பலூனில் வந்த கேக்… அஞ்சலி தந்த இன்ப அதிர்ச்சியில் ஷாக் ஆன ஜெய்..!
ஜெய் பிறந்த நாளன்று அஞ்சலி கொடுத்த இன்ப அதிர்ச்சி - அவரின் பிறந்த நாளுக்காக 'பலூன்' இல் பறந்து வந்த கேக்...
ரசிகர்களின் கண்ணோட்டத்தில் இருந்து ஒரு கதையை தேர்வு செய்யும் சிறப்பம்சம் கொண்டவர், கார் பந்தய வீரரும், நடிகருமான ஜெய். இவர் தற்போது அஞ்சலி - ஜனனி முன்னணி கதாபாத்திரங்களில் நடித்து வரும் பலூன் படத்தின் கதாநாயகனாக நடித்து வருகிறார். பலூன் படத்திற்கு பிறகு தன்னுடைய வர்த்தக அந்தஸ்து உயரும் என்ற நம்பிக்கையோடு இருக்கும் ஜெய், தனது பிறந்த நாளை, நேற்று பலூன் படக்குழுவினரோடு கொண்டாடினார்.
சினிஷ் இயக்கத்தில், யுவன்ஷங்கர் ராஜா இசையமைத்து வரும் பலூன் படத்தை, '70 எம் எம்' நிறுவனத்தின் சார்பில் டி.என். அருண் பாலாஜி - கந்தசுவாமி நந்தகுமார் மற்றும் 'பார்மர்ஸ் மாஸ்டர் பிளான்' தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் திலீப் சுப்பராயன் ஆகியோர் இணைந்து தயாரிக்கின்றனர். பலூன் படத்தின் ஒட்டுமொத்த உர...
