Author: Kodanki
காதலை புது கோணத்தில் சொல்லி வெற்றி பெற்ற ‘தாதா 87’!
கலை சினிமாஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் விஜய் ஸ்ரீ இயக்கத்தில், சாருஹாசன், ஜனகராஜ், சரோஜா, ஆனந்த் பாண்டி ஸ்ரீ பல்லவி நடிப்பில் உருவான "தாதா 87" திரைப்படம் மார்ச் 1 அன்று உலகெங்கும் வெளியானது.
பல ருசிகரமான விமர்சனங்களை பெற்ற இந்த திரைப்படத்தில் கதாநாயகி ஸ்ரீ பல்லவி ஒரு திருநங்கை வேடத்தில் நடித்திருந்தது பலருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது. மேலும் அதுவே இப்படத்தின் பலமாகவும் அமைந்துள்ளது.
இந்திய சினிமா வரலாற்றில் ஆண் பெண் வேடத்திலும், பெண் ஆண் வேடத்திலும் நடித்துள்ளனர், ஆனால் ஒரு பெண் திருநங்கை வேடத்தில் நடித்துள்ளது இதுவே முதல் முறை. ஸ்ரீ பல்லவியின் இந்த துணிச்சலான முடிவுக்கு பலதரப்பிலிருந்தும் பாராட்டுக்கள் வந்த வண்ணம் உள்ளன.
"தாதா 87" படத்தில் காதலை புதிய கோணத்தில் சொல்லபட்ட விதம் அனைவரையும் கவர்ந்தது மட்டுமன்றி பலரின் கைதட்டல்களையும் பெற்றது.
"தணிக்கை குழுவினர் 27 கட்டுகள் வைத்தும் பட...
’குற்றம் 23’ க்கு பிறகு மீண்டும் போலீஸ் அதிகாரியாக நடிக்கும் அருண்விஜய்!
இயக்குநர்கள் கண்ணன் மற்றும் மிலன் ஆகியோரிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த கோபிநாத் நாராயணமூர்த்தி இயக்கும் புதிய படத்தில் மீண்டும் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார்.
அவரது கட்டுக்கோப்பான உடலமைப்பு மற்றும் இரவிலும் கூட அர்ப்பணிப்புடன் உடற்பயிற்சிகளை மேற்கொள்வது தான் இயக்குனர்கள் அவரை அணுக தூண்டுகிறதா? என்று கேட்டால், புன்னகையுடன் அருண் விஜய் கூறுகிறார், "நான் அப்படி நினைக்கவில்லை. ஏனென்றால், 'குற்றம் 23' படத்தில் கூட நான் உடலை காட்டுவதோ, அல்லது அதிரடியான சண்டைக்காட்சிகளிலோ அதிகம் நடிக்கவில்லை.
அது முழுக்க முழுக்க புத்திசாலித்தனம் சம்பந்தப்பட்ட ஒரு படம். அந்த படத்தை எனக்கு வழங்கிய இயக்குனர் அறிவழகனுக்கு நன்றி. இந்த கதையை இயக்குனர் கோபிநாத் என்னிடம் சொன்னபோது, அது பல அற்புதமான திருப்பங்களை கொண்டிருந்தது. மேலும் கதையே மிகவும் சிறப்பாக இருந்தது" என்றார்.
குற்றம் 23க்கும் மற்றும் இந்த படத்துக்கும் ...
புலிகளை தத்தெடுத்த விஜய்சேதுபதி… பராமரிப்புக்கு 5 லட்சம் வழங்கினார்
நடிகர் விஜய்சேதுபதி 2 புலிகளை தத்தெடுத்தார். வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் உள்ள 2 புலிகளை விஜய்சேதுபதி தத்தெடுத்தார்.
இதற்கான ஒப்பந்தம் செய்ய வண்டலூர் உயிரியல் பூங்காவுக்கு வந்த விஜய்சேதுபதி புலிகள் பராமரிப்புக்காக ரூ.5 லட்சம் காசோலை வழங்கினார்.
யாஷிகாவின் திகட்டும் கவர்ச்சியில் 18+ வெப் சீரியஸ்..!
நடிகை யாஷிகா ஆனந்த் 18+ என்ற புதிய வெப் சீரிஸில் நடித்துவருவதாகக் கூறியுள்ளார்.
'இருட்டு அறையில் முரட்டு குத்து' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானவர் நடிகை யாஷிகா ஆனந்த். பின்னர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்குக்கேற்று வலுவான போட்டியாளராகத் திகழ்ந்து, மக்கள் மனத்தை வென்றார்.
இப்போது 18பிளஸ் என்ற வெப் சீரியஸ் ஒன்றில் நடித்து வருகிறார்.
கிளாமர் எல்லை எல்லாம் அதில் மீறி கவர்ச்சியாக நடித்து வருகிறார்.
வெப் சீரியஸ் எதற்கும் சென்சார் சிக்கல் இல்லாததால் இணைய பிரியர்களுக்கு யாஷிகாவின் தூக்கலான கவர்ச்சி கண்களுக்கு விருந்தளிக்கும்....
