கொள்கையுடைய வீர மங்கையாக ஆட்டோ ஓட்டும் வேடத்தில் கௌரி நந்தா நடிக்கிறார். மற்றும் நிழல்கள் ரவி, சுதா, சிசர் மனோகர், கருத்தம்மா ராஜஸ்ரீ, சுப்புராஜ், சாட்டை ரவி, மற்றும் சுரேந்தர், மோனிகா, சஹானா, திவ்யஸ்ரீ, கமலி, அஸ்வதி நாயர...
அதிரடி ஆக்ஷனில் ‘சி3’

அதிரடி ஆக்ஷனில் ‘சி3’

செய்திகள்
அதிரடி ஆக்ஷனில் ‘சி3’ சூர்யா நடிப்பில் ஏற்கனவே சிங்கம், சிங்கம்2 படங்கள் ரிலீஸ் ஆகி வினியோகஸ்தர்கள், திரையரங்கு உரிமையாளர்கள், ரசிகர்கள், தயாரிப்பாளர் என எல்லா தரப்பு மக்களையும் ஏமாற்றாமல் வசூல் தந்து வரவேற்பை பெற்றிருந்தது. ஹரி இயக்கத்தில் மீண்டும் சி3 என சிங்கம் படத்தின் அடுத்த பாகமாக சூர்யா நடிப்பில் படப்பிடிப்பு முடிந்து ரிலீசுக்கு ரெடியாகியுள்ளது. ஜல்லிக்கட்டு வேண்டும் என மாணவர் போராட்டம் காரணமாக ஏற்கனவே அறிவிக்கப்பட்ட பட ரிலீஸ் தள்ளிப்போனது. இப்போது பிப்ரவரி முதல்வாரத்தில் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு அதற்கான பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. முந்தைய சிங்கம், சிங்கம்2 படங்களை மிஞ்சும் வகையில் ஆக்ஷனிலும், அதிரடி காட்சிகளிலும் சி3 பிரமாண்டமாக இருக்கும் என்கிறது தயாரிப்பு தரப்பு. உலகம் முழுவதும் மிக அதிக திரையரங்குளில் ஒரே நாளில் ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருக்கிறார்கள். ஏற்கனவே, ஜல்லி...
ஓப்பனிங் வசூலுக்காக வழக்கத்தை மீறும் தமிழ்திரையுலகம்..!

ஓப்பனிங் வசூலுக்காக வழக்கத்தை மீறும் தமிழ்திரையுலகம்..!

செய்திகள்
ஓப்பனிங் வசூலுக்காக வழக்கத்தை மீறும் தமிழ்திரையுலகம்..! தமிழ்திரையுலகில் படங்களின் ரிலீஸ் என்றால் அது வெள்ளிக்கிழமைகளில்தான் நடக்கும். அதிலும் குறிப்பாக தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகைகள் வந்தால் அதற்கு ஒரு நாள் முன்னதாக படங்கள் ரிலீஸ் ஆவது வழக்கம். ஆனால், தமிழ் சினிமாவில் இப்போதைய நிலையில் கதை நன்றாக இல்லாமல் போனால் ரிலீஸ் ஆன சில தினங்களில் தியேட்டருக்கு கூட்டம் குறைந்து விடுகிறது. இதனால் வசூல் கடுமையாக பாதிக்கப்படுகிறது. மேலும், பிரமாண்ட பேனரில், பெரிய ஹீரோக்கள் படங்களாக இருந்தாலும் ஓப்பனிங் கலெக்ஷன் முடிந்து மறுவாரம் தொடங்கும்போது வசூல் குறைவது தவிர்க்க முடியாததாகி விடுகிறது. இதனால், ஓப்பனிங் வசூலை எடுப்பதற்காக வழக்கமாக புதுப்படங்களை வெள்ளிக்கிழமைகளில் ரிலீஸ் செய்யும் தமிழ் திரையுலகம் கடந்த சில வாரங்களாக ஒரு நாள் முன்னதாகவே அதாவது வியாழக்கிழமையே படங்களை ரிலீஸ் செய்ய ஆரம்பித்திருக்கிறது...
தமிழ் தெரிந்த நாயகி என்பதால் ஒரே டேக்கில் நடிக்க முடிந்தது-  சாயா பட நாயகி காயத்ரி!

தமிழ் தெரிந்த நாயகி என்பதால் ஒரே டேக்கில் நடிக்க முடிந்தது- சாயா பட நாயகி காயத்ரி!

செய்திகள்
தமிழ் தெரிந்த நாயகி என்பதால் ஒரே டேக்கில் நடிக்க முடிந்தது- கலவரத்தைக் கிளப்புகிறார் சாயா பட நாயகி காயத்ரி! பிப்ரவரி 3 ஆம் தேதி வெளியாகிறது சாயா திரைப்படம்... பெரிய படங்கள் வெளிவரும்போது சிறு படங்களுக்கும் தியேட்டர்கள் கிடைக்க வேண்டும்- இயக்குநர் வி எஸ் பழனிவேல் சாயா படத்தின் வெளியீடு இருமுறை தள்ளிப்போய் இப்போது பிப்ரவரி 3 ஆம் தேதி உறுதியாக வெளியாக உள்ளது. கல்வி எல்லோருக்கும் அவசியம் என்ற அடிப்படை இன்று மிகப்பெரிய வியாபாரமாக மாறிவிட்டது. அந்த  வியாபாரத்தை எதிர்த்துப் போராடும் ஒரு பெண் பலியாகிறாள். பின் நடப்பதெல்லாம் ஆத்மாவின் விளையாட்டு. பொதுவாக ஆத்மா சம்பந்தப்பட்ட கதை என்றால் அந்த படம் பயமுறுத்துவது போல்தான் இருக்கும். ஆனால் முதன்முறையாக பெற்றோர்களும், குழந்தைகளும் அவசியம் பார்க்க வேண்டிய படமாக உருவாகியுள்ளது ’சாயா.’ பைரவா படத்துடன் வந்துவிடலாம் என்று முடிவெடுத்துக் களமிறங்கினோம்...