மந்திர கவிஞனின் வரிகளுக்கு கத்திரி போட்ட அஸ்மிதா ஆட்டம்..!
பாடல் ஆசிரியரின் அழகிய கவிதை வரிகளுக்கு தன் அட்டகாச ஆட்டத்தால் கத்திரி போட்டு பாடல் வரிகளை தூக்கியடித்திருக்கிறார் மஸ்காரா புகழ் அஸ்மிதா...
அஸ்விகா கிரியேஷன்ஸ் Lion.பிறின்ஸ் தயாரிப்பில், சாம் இம்மானுவேல் இயக்கத்தில், புதுமுகங்கள் சபா, லுப்னா அமீருடன், ஆடுகளம் நரேன், பிளாக் பாண்டி, மதுமிதா உள்பட பலர் நடித்துள்ள படம், "கேக்கிறான் மேய்க்கிறான்".
இந்த படத்தில் பாடல்கள் எழுத அழைக்கப்பட்டார், பாடலாசிரியர் முருகன் மந்திரம். பாடல்களில் ஒரு பாடல் துள்ளல் பாடல். அறிமுக இசையமைப்பாளர், ஆதித்யா மகாதேவன் கொடுத்த அதிரடி துள்ளல் பாடல் மெட்டுக்கு,
"புத்தனுக்கு போதி மரம்
எனக்கு நீ தான் போதை மரம்..."
என்று பாடலின் பல்லவி வரிகளை எழுதி இருந்தார் முருகன் மந்திரம். பாடல் பதிவாகி படக்குழுவினர், தவிரவும் கேட்ட அனைவருக்கும் பிடித்த பாடலானது, புத்தனுக்கு போதி மரம். பாடல் வரிகளுக்காக முருகன் மந்திரம் அனைவராலும்...