தேர்தலில் போட்டியிட சாதி மதம் குறிப்பிட வேண்டாம் – கமல் அதிரடி
கமலின் மக்கள் நீதி மய்யம் கட்சியில் வேட்பாளர் தேர்வுக்கான விருப்பமனுத் தாக்கல் நேற்று முன்தினம் தொடங்கியது. அந்த விருப்பமனுக்களில் வேட்பாளர்களின் சாதி குறிப்பிடக் கூடாது என ம.நீ.ம. தெரிவித்துள்ளது.
நாடாளுமன்றத் தேர்தலுக்காக தமிழகத்தில் உள்ள அனைத்துக் கட்சிகளும் வேட்பாளர்களுக்கான விருப்பமனுக்களைத் விநியோகித்து வருகின்றனர். கூட்டணியில் உள்ள கட்சிகள் கூட தங்களுக்கு எந்தத் தொகுதி ஒதுக்கப்படும் என்ற விவரம் தெரியாவிட்டாலும் 40 தொகுதிகளுக்கும் விருப்பமனுக்களை தங்கள் கட்சியினருக்கு விநியோகித்து வருகின்றனர்.
கமலின் மக்கள் நீதி மய்யம் இதில் ஒருபடி முன்னேப் போய் தங்கள் கட்சி உறுப்பினர்கள் அல்லாதவரும் தங்கள் கட்சி சார்பில் போட்டியிட விருப்பமனுத் தாக்கல் செய்யலாம் என அறிவித்தது. இதனால் மக்கள் நீதி மய்யத்தில் விருப்பமனு வாங்கும் அளவுக்குக் கூட கட்சியில் உறுப்பினர்கள் இல்லையா என்று விமர்ச...
Arun Vijay returns as cop for a Crime-Thriller
Arun Vijay returns as cop for a Crime-Thrille
Perseverance, Patience and hard work haven’t alone landed up Arun Vijay’s stardom to a greater graph, but his creative ability to choose scripts that look tailor-made for him and win the attention of universal audiences as well. He has now apparently become the brand ambassador of ‘Thriller’ genres in South Indian industry, where his movies create a curiosity and warm reception in both original and dubbed version. It was literally evident with the Medical Crime-Thriller ‘Kuttram 23’ that fared well in Tamil, dubbed versions in Telugu and Hindi versions (Khatarnak Policewala) too. He is now playing a cop role again in the untitled crime-thriller, directed by Gopinath Narayanamoorthy, a former associate of directors Kannan and Milan. D...
விஜய் சேதுபதியுடன் ஜோடி சேர்ந்த நாயகிகள் நிவேதா பெத்துராஜ், ராக்ஷிகன்னா
விஜயா புரொடக்க்ஷன்ஸ்" தயாரிப்பில் ,"விஜய் சேதுபதி" நடிப்பில் விஜய் சந்தர் இயக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு 4 ஆம் தேதி துவங்குகிறது.
பாதாள பைரவி, மாயாபஜார், மிஸ்ஸியம்மா, எம்.ஜி.ஆர் நடித்த - எங்கவீட்டு பிள்ளை, நம்நாடு, ரஜினிகாந்த் நடித்த உழைப்பாளி, கமலஹாசன் நடித்த நம்மவர் மற்றும் தாமிரபரணி, படிக்காதவன், வேங்கை, வீரம், தளபதி விஜயின் பைரவா உட்பட 60க்கும் மேற்பட்ட வெற்றிப்படங்களை தயாரித்த பழம்பெரும் பட நிறுவனம் பி.நாகிரெட்டியாரின் விஜயா புரொடக்ஷன்ஸ்.
பி.நாகிரெட்டியாரின் நல்லாசியுடன் பி.வெங்கட்ராம ரெட்டி வழங்க, விஜயா புரொடக்ஷன்ஸ் சார்பில் பி.பாரதி ரெட்டிஅவர்கள் தயாரிக்கும் புதிய படத்தை இயக்குனர் விஜய் சந்தர் இயக்குகிறார்.
பி.பாரதி ரெட்டி அவர்களுக்கு இது 6 வது படமாகும். ஸ்கெட்ச் படத்தின் வெற்றிக்கு பிறகு விஜய் சந்தர் மக்கள் செல்வன் விஜய் சேதுபதியை கதாநாயகனாக வைத்...
சந்தானம் நடிக்கும் அக்யூஸ்ட் no1
தில்லுக்கு துட்டு 2 ஹிட் ஆனதை தொடர்ந்து நடிகர் சந்தானம் புதுப்பட அறிவிப்பு வெளியாகி உள்ளது.
ஜான்சன் இயக்கும் இந்த படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசை அமைக்கிறார்.
ராஜ் நாராயணன் தயாரிக்கிறார். காமெடி கலந்த ஆக்ஷன் படமாக இருக்கும் என தெரிகிறது


