சென்னை புறநகர் பகுதிகளில் ஏ.சி ரெயில்களை இயக்க திட்டம்..!
சென்னை உள்பட 4 நகரங்களில் தானியங்கி கதவுகளுடன் கூடிய ஏ.சி. பெட்டிகள் கொண்ட புறநகர் ரெயில்கள் அறிமுகப்படுத்தப்பட உள்ளன.
மும்பை மேற்கு புறநகர் ரெயில் சேவையின் ஒரு பகுதியாக 12 குளிர்சாதன வசதி பெட்டிகள் கொண்ட ரெயிலை இன்னும் ஒரு சில தினங்களில் இயக்க முடிவாகியுள்ளது.
இதுபற்றி ரெயில்வே அமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் கூறும்பொழுது, உண்மையில், 2019-2020ம் ஆண்டில் இருந்து அனைத்து புதிய உள்ளூர் ரெயில்களும் குளிர்சாதன வசதியுடன் தானியங்கி கதவுகளை கொண்டு இருக்கும். இறுதியாக சென்னை, பெங்களூரு, கொல்கத்தா மற்றும் செகந்திராபாத் ஆகிய நகரங்களிலும் இதனை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளோம் என கூறியுள்ளார்.
இந்த புதிய ஏ.சி. ரெயில்களுடன் பழைய ரெயில்களும் அடுத்தடுத்து இயக்கப்படும். ஆனால் கட்டணம் வேறுபடும்.
மும்பையில் சர்ச்கேட் மற்றும் போரிவிலி பகுதிகளுக்கு இடையே டிசம்பர் 25ந்தேதி அல்லது 2018 ஜனவரி 1ந...









